24 special

முதல்வர் ஸ்டாலின் அதற்கு பதில் கூறுவாரா..? பிரச்சாரத்தில் மீண்டும் கேள்வி எழுப்பிய தமிழிசை..!

Thamilisai, Stalin
Thamilisai, Stalin

தென் சென்னையில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய அவர் திமுகவின் கோட்டை தகர்க்கப்படும் என்று கூறியுள்ளார். 



தமிழகத்தில் ஒரே கட்டமாக நடைபெறும் நாடாளுமன்ற தேர்தலுக்கு தீவிரமாக பிராகாரம் செய்து வருகின்றனர் அரசியல் தலைவர்கள். திமுக, அதிமுக, பாஜக என்று தீவிர பிரச்சாரத்தில் ஈடுபடும் தலைவர்கள் மத்தியில் பாஜக இந்த முறை வெற்றி பெற்று தமிழகத்தில் இருந்து நாடாளுமன்றத்திற்கு எம்பிக்கள் செல்ல வேண்டும் என்று முடிவெடுத்துள்ளனர். இந்நிலையில், களத்தில் திமுக, பாஜக இடையே தான் போட்டி என கூறப்படுகிறது. 


பாஜக வேட்பாளர்களை ஆதரித்து, பிரதமர் மோடி சென்னையில் சமீபத்தில் ரோடு ஷோ நடத்தினார். அதன் பிறகு களம் பாஜகவுக்கு சதாகமாக களம் திரும்பியுள்ளது. தொடர்ந்து திமுக-வினர் பிரதமர் மோடி தமிழகத்திற்கு வந்தாலும் பாஜக வெற்றி பெறாது என விமர்சனம் செய்து வருகின்றனர். இந்நிலையில், பாஜக வேட்பாளர் தமிழிசை சௌந்தரராஜன் தீவிரமாக தென் சென்னை பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதி பிரச்சாரத்தில் ஈடுபட்ட தமிழிசை வடை சாப்பிட்டு கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த தமிழிசை.

                                                                                       

திமுக தொகுதியாக இருக்கும் தென் சென்னை நிச்சயம் பாஜக வசமாகும். 5 லட்சம் வாக்குகள் என்பது அது அந்த காலத்தோடு முடிந்து விட்டது. தற்போது, திமுகவின் கனவுக்கோட்டை தகர்க்கப்படும். மக்களிடம் எந்த சாதனையை கூறி ஒட்டு கேட்பார்கள். ஏற்கனவே, ஸ்டாலினுக்கு 23 கேள்விகளை அது எதையும் ஸ்டாலின் பதில் கூற முடியாமல் இருந்து வருகிறார். அதனால் வடை சுட்டுகிட்டு இருக்கட்டும் ஆனால், மக்களின் வாக்குகள் எங்களுக்கு தான் என கூறியுள்ளார். டிஜிட்டல் முறையிழும் பிரச்சாரம் செய்து வரும் தமிழிசை, இதுவரை தென் சென்னையில் இருந்து கொண்டு என்ன செய்தார்கள் மீன்டும் போட்டியிட என கேள்வியை எழுப்பியுள்ளார்.

                                                                                               

தென் சென்னை தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து, கமல்ஹாசன், கனிமொழி, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் வாக்கு சேகரித்து வந்தனர். ஆனால், திமுக இந்த தேர்தலில் பல இடங்களில் மக்கள் பாடம் புகட்டுவார்கள் என கூறப்பட்டது. இதில், சென்னை கோட்டை அடிபடும் என கூறப்படுகிறது. தென் சென்னையில் வெற்றிபெற்றதும் நிறைவேற்றப்பட உள்ள திட்டங்கள் குறித்து ஓரிரு நாட்களில் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என கூறியுள்ளார். அந்த அறிக்கை தென் சென்னை வளர்ச்சி அடைந்த தேர்தல் அறிக்கையாக இருக்கும். போக்குவரத்து நெரிசலுக்கு, வெள்ளத்திற்கு, பெண்களின் வேலைவாய்ப்புக்கு, மீனவர்களின் முன்னேற்றத்திற்கு  வழிவகுக்க உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெறலாம் என கூறப்படுகிறது.