24 special

உனக்கு அப்பன்டா! வாலாட்டிய துருக்கியை ஒரே கையெழுத்தில் சோலியை முடித்து விட்ட மோடி! இனிமேல் பேசுவ!

PMMODI,TURKEY
PMMODI,TURKEY

கடந்த மே மாதம் இந்தியா பாகிஸ்தானுடனான நான்கு நாட்கள் யுத்தம் உலகின் பார்வையை இந்தியா பக்கம் திருப்பியுள்ளது. மேலும் அசுர வேகத்துடன் இந்திய ராணுவத்தை மேம்படுத்தி வருகிறது.இதற்கிடையில் இந்தியா பாகிஸ்தான் போரில் இந்திய ராணுவ தளவாடங்கள்  தரமும் பலமும் நிரூபிக்கப்ட்டது. அமெரிக்க சீன துருக்கி  தயாரிப்புக்கள் பாகிஸ்தானில் அடிவாங்கி கிடந்தது.  இந்த தாக்குதலுக்கு பிறகு உலகம் அதன் பார்வைகளை  இந்தியா பக்கம்  மாற்றி வருகிறது. 


இதில் முக்கியமாக பார்க்க வேண்டிய விஷயம் என்னவென்றால் ஆப்ரேஷன் சிந்தூரில் பாகிஸ்தானை அலறவிட்ட இந்தியாவின் அதிநவீன ஆயுத தளவாடங்களை கொள்முதல் செய்ய ஆர்மேனியா அதிக ஆர்வம் காட்டி வருகிறது.  ஆர்மேனியாவின் இந்த நடவடிக்கை, எதிரி நாடான அஜர்பைஜான், துருக்கி, பாகிஸ்தான் நாடுகளையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இதற்கு முக்கிய காரணம் உலக அளவில் போருக்கு சிறந்த ட்ரோன்கள் என்ற சிறப்பு பெற்றது துருக்கியின் ட்ரோன்கள். தற்போது கால சூழ்நிலைக்கு ஏற்றவாறு துருக்கியில் ட்ரோன்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. 

பாகிஸ்தான்  இந்தியாவை தாக்குவதற்கு துருக்கியின் ட்ரோன்களை தான் பயன்படுத்தியது. இந்தியா அதை லெப்ட் ஹாண்டில் டீல் செய்தது. இந்த நிலையில் தான் ஆர்மனியா இந்தியா பாதுகாப்பு உபகாரணங்களை வாங்க முடிவு செய்துள்ளது. இந்தியாவுக்கும்  ஆர்மீனியாவுக்கும்  இடையிலான உறவு வலிமை பெற்றது.

ஆர்மீனியாவுக்கு எதிராக அஜர்பைஜான்  எல்லை பிரச்சனையின்போது அஜர்பைஜான் இராணுவத்துடன் பாகிஸ்தானின் சிறப்புப் படைகள் களத்தில் நின்று செயல்பட்டன. பாகிஸ்தானின் இந்த நடவடிக்கைக்குப் பதிலடியாக, ஆர்மேனியா மற்றும் ஈரானுடன் இந்தியா ஒரு முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. இந்தச் சூழலில், ஐரோப்பாவில் மிகச் சிறிய நாடான ஆர்மீனியா, இந்தியாவின் மிகப்பெரிய ஆயுத இறக்குமதியாளராக மாறியது.

முன்னதாக ரஷ்யாவிடமிருந்து ஆயுதங்களை இறக்குமதி செய்துவந்த ஆர்மேனியா, கடைசியாக 2021ஆம் ஆண்டு ரஷ்யாவுடன்  400 பில்லியன் டாலர் மதிப்பில் ஆயுத இறக்குமதிக்கு ஒப்பந்தம் ஏற்படுத்தியது. ஆனால் அதில் ஓரளவு மட்டுமே  நிறைவேற்றப்பட்டுள்ளது.இந்நிலையில், இந்தியாவுக்கும் ஆர்மேனியாவுக்கும் இடையே 2020 ஆம் ஆண்டில் 2 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தங்கள் ஏற்பட்டன. அதன் பிறகு, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் ஆண்டுதோறும் வலுவடைந்து வருகின்றன. அஜர்பைஜானிடமிருந்து வரும் பாதுகாப்பு அச்சுறுத்தலை எதிர்கொள்வதற்காக, இந்தியாவிடமிருந்து மேம்பட்ட ஆயுதங்களை ஆர்மீனியா வாங்கி வருகிறது.

2022-ல் கையெழுத்திடப்பட்ட 720 மில்லியன் டாலர் மதிப்புடைய ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஆகாஷ்-1S வான் பாதுகாப்பு அமைப்புக்களின் முதல் தொகுதி  கடந்த நவம்பரில் ஆர்மேனியாவிற்க அனுப்பப்பட்டது. ஆர்மேனியா தனது பாதுகாப்புத் திறன்களை நவீனமயமாக்கும் அவசரத் தேவையில் உள்ளது.   விலையுயர்ந்த மேற்கத்திய ஆயுதங்களுடன் ஒப்பிடும் போது, குறைவான விலையில், தரமான ஆயுதங்களை உற்பத்தி செய்யும் இந்தியாவை நோக்கி ஆர்மேனியா திரும்பியது.

சமீபத்தில் ஆர்மேனியாவின் கர்னல் தலைமையிலான குழு,  இந்தியாவில் தயாரிக்கப்பட்ட AK-203 தாக்குதல் துப்பாக்கிகளின் திறன்களை மதிப்பிட்டு வாங்க இந்தியா வந்துள்ளது. 

கடந்த ஆண்டில் இருந்து  ரஷ்யா, ஆர்மேனியா, பெலாரஸ், கஜகஸ்தான், மற்றும் கிர்கிஸ்தான்  உறுப்பினராக உள்ள  யூரேசிய பொருளாதார ஒன்றிய அமைப்பின் பார்வையாளர் நாடாக இந்தியா உள்ளது.  யூரேசிய பொருளாதார ஒன்றியத்துடன் ஒரு சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்துக்கான பேச்சுவார்த்தையையும் இந்தியா  நடத்தி வருகிறது. வரும் காலங்களில் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்கான எதிர்கால போக்குவரத்து பாதைகளின் சாத்தியமான பகுதியாக  ஆர்மேனியாவை இந்தியா பார்க்கிறது. இது, துருக்கியின் செல்வாக்கு மிகுந்த இடத்தில் ஆழமாகக் காலூன்றும் இந்தியாவின் ராஜதந்திரமாகும்.இதற்கிடையே, இருநாடுகளுக்கும் இடையே வளர்ந்து வரும் பாதுகாப்பு ஒத்துழைப்பு, துருக்கிக்கு மட்டுமல்ல பாகிஸ்தானுக்கும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது என்று அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.