தமிழக பாஜக தலைவர் L.முருகன் இன்று சென்னையில் உள்ள பாஜக மாநில தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய பல்வேறு கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார், குறிப்பாக மாமல்லபுரத்தில் பாஜக மேலிட பொறுப்பாளர் CT ரவி தலைமையில் நடைபெற்ற கூட்டம் குறித்தும்,
தமிழக முதல்வர் ஸ்டாலின் சட்டப்பேரவையில் ஒன்றிய அரசு என மத்திய அரசை குறிப்பிடுவது தவறில்லை என பேசியது உள்ளிட்ட செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதில் அளித்தார், பாஜக கூட்டம் குறித்து தினமலர் நாளிதழ் வெளியிட்ட செய்தி தவறு எனவும் சட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை நடத்தி வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன் ஸ்டாலின் மத்திய அரசை ஒன்றிய அரசு என குறிப்பிடுவது சட்டத்தில் இடம்பெறாத வார்த்தை, அரசியல் அமைப்பு சட்டத்தில் ஒன்றியம் என்று எங்குமே அம்பேத்கர் குறிப்பிடவில்லை, ஸ்டாலின் ஒன்றிய அரசு என அறிவிப்பது அம்பேத்கரை அவமதிக்கும் செயல் எனவும் குறிப்பிட்டார்.
தொடர்ந்து செய்தியாளர்கள் அதே கேள்வியை எழுப்ப, உதாரணத்திற்கு தமிழக முதல்வரை ஊராட்சி முதல்வர் என அழைக்கலாமா எனவும் பதில் கேள்வி எழுப்பினார், ஒன்றியம் என்றால் இனி ஊராட்சி தலைவர் என ஸ்டாலினை அழைப்போம் என பாஜகவினர் ஏற்கனவே இணையத்தில் குறிப்பிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
தமிழக பாஜகவில் ஓரிரு வாரங்களில் அதிரடி மாற்றங்கள் அரங்கேற இருப்பதாகவும், ஒழுங்காக தேர்தல் பணியாற்றமல் இருக்கும் பாஜக மாவட்ட தலைவர்கள் உட்பட பல நிர்வாகிகள் பொறுப்பில் இருந்து நீக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.