புதுதில்லி : சீனாவின் மூன்றாவது பெரிய விமானம்தாங்கி போர்க்கப்பலாக கருதப்படும் புஜ்ஜியான் கடந்தமாதம் ஜியாங்னான் கப்பல்கட்டும் தளத்தில் இருந்து ஏவப்பட்டது. அதற்கடுத்த சிலநாட்களிலேயே ஜூன் 25 அன்று இந்தியாவின் முதல் விமானம்தாங்கி போர்க்கப்பலான ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா ஐ.ன்.எஸ் கார்வாரில் இருந்து புறப்பட்டது.
18 மாதங்களுக்கு மேலாக மறுசீரமைப்பு பணிகளில் இருந்த இந்த கப்பல் பலகட்ட சோதனைகளுக்கு பின்னர் கடலில் இறங்கியது. இந்த கப்பலில் மிக் 29கே போர்விமானங்கள் 30 வரை சேமித்து வைக்கப்படலாம் என கருதப்படுகிறது. அதேநேரத்தில் சீனாவின் புஜ்ஜியான் போர்க்கப்பல் இந்தோ பசிபிக் பகுதியில் அசுரனாக வலம்வரும் அமெரிக்காவின் ராணுவபலத்தை சீன ராணுவம் கைப்பற்ற உதவும் என தெரிவிக்கப்படுகிறது.
மேலும் யுஎஸ்.எஸ் ஜெரால்டு ஆர் போர்டு சூப்பர் விமானம் தாங்கி போர்க்கப்பலுக்கு போட்டியாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.
இந்த புஜ்ஜியான் அதிநவீன மின்காந்த அலைகளை கொண்டதாக கூறப்பட்டு வருகிபிறது. விமானங்களை ஏவும் அமைப்பான EMALS மற்றும் மேம்படுத்தப்பட்ட அரெஸ்ட் கியர் AAG தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டுள்ளதாக நம்பப்படுகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட அமைப்புகள் யுஎஸ்.எஸ் ஜெரால்டு ஆர் போர்டு சூப்பர் விமானம் தாங்கி போர்க்கப்பலில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த கப்பல்கள் கேரியரில் விமானங்களை விரைவாக தரையிறக்கவும் வேகமாக மேலெழும்பவும் ஒத்துழைக்கிறது. யுஎஸ்.எஸ் ஜெரால்டு ஆர் போர்டு சூப்பர் விமானம் தாங்கி போர்க்கப்பலில் நீராவி சக்தியை பயன்படுத்த அமெரிக்கா போராடி வரும்வேளையில் எப்படி சேனாவின் புஜ்ஜியான் போர்க்கப்பலில் நீராவி சக்தியை பயன்படுத்துகிறார்கள் என அமெரிக்காவே குழம்பிப்போய் நிற்கிறது.
இந்தியா 1961 முதல் விமானம்தாங்கி போர்க்கப்பலை இயக்கிவந்தாலும் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட முதல் கப்பல் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா என்பது குறிப்பிடத்தக்கது. சீனா தனது முதல் விமானம் தாங்கி போர்க்கப்பலை 2012ல் தான் இயக்க ஆரம்பித்தது குறிப்பிடத்தக்கது. இதில் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவெனில் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா இந்திய விமானம் தாங்கி போர்க்கப்பலும் நீராவி சக்தியால் இயங்கக்கூடியது.
வருகிற ஆகஸ்ட் 15 அன்று கொச்சி துறைமுகத்தில் நடைபெற இருக்கும் 75ஆவது சுதந்திரதின நிகழ்வில் பாரத பிரதமர் மோடி கொடியசைக்க இன்னொரு அசுரன் கடலிறங்க உள்ளான். அவனது பெயர் ஐ.என்.எஸ்.விக்ராந்த். இந்த விமானந்தாங்கி போர் கப்பலில் இன்னும் பல தொழில்நுட்பங்கள் இணைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சீனாவின் புஜ்ஜியானுக்கு ஜப்பானும் அமெரிக்காவும் பயப்படும் நேரத்தில் இந்திய போர்க்கப்பல்கள் தனது கடற்பாதையில் சிம்மநடை போடும் என கடற்படை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.