தமிழ் நாடகங்களில் அம்மா அக்கா கதாபாத்திரங்களில் துணை நடிகையாக வலம் வருபவர் ஷர்மிளா, தீவிர விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆதரவாளரான இவர் தொடர்ந்து சமூக வலைத்தளமான ட்விட்டரில் அதிக நேரத்தை செலவிட்டு வருபவர். தமிழகத்தில் பிரதமர் குறித்த போலி செய்தி ஒன்றை பரப்பி சர்ச்சையில் சிக்கினார்.
எப்போதும் திராவிட மாடல் குறித்து மிக பெரிய அளவில் பேசியும் வந்துள்ளார் இந்த சூழலில் இவர் திடீர் என திராவிட மாடல் குறித்து புலம்பி இருக்கிறார் ஒன்றல்ல இரண்டல்ல பல்வேறு விவகாரங்களில் கடந்த ஒரு வாரத்தில் திமுக அரசு பல்டி அடித்துள்ளது, பட்டினம் பிரவேசம் நிகழ்ச்சிக்கு தடை விதித்து பின்பு பாஜக எச்சரிக்கையை தொடர்ந்து அதனை நீக்கியது.
கருணாநிதி பெயரை திருவாரூர் தெற்கு ரத வீதிக்கு வைப்பதாக தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் அதனை பாஜக எதிர்த்து மிக பெரிய போராட்டம் நடத்திய நிலையில் அந்த அறிவிப்பை கைவிட்டு விட்டார்கள் இப்படி பல இடங்களில் திமுக பின் வாங்கிய நிலையில், துணை நடிகை ஷர்மிளா தனது ட்விட்டர் பக்கத்தில் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார்.
அதில், கடந்த ஒரு வாரமா திராவிட மாடல் டோட்டல் டேமேஜ் தப்பு நடந்தா சொல்லணும் சொல்வோம் அன்புடன் ஆதங்கத்துடன் உரிமையுடன் என்ன நடந்தாலும் முட்டு கொடுக்க முடியாது என குறிப்பிட்டு இருக்கிறார்.மற்றொரு பதிவில் அடிமட்ட அளவில் பாஜக வளர்ந்து வரும் உண்மையை ஏற்று கொள்ளவேண்டும் என வேதனையுடன் தெரிவித்துள்ளார்.
அது மட்டுமின்றி தேவையில்லாத விஷயங்களில் தலையிட்டு பிறகு பின்வாங்கி பாஜக வெற்றிக்கு உதவுவதாக ஒருவர் தெரிவித்த கருத்தை பகிர்ந்து இருக்கிறார், மொத்தத்தில் இதுநாள் வரை பாஜகவை ஒத்த ஓட்டு பாஜக என கிண்டல் செய்துவந்த துணை நடிகை அவரது ட்விட்டர் பக்கத்தில்.,
திராவிட மாடலை விமர்சனம் செய்து பாஜக குறித்து தெரிவித்த கருத்தை பார்த்த பலரும் இது என்னட திராவிட மாடல் துணை நடிகைக்கு வந்த சோதனை என கிண்டல் அடித்து வருகின்றனர்.
🤷♀️🤷♀️🤦♀️🤦♀️ pic.twitter.com/VzUdVfHSId
— Dr Sharmila (@DrSharmila15) May 14, 2022