
தமிழகத்தில் இதற்கு முன்னர் அதிமுக ஆட்சி காலத்தில் தற்போதைய மின்சார மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சர் செந்தில்பாலாஜி போக்குவரத்துதுறை அமைச்சராக இருந்தார். அப்பொழுது போக்குவரத்து துறையில் பணி வாங்கித் தருவதாக கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்ததற்கு தற்போது விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கிற வேலையில், டாஸ்மாக்கில் நடந்த ஊழல்களாலும் மேலும் டாஸ்மார்க் மதுபானங்களை அருந்தி ஏற்பட்ட உயிரிழப்புகளாலும் செந்தில் பாலாஜிக்கு எதிராக பல தரப்பிடமிருந்து எழுந்ததன் காரணமாக கடந்த மே 26 ஆம் தேதி அன்று அதிகாலை முதலிலிருந்து வருமானவரித்துறையினர் செந்தில் பாலாஜிக்கு சொந்தமான 40 இடங்களில் ஈடுபட்டது தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.
முதல் நாளில் 40 இடங்கள் என ஆரம்பித்த ரெய்டு பிறகு கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து 200க்கும் மேற்பட்ட இடங்கள் வரை சென்றது. தமிழ்நாடு தவிர பிற மாவட்டங்களிலும் நடைபெற்று வருகின்ற இந்த ரெய்டு தற்போது செந்தில் பாலாஜி சொந்த ஊரிலும் நடைபெற்றுள்ளது.
சென்னை, கரூர், கோவை போன்ற மாவட்டங்கள் தமிழ்நாட்டிற்குள் நடைபெற்ற சோதனையில் கோவையில் கிட்டத்தட்ட 42 இடங்களில் சோதனைகளை மேற்கொண்டது வருமான வரித்துறை, இதில் செந்தில் பாலாஜி சொந்த ஊரான மணிமங்கலம் பஞ்சாயத்து 26 இடங்களில் சோதனைகளை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னதாக அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரரான அசோக் வீட்டு ஐடி ரெய்டு நடத்தப்பட்டது அங்கு பல்வேறு ஆவணங்கள் அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
அசோக் வீட்டு சோதனையில் ஈடுபட முற்பட்ட அதிகாரிகளை செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் தாக்கியதால் தற்போது அவர்கள் மீது சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றும் பதியப்பட்டுள்ளது. இதில் அதிகாரிகளை தாக்கியது ரெய்டு வருவது முன்கூட்டியே அறிந்து அவர்களை வீட்டிற்குள் நுழைவிடக் கூடாது என்பதற்காக திட்டம் போட்டு நடத்தப்பட்ட செயல் என்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஆடியோ பதிவு ஒன்றே வருமானவரித்துறையினர் காவல் துறையிடம் ஒப்படைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இப்படி வருமான வரித்துறை சோதனையே செந்தில் பாலாஜிக்கு பெரும் சோதனையாக நடைபெற்றுக் கொண்டிருக்கிற வேலையில் மற்றுமொரு திடுக்கிடும் தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ரெய்டு நடைபெறலாம் என்று முதல்வரே தங்களது கட்சியினர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளதாக தற்போது கூறப்படுகிறது.
அதாவது கடந்த மே இரண்டாம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது அதில் அனைத்து அமைச்சர்களும் கலந்து இருக்கிற வேலையில் நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் வரவுள்ளது என்றும், அனைவரும் எச்சரிக்கையாக இருங்கள் ரெய்டு நடத்தப்படலாம், ஜாக்கிரதையாக இருங்கள் என்று கூறியுள்ளார் முதல்வர். அதிலும் அமைச்சர் செந்தில் பாலாஜி மற்றும் பொன்முடி போன்றவர்களுக்கு சிறப்பான எச்சரிக்கை என்ற முறையில் தனியாக அழைத்து இவர்கள் இரண்டு பேரையும் அதிகமாக கவனமாக இருங்கள் என்று முதல்வர் கூறியுள்ளதாக பல தகவல்கள் தெரிவிக்கின்றன.
முதல்வர் ஸ்டாலின் எச்சரித்ததன் காரணமாகவே அமைச்சர் செந்தில் பாலாஜி தனக்கு நடக்கவிருக்கும் ரெய்டுக்கு முன்னதாகவே ஏற்பாடுகளை செய்து தயாராக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதனாலேயே தன்னிடம் இருந்த அனைத்து ஆவணங்களை அவரது உறவினர், நண்பர் என பலரிடம் பதிக்க வைத்துள்ளது வருமானவரித்துறைக்கு தெரிந்ததன் காரணமாகவே அவர்கள் செந்தில் பாலாஜியின் வீட்டை விட்டுவிட்டு அவருக்கு நெருக்கமான மற்ற அனைவரின் வீடுகளிலும் தற்போது சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் காரணமாகவே நான்கு நாளாகியும் செந்தில் பாலாஜியின் தொடர்புடைய இடங்களில் வருமானவரித்துறை அதிகாரிகள் சோதனைகளை நடத்தி வருகின்றனர். அதாவது வருமானவரித்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் கொடுத்த முன்னெச்சரிக்கை அல்லது அவர் தனக்கு நெருக்கமான இடங்களில் பல ஆவணங்களை பதுக்கி உள்ள தகவல் தெரிந்ததன் காரணமாகவே இந்த ரெய்டு தொடர்கிறது என்று பல சந்தேகங்களும் எழுந்துள்ளது என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.