Cinema

விஜய் எதிர்காலத்திற்கு தந்தை செய்த செயல்.....விஜய்க்கு வந்த போன் காலால் பரபரப்பு!

SV Chandrasekar, Vijay
SV Chandrasekar, Vijay

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் தளபதி விஜய் இவருக்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். இவர் தற்போது அரசியலில் கால் வைக்க பலவேறு யுத்தங்களை செய்து வருகிறார். இந்நிலையில் அவரது தந்தை sv சந்திரசேகர் தனது மகன் விஜய்யின் எதிர்காலத்தை நினைத்து இப்போது செய்யும் செயலால் விஜய்க்கு பின்னடைவு ஏற்படுத்தி வருவதாக கூறப்படுகிறது.


நடிகர் விஜய்யின் தந்தை sv சந்திரசேகர்க்கும் விஜய்க்கும் கருத்து வேறுபாடு காரணமாக தனி தனியாக வாழ்ந்து வந்தனர். sv சந்திரசேகர் இந்துவாக பிறந்து பின்னர் கிருஸ்த்துவராக மதம் மாறினார். இதன் காரணமாகவே விஜய்க்கு ஜோசப் விஜய் என்று பெயர் வைத்து வளர்த்து வந்தார் தந்தை. ஆனால் விஜய்யின் அம்மாவோ ஒரு ஹிந்து இப்படி விஜய்யின் மனைவியும் இலங்கை பிள்ளைமார் சமூகத்தை சேர்ந்த தமிழ் பெண்ணை மனம் முடித்தார் இது எல்லாம் நமக்கு அறிந்ததே. இப்படி இருக்க விஜய் ஒரு கட்டத்தில் மதத்தை ஓரம் தள்ளிவிட்டு அனைத்தும் ஒன்றுதான் என்பது போல் தனது தோற்றத்தை வெளிப்படுத்தினார்.  ஆனால் விஜயின் குடும்பத்தில் பல சிக்கல் ஏற்பட்டு விஜய் அவரது மனைவி ஒருபக்கமும் விஜய் தந்தை தாய் என அவர்கள் மாரு பக்கம் வாழ்ந்து வந்தனர். இப்போது அனைவரும் ஒன்று சேர்ந்து ஒரே குடும்பமாக வாழ்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், சந்திரசேகர் இந்துக்களின் கொள்கையை பின்பற்றாமல் கிருத்துவ கொள்கையை பின்பற்றுவதாகவும் இந்துக்களின் வழிபாட்டை வணங்கி வருகிறார். இதற்கிடையில் நடிகர் விஜய்க்கு இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளில் தான் ரசிகர்கள் பட்டாளம் ஏராளம். அதாவது விஜய் சினிமா துறைக்கு தேவையான முதலீடு எல்லாம் வெளிநாடுகளில் இருந்து வருகிறதாம். இந்நிலையில் விஜய் அரசியலுக்கு வருவதால் அனைத்து தரப்பு மக்களையும் கவர வேண்டும் என்று சந்திரசேகர் இந்து தெய்வங்களை வழிபட்டு கோவில்களில் வாரந்தோறும் அன்னதானம் செய்து வருகிறார். அவரது மனைவி ஷோபா சந்திரசேகரும் ஆரம்பத்தில் இருந்து இந்துவாக இருந்த அவரும் இது போன்று இந்துக்கள் பண்டிகைகளில் கலந்து கொண்டு விஜய்க்கு மறைமுகமாக அரசியல் செய்துவருவதாக பேச்சு எழுந்துள்ளது.

நடிகர் விஜய் கிருத்துவராக இருப்பதாலேயே வெளிநாடுகளில் விஜய்க்கு ஆதரவு கொடுத்தனர், இப்போது அரசியலில் குதிக்க இருப்பதால் மதத்தை எல்லாம் ஓரம் தள்ளிவிட்டு அனைத்து மக்களிடமும் நல்ல பெயரை வாங்க பெற்றோர்கள் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்களாம். தற்போது நடந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜயின் தந்தை "நான் பிறந்தது கிறிஸ்தவ குடும்பம். ஆனால் மனிதனாக வாழ்ந்து கொண்டிருகிறேன். மனிதம் ஒன்று தான் மதம். மதம் நல்ல விஷயங்களை சொல்லி கொடுத்திருக்கிறது. கிறிஸ்தவருக்கு பைபிள், இந்துக்களுக்கு கீதை, முஸ்லீம்களுக்கு குரான். அதில் இருக்கிற நல்ல விஷயங்களை கற்றுக்கொள்ளுங்கள்.

இயேசு, நபிகள் நாயகம் எல்லாம் அவதாரங்கள். கடவுளின் செய்தியைக் கொண்டு வந்த இறை தூதர்கள். நான் ஏசுவை தொடரவில்லை. அவர் சொன்ன மெசேஜை பின்பற்றுகிறேன். மெசெஞ்சரில் சொல்வதை அல்ல. இயேசு ஒரு மெசெஞ்சர். அவர் சொன்ன மெசேஜை பின்பற்றுகிறேன். அவரை அல்ல" எனத் தெரிவித்தார். இதற்கு விஜய் மறைமுகமாக ஒத்துழைப்பு வழங்குவதாக கூறப்படுகிறது. இதனால் வெளிநாடுகளில் உள்ள விஜய் ரசிகர்கள் மற்றும் விஜய்க்கு உதவி செய்பவர்கள் என அனைவரும் விஜயை புறக்கணிக்க தொடங்கிவிட்டார்களாம். இதனால் விஜயின் எதிர்காலத்தை நினைவில் கொண்டு தந்தை பேசுவதாலும் வெளிநாடுகளில் இருப்பவர்கள் விஜய்க்கு போன் பண்ணி எங்களிடம் அந்த உதவியும் கேட்க வேண்டாம் என்று பேசியதாக சினிமா வட்டாரத்தில் பேசப்படுகிறது. இதனால் விஜய் வருத்தத்தில் உள்ளாராம்