24 special

ஆபாசத்தின் உச்சிக்கே சென்ற தனியார் தொலைக்காட்சியில் பிரபலமான ரியாலிட்டி ஷோ!!

cook with comali
cook with comali

பிரபல தனியார் தொலைக்காட்சியில் கடந்த 2019 ஆம் ஆண்டிலிருந்து ஒளிபரப்பப்பட்டு வரும் ஒரு ரியாலிட்டி நகைச்சுவை மற்றும் சமையல் கலந்த நிகழ்ச்சி தான் குக் வித் கோமாளி!! இந்த நிகழ்ச்சியில் சமையல் தெரிந்து மற்றும் தெரியாத பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு நகைச்சுவையுடன் சமைத்து மக்களை மகிழ்விப்பதற்காக தொடங்கப்பட்ட நிகழ்ச்சியாக இது நடத்தப்பட்டு வருகிறது. ஆரம்பத்தில் இந்த நிகழ்ச்சி மக்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பு பெற்று வந்தது. மேலும் இந்த நிகழ்ச்சியில் நடக்கும் காமெடிகளை பார்த்து பலரும் தங்கள் மனக் கவலைகளை மறந்து மகிழ்ச்சியாக வாழ்க்கையை வாழ்ந்து வருவதாகவும் தொடர்ந்து பல செய்திகள் பரவி வந்தது.


எனவே இந்த நிகழ்ச்சியை எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக இருந்து வந்தது. இந்த நிலையில் தற்பொழுது இந்த நிகழ்ச்சியில்  சீசன் 5 தொடங்கி நடந்து கொண்டு வருகிறது. தற்போது நடந்து கொண்டிருக்கும் சீசன் ஆரம்பத்தில் இதற்கு முன் இருந்த சீசன்ங்களில் ஜட்ஜாக இருந்த வெங்கட் பட் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி அதன் பிறகு மற்றொரு பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் டாப் குக் டூப் குக் என்ற நிகழ்ச்சியில் ஜாட்ச்சாக இருந்து வருகிறார். இந்த நிகழ்ச்சியும் சமையல் மற்றும் நகைச்சுவை கலந்த ஒரு நிகழ்ச்சியாக வேறு ஒரு கதைக்களத்தை கொண்டு நடத்தப்பட்டு வருகிறது. அது மட்டுமல்லாமல் இதுவரை குக் வித் கோமாளி நிகழ்ச்சியை இயக்கி வந்த இயக்குனர் தற்பொழுது டாப் குக் டுப் குக் நிகழ்ச்சியை இயக்கி வருகிறார். 

அதனால் குக் வித் கோமாளியை புது இயக்கினார் இயக்கி வருகிறார். மேலும் வெங்கட் பட் க்கு பதிலாக தற்பொழுது மாதம் பட்டி ரங்கநாதன் வந்துள்ளார். இது மட்டுமல்லாமல் நிகழ்ச்சியிலும் ஒரு சில மாறுதல்களை கொண்டு வந்தனர். இந்த நிலையில் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வந்த இந்த நிகழ்ச்சியானது சமீப காலமாகவே இழுபறியும், முழுக்க முழுக்க காமெடியில் மட்டுமே போக்கஸ் செய்து சமைப்பதை காண்பிக்க தவறியபடி இருந்து வருகிறது. இதனை தொடர்ந்து மக்களும் போதும்டா உங்களுடைய காமெடி சமைக்கிறதா காட்டுங்கடா!! என்பது போன்ற மனநிலையில் இருந்து வருகின்றனர். மேலும் சமீபத்தில் கூட ஜோயா காமெடி செய்வது போன்று சரத்துடைய வேஷ்டியை தூக்கி உள்ளே எல்லாம் போட்டு இருக்கியா என்பது போன்ற காமெடியை செய்தார். இதற்கு சுற்றி உள்ளவர்களும் நின்று சிரித்தனர். 

இதனைத் தொடர்ந்து இவரின் செயலுக்கு பலரும் எதிர்ப்புகளை காட்டி இதே ஒரு பெண்ணுக்கு நடந்திருந்தால் இப்படி சிரிப்பார்களா என்ற கேள்வியையும் எழுப்பி வந்தனர். இதனைத் தொடர்ந்து தற்பொழுது மேலும் ஒரு சம்பவம் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் நடந்துள்ளது. அதில் ராமர் முதலில் ஆபாசமான ஒரு வார்த்தையை கூறுவது போன்று மற்றொரு வார்த்தையை கூறுகின்றார். இதற்கு பதிலளிக்கும் விதமாக அடுத்த எபிசோடில் ராமரை பார்த்து மற்றொரு ஆபாச வார்த்தையை கூறுவது போன்ற வீடியோ வெளியாகி உள்ளது.

என்னைத் தொடர்ந்து இந்த தொலைக்காட்சி  ஆபாசத்தின் உச்சிக்கே போய்விட்டது என்று கூறி பலரும்கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். முதலில் குடும்பமாக அனைவரும் அமர்ந்து பார்த்து ரசித்த நிகழ்ச்சி தற்பொழுது பெரியவர்கள் கூட பார்க்கலாமா வேண்டாமா என்று நினைக்கும் அளவிற்கு மிகவும் ஆபாசமாக பேச மகிழ்ச்சியாக மாறி வருவதை பார்க்க முடிகிறது. இதனைத் தொடர்ந்து தற்பொழுது இந்த நிகழ்ச்சிக்கு தொடர்ந்து எதிர்ப்புகளும் மக்கள் மத்தியில் அதிகரித்து வருகிறது. இது குறித்த செய்தி தற்பொழுது வெளியாகி வைரல் ஆகி வருகிறது.