பாஜக தலைவர் அண்ணாமலையின் இன்றைய பத்திரிக்கையாளர் சந்திப்பில் நிறைய விவரங்கள் பகிர்ந்தார். என்றாலும் முடிவில், பிரச்சினை கிளப்ப வேண்டும் என்று பிரஸ் மிட் வந்த சிலர் "பிரதமர் வருகைக்கு பாஜக வைத்த பேனர்களுக்கு அனுமதி பெறவில்லை" என்று ஒரு மீடியாவும், "பேனர்களால் ஆபத்து" என்று மற்றொரு மீடியாவும் கேள்வி எழுப்பினார்கள்.
200 ரூபாயில் ஆரம்பித்து முடிவில் மூவாயிரம் ரூபாய் தினக்கூலி தரச் சொல்லி கோபாலபுரத்திடம் பரிந்துரை செய்வதாக அண்ணாமலை சொல்ல அரங்கமே சிரிப்பலையில் ஆழ்ந்தது,
"ஹா.... பத்திரிக்கையை அவமானப் படுத்துகிறீர்கள். பத்திரிக்கை சுதந்திரம். கத்திரிக்காய்" என்றெல்லாம் அவர்கள் சொல்ல, அனைத்து பத்திரிகை நண்பர்களுக்கும் பொதுவாக மரியாதை கொடுத்தோம் உள் நோக்கத்துடன் பதில் கொடுத்தால் எங்கள் அதிரடி இப்படித்தான் இருக்கும் என வெளுத்து எடுத்துவிட்டார் அண்ணாமலை.
"பத்திரிக்கை சுதந்திரம் பற்றி நீங்கள் பேசாதீர்கள். உங்களை ரெட் லைட் மீடியா என்று சொன்னவரை கண்டித்தீர்களா நீங்கள்? நாக்கில் சுளுக்கெடுப்போம் என்று சொன்ன கான்ஸ்டண்டைனை கண்டித்தீர்களா நீங்கள்? நாங்கள் தான் உண்மையில் பத்திரிக்கையாளர்களுக்கு மரியாதை கொடுப்பவர்கள்" என்று போட்டுத் தாக்கினார் அண்ணாமலை.
எங்கள் கட்சி குறித்து தவறாக பேசினால் அதற்கு பதிலடி கொடுக்கதான் நான் இந்த சேரில் இருக்கிறேன் என அண்ணாமலை ஒன் மேன் ஷோ நிகழ்த்திவிட்டார் "மரியாதை கொடுத்தால் மரியாதை கிடைக்கும்"இப்படி இழுத்து வைத்து உதைத்தால் தான் இவர்களுக்கும் புரியும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.