சினிமா துறையில் ஒரு இயக்குனர் அல்லது நடிகர், நடிகை, இசையமைப்பாளர் இருக்கும் திரைப்படங்கள் தொடர் வெற்றியை கண்டு வருகிறது என்றால் அப்படிப்பட்ட இயக்குனரோடு நடிகரோடும் நடிகையோடோ இசையமைப்பாளரோடு ஒரு படத்திலாவது இணைந்திட வேண்டும் என்பது மற்ற திரை பிரபலங்களின் முக்கிய கனவாக இருக்கும். அப்படிப்பட்ட வரிசையில் இருக்கும் ஒரு இயக்குனர் தான் ராஜமௌலி. இவர் தெலுங்கு திரைப்படத்தின் இயக்குனர் ஆவார் இருப்பினும் தமிழிலும் இவரது செல்வாக்கு இவரின் படங்கள் மூலம் அதிகரித்துள்ளது. ஏனென்றால் பெரும்பாலான தெலுங்கு திரைப்படங்கள் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டு திரையிடப்படும் அப்படி வெளியிடப்பட்டு தமிழிலும் ஹிட்தடித்த பல படங்களில் ராஜமௌலியின் படங்களே அதிகம். அதாவது ஸ்டூடண்ட் நம்பர் ஒன் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான ராஜமௌலி, இப்படத்தில் ஜூனியர் என்டிஆர் ஐ இயக்கி இருந்தார்.
இந்த படமே இயக்குனராகவும் நடிகராகவும் ராஜமவுலிக்கும் ஜூனியர் என்டிஆருக்கும் பெரும் வெற்றியை கொடுத்தது.அதற்குப் பிறகு, ராஜமவுலி இயக்கிய சிம்ஹாட்ரி, சத்ரபதி, விக்ரமற்குடு, மகதீரா, நான் ஈ,.பாகுபலி 1 மற்றும் 2, ஆர் ஆர் ஆர் ஆகிய திரைப்படங்கள் தெலுங்கு மட்டுமின்றி தமிழ் திரையுலகிலும் மாஸ் ஹிட் அடித்த படங்களாகும். அதாவது,. ஸ்டுடென்ட் நம்பர் 1 திரைப்படம் தமிழிலும் மொழிபெயர்ப்புக்கப்பட்டு வெளியானது. இதனை அடுத்து சிம்மாதிரி என்ற திரைப்படம் கஜேந்திரா என்று தமிழில் மீண்டும் எடுக்கப்பட்டது. அதோடு விக்ரமற்குடு என்ற திரைப்படமே தமிழில் சிறுத்தை என்று எடுக்கப்பட்ட படம். மேலும் ராஜமௌலி எடுத்த மகதீரா திரைப்படம் தான் தமிழில் மாவீரன் என்று வெளியிடப்பட்டது. அதுமட்டுமின்றி ராஜமவுலி தமிழ் மற்றும் தெலுங்கு இரு மொழிகளிலும் நேரடியாக இயக்கிய நான் ஈ திரைப்படமும் தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளிலும் சூப்பர் டூப்பர் ஆக ஓடியது!!. இத வரிசையிலேயே சமீபத்தில் பாகுபலி ஒன்று மற்றும் இரண்டு வகை திரைப்படங்களிலும் தமிழ் தெலுங்கு திரை உலகிலும் வெற்றியை கண்டு ஆர் ஆர் ஆர் என்ற திரைப்படத்தின் மூலம் இரு முன்னணி நடிகர்களை ஒரே படத்தில் இணைத்து தேசிய அளவில் பல விருதுகளை குவித்துள்ளார்.
இதனை அடுத்து தற்பொழுது கல்கி திரைப்படத்தின் படப்பிடிப்புகளிலும் படு பிஸியாக உள்ளார். இந்த நிலையில் இப்படிப்பட்ட ஒரு இயக்குனர் ஒரு முன்னணி நடிகையை தன் படத்திற்கு தானாக அழைத்தும் அந்த நடிகை அவரது படத்தை மறுத்துள்ள தகவல் வெளியாகி சினிமா வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தொடர் வெற்றியை கொடுத்து வந்த ராஜமௌலியின் திரைப்படத்தில் ஒருமுறையாவது நடிக்க மாட்டோமா என பல நடிகைகள் காத்துக் கொண்டிருந்த சமயத்தில் தெலுங்கில் முக்கிய நடிகையாக வலம் வந்து கொண்டிருந்த த்ரிஷாவிடம் ராஜமௌலி ஒரு படத்திற்கான கதையை கூறிய பொழுது அந்தப் படத்தில் நான் நடிக்கப் போவது இல்லை என்று த்ரிஷா நேருக்கு நேராக மறுத்துள்ளர். அதாவது கடந்த 2010 ஆம் ஆண்டு காமெடி நடிகர் சுனிலை கதாநாயகனாக வைத்து மரியதா ராமண்ணா என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார் ராஜமௌலி.
அந்த படத்தில் அப்போது தெலுங்கு திரையுலகில் படு பிஸியான ஹீரோயினாக இருந்து வந்த திரிஷாவை நடிக்க வைக்க முடிவு செய்து அவரிடம் அணுகிய பொழுது இந்த நடிகர் நடித்தால் என்னால் நடிக்க முடியாது என்று திரிஷா ராஜமௌலியின் படத்தை நிராகரித்து விட்டதாக கூறப்படுகிறது. ஏனென்றால் அன்றைய காலத்தில் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் ஜோடி போட்டு வந்துள்ளார் த்ரிஷா அதனால் ஒரு காமெடி நடிகருடன் எப்படி நடிப்பது என இந்த படத்திற்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் ராஜமௌலி காமெடி நடிகர் சுனிலை வைத்து அப்படத்தை எடுத்து முடித்து மாபெரும் வெற்றியும் கண்டார். இப்படி முன்னணி இயக்குனரின் வாய்ப்பை தவறவிட்ட திரிசா குறித்த செய்திகள் இணையத்தில் வைரலாக பரவுகிறது.