Tamilnadu

H ராஜாவை கவிழ்த்துவிட்டு அண்ணாமலை பக்கம் தாவிய பெங்களூரு கருப்பு ஆடு இனியாவது உஷார் ஆவார்களா?

H raja annamalai
H raja annamalai

தமிழக அரசியல் களம்  நீட் ரத்து ஏமாற்றம், சட்டசபை கூட்டம், கொரோனா தடுப்பூசி, மின்தடை என செய்திகள் மக்களின் கவனம் சென்றுகொண்டு இருக்க, தற்போது தென் மாவட்டமான சிவகங்கையில் பாஜக கட்சியினுள் நடைபெறும் சம்பவங்கள் பாஜகவினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.


பாஜகவின் காரைக்குடி நகரத் தலைவர் சந்திரன், சாக்கோட்டை தெற்கு ஒன்றியத் தலைவர் பாலா, கண்ணங்குடி ஒன்றிய தலைவர் பிரபு  உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் மாவட்டத் தலைவர் செல்வராஜிடம் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளனர். மாவட்ட தலைவர் செல்வராஜும் ராஜினாமா கடிதத்தை மாநில தலைவருக்கு அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் மாவட்டத்தில் ஏற்பட்டுள்ள குழப்பத்திற்கு பெங்களூரில் இருந்து வந்து இந்த தேர்தலில் H ராஜாவிற்கு வேலை செய்த நபர் ஒருவரே அனைத்திற்கும் காரணம் என கூறப்படுகிறது, தன்னை தொழில் அதிபராக காட்டி கொண்ட நபர், முதலில் H.ராஜா உறவினரை சந்தித்து அறிமுகம் ஆகியுள்ளார், அதன் பிறகு கட்சியில் உள்ள முக்கிய தலைவர்கள் பலரையும் சந்தித்து பேசியுள்ளார்.

இறுதியில் பாஜகவினர் தேர்தல் வெற்றிக்கு பாடுபட இருப்பதாகவும், கூறி தனது பணத்தையும் செலவு செய்வதாக காட்டி கொண்டுள்ளார், மேலும் மாநில பாஜக துணை தலைவர் அண்ணாமலையின் உறவினரை சென்னையில் நட்சத்திர விடுதி ஒன்றில் வைத்து சந்தித்து அறிமுகம் ஆகியுள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நிறுத்தப்பட்ட வேட்பாளரின் உறவினர்தான் அந்த பெங்களூரு மர்ம ஆசாமியாம்.

மாங்குடிக்கு சிதம்பரம் மூலம் சீட் நிச்சயம் கிடைக்கும் என தேர்தலுக்கு 6 மாதம் முன்பே கணித்தவர், தேர்தல் நேரத்தில் பாஜக வேட்பாளரின் H ராஜாவின் வியூகத்தை அறிய முன்பே அனுப்பி வைக்கப்பட்டவர் எனவும், அதே போல் தனக்கு கொடுக்கப்பட்ட வேலையை கச்சிதமாக செய்து முடித்துள்ளராம், H ராஜா தரப்பிடம் பாஜக நிர்வாகிகள் முறையாக தேர்தல் பணியாற்றவில்லை என கூறி நம்பிக்கை இழக்க செய்ததுடன், அதே நேரத்தில் நிர்வாகிகள் பக்கம் சென்று H ராஜா மற்றும் அவரது உறவினர் குறித்து தவறாக பேசி குழப்பத்தை உண்டு செய்துள்ளார்.

தற்போது இந்த மர்ம நபர் மூலம் சிவகங்கை மாவட்ட பாஜகவே கூண்டோடு காலியாகியுள்ளது, மேலும் H ராஜாவை தேர்தலில் வீழ்த்த திட்டமிட்டு களம் இறக்கப்பட்ட மர்ம நபர் இப்போது பாஜக மாநில துணை தலைவர் அண்ணாமலை பக்கம் தாவியுள்ளாராம் இனியாவது கொள்கை பிடிப்பு இல்லாத நபர்களை அருகில் வைத்து கொள்வதை பாஜக தலைவர்கள் மாற்றி கொள்வார்களா? இல்லை மீண்டும் இது போன்று வேறு ஏதேனும் பெரிய சறுக்கலை சந்திக்க போகிறார்களா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்கவேண்டும். இந்த கருப்பு ஆடு 5-6 மாதங்களுக்கு முன்புதான் 500 பேருடன் H.ராஜா தலைமையில் பாஜகவில் இணைந்தது என்று கூறப்படுகிறது.