24 special

இளையராஜா "நியமனத்தை" காட்டிலும் ஹெக்டே நியமனத்தை பார்த்து எதிர் தரப்பு கதறுவது ஏன்?

Ilayaraja and modi
Ilayaraja and modi

குடியரசு தலைவர் கலை மற்றும் விளையாட்டு மற்றும் பல்வேறு துறைகளில் சேவை செய்வோரை மாநிலங்களவை நியமனம் உறுப்பினர்களாக நியமனம் செய்வது வழக்கம் அந்த வகையில் தமிழகத்தை சேர்ந்த இசைஞானி இளையராஜாவை மாநிலங்களைவை உறுப்பினராக நியமனம் செய்து சிறப்பு செய்துள்ளது பாஜக அரசு.


இந்த சூழலில் இளையராஜா நியமனத்தை தமிழகத்தில் பலர் வரவேற்றுவரும் சூழலில் சிலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர், ஆனால் இந்த நியமனங்கள் அனைத்தையும் தாண்டி ஹெக்டே நியமனம் தான் பாஜகவிற்கு எதிர் அரசியல் செய்யும் எதிர் தரப்பை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.

இளையராஜா, பிடி உஷா, விஜயேந்திர பிரசாத் இவர்கள் மூவரையும் விட கவனிக்கப்படவேண்டிய ஒருவர் வீரேந்திர ஹெக்டே. முதல் முதலாக ஒரு கோவில் அதிகாரி மேல்சபைக்கு உறுப்பினர் ஆகிறார். 

இதற்கு முன்பு இசைக்கலைஞர்கள், விளையாட்டு வீரர்கள், எழுத்தாளர்கள் உறுப்பினர் ஆனதுண்டு.ஆனால் கோவில் அதிகாரி அதுவும் பரம்பரை தர்மகர்த்தா உறுப்பினர் ஆவது இதுவே முதல் முறை. 

பிர்மண பர்கடே எனும் சமண பந்த் குடும்பத்தின் 21 ஆம் தலைமுறை உறுப்பினரும் தர்மசாலா கோவிலின் தர்மாதிகாரியும் ஆவார்.  ஹெக்டேகள் இன்றைக்கும் தர்மசாலாவிலே மன்றத்திலே அமர்ந்து நீதிவழங்குகிறார்கள். அது ஹோயுலு என அழைக்கப்படுகிறது. 

இந்த நியமனம் மிக முக்கியமான ஒன்று. இந்துக்கள் சேவை செய்வதில்லை, அது இல்லை இது இல்லை என சொல்வது வெறுமனே புரளி என காட்ட இந்த உதாரணம் ஒன்றே போதும் என ராஜசங்கர் குறிப்பிட்டு இருக்கிறார். மொத்தத்தில் குடியரசு தலைவர் வேட்பாளர் தொடங்கி நியமன எம்.பி கள் வரை அதிரடியாக காய் நகர்த்தி எதிர்கட்சிகளை அலற விடுகிறது பாஜக என்பது மட்டும் இதன் மூலம் தெரியவந்துள்ளது.