24 special

அமெரிக்கா கோட்டை விட்டதுபோல் இந்தியாவில் நடக்குமா...? இந்த ராஜாளிகளை மீறி நடக்காது...

narendramodi
narendramodi

ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு அந்த நாட்டின் ஒவ்வொரு தனிநபரும் தனி பங்கும் வகிக்கின்றனர். ஒரு நாட்டின் ஒரு குடும்பம் காணும் வளர்ச்சியானது ஒட்டுமொத்த நாட்டின் வளர்ச்சியையும் பிரதிபலிக்கும். இருந்தாலும் இந்த சமூகத்திற்குள் பல பிரச்சனைகள் பல சண்டைகள் பல வன்முறைகள் ஏமாற்று வேலைகள் மோசடிகள் போன்றவை நடந்து கொண்டு தான் இருக்கிறது அவற்றிலிருந்து நம்மை காப்பதற்காகவும் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகள் குறித்த நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதற்காகவும் காவல்துறை அதிகாரிகள் உள்ளனர்.


எப்படி ஒரு நாட்டின் தனிநபர் மிக முக்கியமானவரோ அதே போன்று தான் அந்த நாட்டை நிர்வகிக்கின்ற பிரதமர் மிக முக்கியமானவர். அவரே நாட்டின் எதிர்கால தேவையையும், நாட்டை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்வதற்கான தொலைநோக்கு பார்வையையும் முன்கூட்டியே கணித்து ஒட்டுமொத்த நாட்டையும் வழிநடத்திச் செல்கிறார். அப்படிப்பட்ட நாட்டின் உயர் பதவியில் உள்ள அதிகாரியாக தற்போது பிரதமர் நரேந்திர மோடி பொறுப்பு வகிக்கிறார். இவர் ஆட்சிப் பொறுப்பை ஏற்ற 2014 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரையில் இந்தியா மாறுபட்ட வேகத்தில் வளர்ச்சியை கண்டு வருகிறது. இந்த பத்து வருடங்களில் இந்தியாவின் வளர்ச்சியை கண்டு உலக நாடுகளே பிரமித்து போய் உள்ளது. 

இதனை மேலும் ஊக்குவிக்கும் வகையில் மக்களும் மீண்டும் ஐந்து ஆண்டுகளுக்கு இந்திய நாட்டின் ஆட்சியை நரேந்திர மோடி அவர்களிடமே கொடுத்துள்ளனர். ஏனென்றால் இந்திய நாட்டில் உள்ள வளங்களை எந்த அளவிற்கு உபயோகப்படுத்துவது, அதன் மூலம் இந்திய நாட்டை எப்படி பெருக்குவது இந்திய இளைஞர்களுக்கு எப்படி வேலைவாய்ப்பை கொடுப்பது என அனைத்தையும் ஆராய்ந்து தற்போது இந்த நடவடிக்கை எடுத்தால் 10 வருடங்களுக்குப் பிறகு இந்த நடவடிக்கையின் பலன் இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும் என்பதையும் கணித்து செயல்பட்டு வருகிறார். அப்படிப்பட்டவரை பாதுகாப்பதற்கு சிறப்பான குழு ஒன்று தேவைதானே! அதற்காகத்தான் பிரதமரை பாதுகாப்பதற்கு என்று சிறப்பு பாதுகாப்பு குழு ஒன்று உள்ளது. இந்த குழுவானது இந்திய அரசாங்கத்தின் ஒரு நிறுவனம்தான்! இவர்களின் முக்கிய மற்றும் முதல் கடமை பிரதமரை பாதுகாப்பது, சில சமயங்களில் அவரின் குடும்பத்தினரையும் பாதுகாப்பது. 

இந்த சிறப்பு பாதுகாப்பு குழு எப்பொழுது இருந்து இயங்குகிறது என்று பார்த்தால் இந்திரா காந்தியின் மறைவிற்கு பிறகு தான் இப்படி ஒரு குழு உருவாக்கப்பட்டது. அதாவது 1981 ஆம் ஆண்டுக்கு முன்பு பிரதமரை பாதுகாப்பது மற்றும் அவரின் இல்லத்தவரை பாதுகாப்பது டெல்லி காவல்துறையின் சிறப்பு பாதுகாப்பு மாவட்டத்தின் பொறுப்பாக இருந்தது. அதாவது ( துணை காவலர் ஆணையர்) டிஜிபியின் அதிகாரத்தில் தான் பிரதமரின் பாதுகாப்பு பணி இருந்தது. ஆனால் 1984 ஆம் ஆண்டு அக்டோபரில் பிரதமர் இந்திரா காந்தி அவரது டெல்லி போலீஸ் பாதுகாப்பு பணியாளர்கள் இருவராலே சுட்டுக் கொல்லப்பட்டதற்கு பிறகு உள்துறை அமைச்சகம் ஒரு குழுவை நிறுவி பிரதமருக்கு எல்லா நேரங்களிலும் நெருக்கமான பாதுகாப்பை வழங்கும் வகையில் ஒரு அமைப்பை உருவாக்கியது.. 

இந்த அமைப்பு காலப்போக்கில் மெழுகேறி தற்போது எஸ்பிஜி என்ற உயர்த்தாக பாதுகாப்பு அமைப்பாக உள்ளது. தற்போது எஸ்பிஜியின் பாதுகாப்பானது பிரதமர் நரேந்திர மோடிக்கு மட்டும் தான் வழங்கப்படுகிறது மற்ற அனைவருக்கும் இஸட், ஒய் பிளஸ், ஒய், எக்ஸ் பிளஸ், எக்ஸ் என அடுத்தடுத்த பாதுகாப்பே வழங்கப்படுகிறது. ஒட்டுமொத்த நாட்டையும் நிர்வகிப்பதால் பிரதமருக்கு பல வகையில் எதிரிகள் இன்றளவும் நிலவி வருகின்றனர் அவர்களிடம் இருந்து பிரதமரை கண்ணும் கருத்துமாக எஸ்பிஜி ஒவ்வொரு நிகழ்ச்சிகளிலும் பாதுகாத்து வருகின்றனர் அவர்களின் நடவடிக்கைகளை நாம் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் பார்த்த தான் வருகிறோம். மேலும் அமெரிக்காவில் இந்த தாக்குதல் நடந்த பிறகு இங்கே பிரதமர் மோடிக்கு மேலும் பாதுகாப்பு, கண்கணிப்பு அதிகமாக கொடுக்கப்பட்டுள்ளதாம்.. இதுமட்டுமில்லாமல் இங்கே அமெரிக்காவை விட SPG கொடுக்கும் பாதுகாப்பு வேற லெவலில் இருக்கும் எனவும் கூறப்படுகிறது...