24 special

கிளர்க்காக பணியாற்றி அரசியல் விமர்சகராக சவுக்கு சங்கர் உருவெடுத்த காரணம்...! இவருக்கு இத்தனை சொத்துக்களா!!

SAVUKKU SHANKAR
SAVUKKU SHANKAR

தமிழக அரசியலில் மறுக்க முடியாத ஒரு அரசியல் விமர்சகராக வலம் வந்து கொண்டிருந்த சவுக்கு சங்கர் தற்போது பெண் காவலரை அவதூறாக பேசியது குறித்து எழுந்த புகாரின் அடிப்படையில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார் இந்த நிலையில் யார் இந்த சவுக்கு சங்கர் எப்படி அரசியல் விமர்சகர் ஆக உருவெடுத்தார் என்ற தகவலும் அவரிடம் கணக்கில் அடங்காத சொத்துக்கள் உள்ள தகவலும் வெளியாகி உள்ளது. திருச்சி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட சவுக்கு சங்கர் ஆச்சிமுத்து சவுக்கு சங்கர் என்று அழைக்கப்பட்டு வந்துள்ளார் மேலும் இவரது தந்தை தமிழக லஞ்ச ஒழிப்பு துறையின் உதவியாளராக பணியாற்றியவர். அதோடு திடீரென்று அவரது தந்தையின் மறைவால் கருணை அடிப்படையில் ஆட்சிமுத்து சவுக்கு சங்கருக்கு 1991 ஆம் ஆண்டு அரசு பணியில் பணியாற்றுவதற்கான வாய்ப்பு கிடைத்தது. அப்படி பணியாற்றுவதற்காக சேர்ந்த சில வருடங்களிலேயே காவல்துறையை உயர் அதிகாரிகளின் செல்போனை ஒட்டி கேட்டு பொதுவெளியில் அதனை வெளியிட்டு பெரும் பிரச்சனையில் சிக்கிக் கொண்டார் அதுமட்டுமின்றி 2008 ஆம் ஆண்டு திமுக அரசின் அமைச்சராக இருந்து வந்த பூங்கோதையின் ஆடியோவையும் வெளியிட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார் . 


அதோடு சவுக்கு சங்கர் தொலைபேசி ஒட்டு கேட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். இதனால் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளான சவுக்கு சங்கர் கோபக்கனலில் சவுக்கு என்ற ஒரு இணையதளத்தை தொடங்கி அதில் காவல் துறையில் நடைபெற்று வந்த அத்துமீறல்களை எழுதத் தொடங்கினார். அப்பொழுதும் ஒரு பெண் செய்தி வாசிப்பார்கள் தொடர்பாக அவரது தனிப்பட்ட கருத்தை தனது இணையதளத்தில் எழுதி வெளியிட்டதால் நீதிமன்றம் அதிரடியாக அவரது இணையதளத்தை முடக்க உத்தரவிட்டது. இதன் பிறகு சவுக்கு சங்கர் ஒரு அரசியல் விமர்சகராக உருவெடுத்தார். தமிழக அரசியலையும் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் தொடர்ச்சியாக விமர்சித்து அவர்கள் குறித்த கருத்துக்களை தொலைக்காட்சி மற்றும் youtube இல் வீடியோவாக பதிவிட்டு வந்த சவுக்கு சங்கர் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்றதும் முதல்வர் மு க ஸ்டாலின் மற்றும் உதயநிதி என மொத்த திமுகவையும் சரமாரியாக விமர்சித்து வந்தவர்! அதுமட்டுமின்றி 2022 ஆம் ஆண்டு சவுக்கு சங்கர் நீதிபதி தொடர்பாக அவதூறாக பேசியதற்காக கைது செய்யப்பட்டார். மேலும் அந்த கைதில் பல வழக்குகள் அவர் மீது பதியப்பட்டு குண்டர் சட்டத்திலும் சிறையில் அடைக்கப்பட்டார். 

இதனால் நீதிமன்றங்களில் பல சட்ட போராட்டங்களை மேற்கொண்டு வெளியே வந்த சவுக்கு சங்கர் திமுகவிற்கு எதிரான விமர்சனங்களை முன்வைத்து ஒரு youtube சேனலையும் தொடங்கி வந்தா சவுக்கு சங்கர் காவல்துறை பெண் அதிகாரி குறித்து அவதூறாக பேசிய வழக்கில் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்தி சென்னை, சேலம், திருச்சி மற்றும் தேனி என பல ஊர்களில் இருந்தும் சவுக்கு சங்கர் மீது வழக்குகள் பதியப்பட்டு வருகிறது. இப்படி இவர் சிறையில் சிக்கிக்கொண்ட நிலையில் மதுரவாயிலில் வீடு, தியாகராகிய நகரில் 2840 சதுர அடியில் வீடு, ஆர் ஏ புரத்தில் சொகுசு இல்லம், மேத்தா நகரில் 3500 சதுர அடியில் ஒரு வீடு, கொட்டிவாக்கத்தில் 8600 சதுர அடியில் நிலத்தோடு கூடிய ஒரு வீடு என சவுக்கு சங்கர் பல பெயர்களில் பல கோடி மதிப்பில் சொத்துக்களை வாங்கி குவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதற்கு தனது தந்தையின் இறப்பிற்கு பிறகு கருணையால் அரசு பதவி பெற்ற சவுக்கு சங்கர் எப்படி இவ்வளவு சொத்துக்களை குவித்து இருப்பார் என்ற ஒரு கேள்வி சமூக வலைதளம் முழுவதும் எழுப்பப்பட்டு வருகிறது அதே சமயத்தில் சவுக்கு சங்கரின் சொத்து மதிப்புகள் என்று வெளியாகி உள்ள தரவுகளும் அதிகாரப்பூர்வமான உண்மை என்பது குறித்த தகவல்களும் வெளியாகவில்லை! சவுக்கு சிறையில் இருந்து வெளியானால் மட்டுமே உண்மைகள் தெரியவரும் என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள்...