
நகைச்சுவை நடிகர் வடிவேலு தமிழ் மட்டுமின்றி உலகம் முழுவதும் பெரும்பான்மை ரசிகர்களை கொண்டவர். மொழி புரிதல் இன்றி பலரும் வடிவேலுவின் நகைச்சுவையை கண்டு சிரிக்காமல் எந்த மக்களும் இருக்க மாட்டார்கள் என்றே சொல்லலாம். இவரின் காதாபாத்திரம் ஒரு படத்தில் இருந்தால் அந்த படம் நிச்சயம் தோல்வியை சந்திக்காமல் வெற்றி பெரும் என்பது சினிமா வட்டாரத்தில் பேசப்பட்டது. தற்போது வடிவேலுவின் உண்மை முகத்தை புட்டு புட்டு வைத்துள்ளார் நடிகர் சிங்கமுத்து.
தமிழ் சினிமாவில் இயக்குனர் ராஜ்கிரண் மூலம் சினிமா திரைக்கு வந்தவர் வடிவேல், படிப்படியாக உயர்ந்து விஜயகாந்த் அவரை மேலே தூக்கிவிட்டார். தனக்குடைய ஒரு நடிப்பு திறனை கற்றுக்கொண்டு அதன் மூலம் ரசிகர்களை சிரிக்க வைப்பார். அவரது நகைச்சுவை வசனத்தை இன்று பார்த்தாலும் சிரிப்பை ஏற்படுத்தும் என்பதில் மாற்றமில்லை. ஆனால், ஒரு கட்டத்தில் வடிவேலு நடிக்க தடை போடப்பட்டுள்ளது காரணமா இனி நடித்தால் ஹீரோவாக தான் நடிப்பேன் என்ற முடிவுக்கு இயக்குனர்கள் படத்தை எடுக்க முயன்றபோது அவர் கால்ஷீட் கொடுக்காததால் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பு நிறுவனம் நஷ்டத்தை சந்தித்தது. இதனால் வடிவேலுக்கு நடிகர் சங்கம் 10 ஆண்டுகளுக்கு தடை போடப்பட்டது. அதன் பிறகு நடிகர் சங்கம் அவரிடம் பேசி சுமுக தேர்வுக்கு வந்தது.
தடை நீக்கியபோது அவர் தொடர்ந்து படங்களில் நடித்து வந்தாலும் அந்த படம் பெருசாக பேசப்படவில்லை, காரணம் அவருக்கு நடிப்பு செட் ஆகவில்லை என்ற அளவுக்கு பேச்சுக்கள் எழுந்தது. வடிவேலு விஜயகாந்த் உடன் சண்டை போட்டு தனியாக சென்றார். இதற்கிடையில் கேப்டன் விஜயகாந்த் மறைந்ததற்கும் வடிவேலு செல்லாதது பெரும் பூதாகரமாக மாறியது. சினிமாவில் வடிவேல் வளர்ச்சிக்கு முக்கிய நபர்களில் ஒருவர் சிங்கமுத்து இவர் வடிவேலு குறித்து தற்போது ஒரு பேட்டியில் தெரிவித்திருப்பது, வடிவேலுவின் பாடி லாங்குவேஜ் அவருக்கு கைகொடுத்தது. அவர் இவ்வளவு சொத்து சேர்த்ததற்கு காரணங்களில் நானும் ஒன்று. ஆனால் 7 கோடி ரூபாயை காணவில்லை என்று சொல்லிவிட்டார். எனக்கு எதுவென்றே தெரியாது. சொத்து வாங்கியதிலிருந்து அவருக்கு பாஸ்போர்ட் எடுத்ததுவரை உதவி செய்திருக்கிறேன்.
இவ்வளவு சொத்து சேர்த்திருக்கிறாரே நிம்மதியாக இருந்துவிடுவாரா. அவர் அப்பாவி மாதிரி நடித்ததால் மக்களுக்கு பிடித்துவிட்டது. இப்போது உண்மை முகம் தெரிந்துவிட்டது. ஒரு மனிதன் நல்ல குடும்பத்தில் பிறந்திருக்க வேண்டும். அல்லது நல்ல புத்தகங்களை படித்திருக்க வேண்டும். அதுவும் இல்லையென்றால் நல்ல நண்பர்களை சம்பாதித்திருக்க வேண்டும். இந்த மூன்றுமே அவரிடம் இல்லை. விஜயகாந்த், மனோபாலா, மயில்சாமி என யாருடைய இறப்பிற்காவது அவர் வந்தாரா. அவர் வரமாட்டார் என்பது எனக்கு தெரியும். யாராவது இறந்துவிட்டால் ஊரில் இருக்கமாட்டார். செத்ததுக்கு தண்ணிய போட்டு சந்தோஷப்படுவாரு. அவருடைய ஜாதகப்படி சொல்றேன். அடுத்த வருஷம் இவருக்கு தெரியும். நான் சொல்றதை பொய்னுகூட சொல்லலாம். இந்த சமூகத்துக்கும் மக்களுக்கும் வில்லனே வடிவேலுதான்" என்றார்.
வடிவேலு கடந்த சில நாட்களாக பிரபலங்கள் இறந்தபோது நேரில் சென்று அஞ்சலி செலுத்தவில்லை என்பது அனைவருக்கும் தெரிந்ததே, ஆனால், திமுக விழா மேடைகள் அனைத்திலும் வடிவேல் கலந்துகொள்ளுவார். சமீபத்தில் நடந்த கலைஞர்100 விழாவில் பங்கேற்றார் என்பது தெரிந்ததே. வடிவேலு மீது உள்ள கறை பெருசாக பரவியதே தவிர வேறு எந்த வித மாற்றமும் ஏற்படாமல் இருக்கிறது.