24 special

அண்ணாமலையை ஒழிக்க ரகசிய டீல் போட்டாரா எடப்பாடி... லேசாக உறுதியாகும் தகவல்கள்...

Annamalai
Annamalai

2019 மற்றும் 21 ஆகிய ஆண்டுகளின் நடைபெற்ற தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டிருந்த அதிமுக 2026 ஆம் லோக்சபா தேர்தலில் கூட்டணியை முறித்துக் கொண்டது. இதற்கு முக்கிய காரணமாக அதிமுக தலைமை பாஜகவின் மாநில தலைவராக உள்ள அண்ணாமலையை அவரது பொறுப்பில் இருந்து தூக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்ததாகவும், அதற்கு பாஜக தலைமை மறுத்துவிட்ட காரணத்தினாலே இந்த அதிரடி முடிவை அதிமுக எடுத்ததாக கூறப்படுகிறது. இதனை அடுத்து பாஜக தன் தலைமையிலான கூட்டணியில் தேர்தலை எதிர்கொண்டு லோக்சபா தேர்தலில் ஒரு முக்கிய இடத்தை பிடித்துள்ளது பாஜக. ஆனால் அதிமுக பல தொகுதிகளில் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டு சில தொகுதிகளில் டெபாசிட்டையும் இழந்தது. அதிமுகவின் இந்த தோல்வி அக்கட்சியின் இறுதிப் பாதைக்கு அழைத்துச் சென்றுள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். 


முன்னதாக இந்த முறை பாஜகவின் பெரும்பாலான எம்பிகள் வெற்றி பெறும் வாய்ப்பு ஏற்பட்டால் நிச்சயம் திமுகவும் அதிமுகவும் தங்கள் வாக்குகளை சேர்த்துக்கொண்டு பாஜகவை தமிழகத்தில் வெற்றி பெற விடமாட்டார்கள் என்ற ஒரு கருத்தை மாநில தலைவர் அண்ணாமலை முன்வைத்திருந்தார். மேலும் அதிமுகவும் திமுகவும் பங்காளி கட்சிகள் என்ற கருத்தையும் பரவலான பத்திரிகையாளர்கள் சந்திப்பில் திட்டவட்டமாக கூறியிருந்தார். ஆனால் தேர்தல் முடிவுகளில் பெரும்பாலான தொகுதிகளில் பாஜக இரண்டாம் இடத்தை பிடித்தது, திமுக தமிழகத்தில் வெற்றி பெற்றது இருப்பினும் கடந்த தேர்தலை விட இந்த தேர்தலில் திமுகவின் வாக்கு சதவீதம் குறைந்துள்ளது. இந்த நிலையில் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் அறிவிப்புகள் வெளியாகி உள்ளது இந்த தேர்தலில் திமுக தனது வேட்பாளரை அறிவித்துவிட்டது. அதோடு பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் சி அன்புமணி போட்டியிட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் நடக்கவுள்ள விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட போவதில்லை என்றும் இந்த தேர்தலை புறக்கணிப்பதாகவும் அறிவித்துள்ளது. அதிமுகவை போன்றே அதிமுகவின் கூட்டணி கட்சியாக லோக்சபா தேர்தலில் போட்டியிட்ட தேமுதிக விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக தெரிவித்துள்ளது வேறு அரசியல் வட்டாரங்களில் பெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது. ஏனென்றால் ஏற்கனவே தோல்வியை சந்தித்துள்ள அதிமுக இந்த தேர்தலிலும் தோல்வியை சந்திக்கும் அது தொண்டர்களை மேலும் சோர்வடைய செய்து விடும் என்பதற்காகவே இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக பரவலான பேச்சு இருந்து வருகிறது. அதே சமயத்தில் தேர்தலை புறக்கணித்துவிட்டு அதிமுக மறைமுகமாக திமுகவிற்கு ஆதரவு தெரிவிப்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. 

அதற்கு ஏற்றார் போல் தற்பொழுது, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுகவில் உள்ள அடிமட்ட தொண்டர்கள் அனைவரின் ஆதரவும் திமுகவிற்கு தான் என திமுகவின் மூத்த அமைச்சரான பொன்முடி தெரிவித்துள்ளார். இவரைப் போன்றே அமைச்சர் எ வ வேலு, அதிமுக இந்த தேர்தலில் நிற்கவில்லை, அதிமுக நம்முடைய எதிர்கட்சியும் இல்லை, அதிமுக நம்முடைய எதிரியும் இல்லை, பாஜக தான் நம்முடைய எதிர்க்கட்சி! நம்முடைய எதிரி! என பொதுக்கூட்டத்தில் பேசியிருக்கிறார். இதன் மூலம் தேர்தல் பிரச்சாரங்களில், அதிமுகவும் திமுகவும் பங்காளி கட்சிகள் என அண்ணாமலை முன்வைத்த கருத்துக்கள் தற்போது உண்மையாகி வருகிறதாக தெரிகிறது. அதுமட்டுமின்றி அண்ணாமலையின் விஸ்வரூபத்தை ஒடுக்க எடப்பாடி பழனிசாமி திமுகவுடன் கைகோர்த்து விட்டாரா எனவும் அரசியல் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகிறது.