ஒடிசா : ஒடிசா மாநிலம் கேந்திரபடா வட்டம் திகர்பங்கா பகுதியை சேர்ந்தவர் கஜேந்திரா. இவர் லாரி டிரைவராக பணிபுரிந்துவருகிறார். கடந்த மூன்று தினங்களுக்கு முன்னர் ஜெகத்சிங் புர் பகுதியில் இயங்கிவரும் லாரி பார்க்கிங் பகுதியில் ட்ரைவர் வேலைக்கு ஆள்தேவையா என விசாரித்துக்கொண்டிருந்தார்.அங்கு நின்ற ட்ரைவர்களிடம் தனது நிலைமையை எடுத்துக்கூறி விசாரித்துக்கொண்டிருந்தார்.
பார்க்கிங்கில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு லாரியை நோக்கி கஜேந்திரா செல்கையில் அங்கிருந்த ஓட்டுநர் ஒருவர் கூச்சலிட்டுள்ளார். அதைக்கண்ட மற்ற ஓட்டுனர்கள் ஓடிவந்து விசாரித்தனர். அப்போது சத்தமிட்ட ட்ரைவர் தனது செல்போனை காணவில்லை என கூறியுள்ளார். அங்கிருந்த மற்ற ஓட்டுனர்கள் அருகே நின்ற கஜேந்திராவை திருடன் என கூறியுள்ளனர்.
மேலும் கஜேந்திராவை கட்டிவைத்து செருப்புமாலை அணிவித்துள்ளனர். அதோடு நில்லாமல் அங்கிருந்த லாரியின் முன்னால் கயிற்றால் கட்டிவைத்து மூன்று கிலோமீட்டர் தூரம் ஊர்வலமாக அழைத்துசென்றுள்ளனர். இதில் கஜேந்திரா சம்பவ இடத்திலேயே மயங்கினார். அவரை கயிற்றிலிருந்து அவிழ்த்து சாலையோரம் வீசிச்சென்றுள்ளனர