
தமிழ் தெலுங்கு மற்றும் மலையாள திரை உலகில் ஒரு முக்கிய வில்லனாக அறியப்படும் நடிகர் ஆனந்த்ராஜ்! இவர் நடிப்பை தனது கனவாகக் கொண்டு நடிப்பிற்காக கல்லூரியில் சேர்ந்து பயின்று சினிமாவில் அடி எடுத்து வைத்தவர். முதன்முதலாக 1988 ஆம் ஆண்டு ஒருவர் வாழும் ஆலயம் என்ற தமிழ் படத்தில் அறிமுகமாகிய ஆனந்த்ராஜ் புலன் விசாரணை, பாலைவன பறவைகள், ராஜா கைய வச்சா என்ற தொடர்ச்சியாக தமிழ் படங்களில் வில்லனாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் அபாயகரமான வில்ல அவதாரத்தை எடுத்தவர்! தமிழ் மட்டுமின்றி தெலுங்கு மற்றும் மலையாளத்திலும் வில்லனாக அறிமுகமாகி பலரை அச்சத்திற்கு தள்ளியவரும் இவரே ஏனென்றால் அன்றைய காலகட்டத்தில் மிக முக்கிய மற்றும் கணக்கச்சிதமாக வில்லன் கதாபாத்திரம் பொருந்தக்கூடிய நபர்களில் ஆனந்தராஜும் ஒருவராக இருந்துள்ளார் இதன் காரணமாகவே தொடர்ச்சியாக பல படங்கள் மட்டுமல்லாமல் இவர் நடிக்கும் பல படங்களில் வில்லன் கதாபாத்திரமே ஆனந்தராஜிற்கு மிகவும் கனகச்சிதமாக பொருந்தும், அதனை நேர்த்தியாகவும் நடித்து காட்டி வந்துள்ளார்.
மேலும் பல சண்டைக் காட்சிகள் பெண்களை வம்பு இழுக்கும் காட்சிகள் மக்களை கொடுமைப்படுத்தும் சில காட்சிகள் அனைத்திலும் ஆனந்தராஜ் பல திட்டல்களையும் கோபங்களையும் திரைப்பட கதையால் மக்கள் மத்தியில் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போது தனது வெள்ளத்தனம் அனைத்தையும் ஒதுக்கி விட்டு ஒரு காமெடி நடிகனாகவும் குணசத்திர நடிகராகவும் பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். ஒரு காலத்தில் மிகவும் கொடூரமான ஒரு வில்லனாக வளம் வந்த ஆனந்த்ராஜிற்கு ஒரு காதல் கதையும் இருக்கிறது என்று கூறினால் யாராவது நம்புவார்களா!! ஆனால் நம்பித்தான் ஆகவேண்டும் அவருக்கு ஒரு காதல் கதை இருக்கிறது அதுவும் நடிகை மீது ஒரு தலை காதல்!. அதாவது திரைப்படக் கல்லூரியில் ஆனந்த்ராஜ் படித்துக் கொண்டிருந்த காலத்தில் தரமணி பாகத்தில் மத்திய கைலாஷ் பாகத்துக்குபுறம் சாலையில் தெருவெல்லாம் மஞ்சள் பூக்கள் கொட்டி கிடக்கும், அந்தப் பகுதி வழியாகத்தான் நான் தினமும் திரைப்பட கல்லூரிக்கு நடந்து போவேன்! நான் நடந்து போகின்ற அதே நேரத்தில் எங்கள் கல்லூரிக்கு அடுத்து உள்ள ஒரு கேட்டரிங் கல்லூரியில் படித்து வந்த ஒரு அழகான சைலன்டான பெண் அந்த சாலையில் நடந்து கொண்டிருப்பார் என்று பேட்டி ஒன்றை கூறியுள்ளார்.
மேலும், இப்படி இருவரும் ஒரே சாலையில் நடந்து கொண்டிருக்கும் பொழுது அப்பெண் முன்னே செல்ல இவர் பின்னே சைட் அடித்துக் கொண்டே சென்றுள்ளார்! இப்படியே தினம் தோறும் செல்ல ஒரு முறை எங்கள் திரைப்படக் கல்லூரிக்கு நடிகர்களை தேர்ந்தெடுப்பதற்காக இயக்குனர் ஸ்ரீதர் வந்திருந்தால் அப்பொழுது நாங்கள் அனைவருமே மிகவும் ஆர்வமாக பார்த்துக் கொண்டிருந்தோம். கல்லூரிக்கு வருகை தந்த இயக்குனர் ஸ்ரீதர் அனைவரையும் உற்றுப் பார்த்துவிட்டு சிவராஜ்குமார் இடம் ராஜ்குமாரின் பையனா நீங்க என்ற ஒரு கேள்வியும் கேட்டுக்கொண்டு அன்று கல்லூரியில் யாரையும் தேர்ந்தெடுக்காமல் அங்கிருந்து சென்று விட்டார் என்று கூறினார். அதோடு எங்கள் கல்லூரியில் யாரையும் தேர்ந்தெடுக்காமல் சென்ற இயக்குனர் ஸ்ரீதர் அருகில் இருந்த கேட்டரிங் கல்லூரிக்கு சென்று நான் ஒரு தலையாக காதலித்துக் கொண்டு வந்த அப்பெண்ணையே தேர்வு செய்து திரையில் அறிமுகப்படுத்திவிட்டார் அந்த திரைப்படம் தான் தென்றலே என்னை தொடு. அந்த திரைப்படத்தில் அறிமுகமாகிய ஜெயஸ்ரீ தான் நான் காதலித்த பெண்! என்று ஆனந்த்ராஜ் கூறியுள்ளார். அவர் பிரபல நடிகையான ஜெயலட்சுமியின் பேத்தியும் வீணை எஸ் பாலச்சந்திரனின் பேத்தியும் ஆவார். ஜெயஸ்ரீ திரைக்கு வந்த பிறகு திரையில் அறிமுகமான ஆனந்த் ராஜிற்கு ஜெயஶ்ரீயுடன் நடிப்பதற்கான வாய்ப்பை கிடைக்காமல் போயிற்று ஏனென்றால் ஆனந்த்ராஜ் திரையில் அறிமுகம் ஆகும்போது ஜெயஸ்ரீ நடிப்பை விட்டு வெளியேறினார் இருப்பினும் ஆனந்த்ராஜிற்கு ஜெயஸ்ரீ கசினான சுகன்யா உடன் அடிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.