![RAMSARAN](https://www.tnnews24air.com/storage/gallery/fyUFnTVti0SNZ90pWJVjnGMDUtER2Bunbhf3y5ZZ.jpg)
சனாதனத்தை ஒழிக்க வேண்டும் வேரோடு அகற்ற வேண்டும் என்ற குறிக்கோள்கள் மற்றும் இந்து மத மக்களை புண்படுத்தக்கூடிய சித்தாந்தங்களை கொண்ட நடவடிக்கைகள் தமிழகத்தில் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது! சனாதனத்திற்கு எதிராக பேசிய காரணத்திற்காகவே அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும் பல எதிர்ப்புகளை சந்தித்தார். தமிழக மக்கள் மத்தியில் அதிருப்திகளையும் பெற்றார், அதோடு திமுக கடந்து 2019 ஆட்சியை பெற்றாலும் இதுவரை மத்திய அரசை குறை கூறுவதை மட்டுமே முக்கிய செயல்பாடாக செய்து வருகிறது, இந்த விவகாரங்களில் தமிழக மக்களுக்கு திமுக என்ன செய்தது இதுவரை அவர்கள் செய்த நற்பயன்களை கூறுங்கள் என்று மக்களிடம் கருத்து கேட்கும் பொழுதும் அவர்கள் எதையுமே செய்யாமல் தங்கள் குடும்பத்தையே வளர்க்கிறார்கள் என்று தங்கள் கோபத்தை முன் வைத்துள்ளனர், அதோடு சனாதனத்தை தவறாக பேசினார்கள் அல்லவா அதனால தற்போது பல சிக்கல்களில் சிக்கி வருகிறார்கள் பெரிய அளவிலும் சிக்குவார்கள் என்றும் மக்கள் கூறுகிறார்கள்.
இதற்கிடையில் திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்பதற்கு முன்பு மக்களுக்காக குரல் எழுப்பிய சினிமா வீரர்கள் எங்கே சென்றார்கள் என்ற ஒரு தேடலும் விமர்சனங்களும் சமூக வலைதளங்களில் முன்வைக்கப்பட்டது. அதிலும் குறிப்பாக சனாதனத்தை அமைச்சர் உதயநிதி தவறாக சித்தரித்ததற்கு நாடு முழுவதிலிருந்து கண்டனங்களும் எதிர்ப்புகளும் வந்த நிலையில் அதிமுக ஆட்சியில் சினிமா போர் வீரர்கள் இதற்கு எந்த ஒரு கருத்தையும் முன் வைக்கவில்லை! அதற்கு மாறாக திமுகவின் சித்தாந்தங்களை அடிப்படையாகக் கொண்டு திமுகவிற்கு ஏற்ற வகையிலான படங்களில் நடித்த வருகிறார்கள் தற்போது திமுக தரப்பதற்கு ஏற்ற வகையிலான படங்கள் எடுப்பதற்கு இயக்குனர்களும் முளைத்து விட்டார்கள்!
ஆனால் மலையாளம் மற்றும் தெலுங்கு திரை உலகை சேர்ந்தவர்கள் என்றும் மாறாத ஒரே செயல்களில் மேற்கொண்டு வருகிறார்கள்! தமிழகத்தில் விவசாய மக்கள் கர்நாடகா நீருக்காக கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்ட போது காவிரி நீர் மேலாண்மை தமிழகத்திற்கு கர்நாடக அரசு நீர் திறந்து விட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பொழுது கூட தமிழகத்திற்கு நீர் தரக்கூடாது என்று அம்மாநில திரை பிரபலங்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர் அதற்கு எதிராக கூட தமிழகத்தில் தமிழக விவசாயிகள் சார்பாக சினிமா பிரபலங்கள் குரல் கூட கொடுக்கவில்லை என்பது தமிழக மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது!
இப்படி மக்கள் பிரச்சனையிலும் சரி குறிப்பிட்ட சமூகத்தை எதிர்ககும் நடவடிக்கையில் தமிழகத்தின் ஆளும் தரப்பு ஈடுபட்ட போதிலும் சரி தமிழக சினிமா போர்வீரர்கள் மௌன விரதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்! இதற்கிடையில் தமிழ் சினிமாவின் போர் வீரர்களாக என்றும் அறிமுகமாகாத சில நடிகை நடிகர்கள் தங்கள் ஆன்மீகத்தை சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தும் பொழுதும் திமுக ஆதரவாளர்களால் விமர்சனங்களுக்கு உள்ளாக்கப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தெலுங்கில் மெகா ஸ்டார் ஆக உள்ள ராம்சரண் தொடர்ந்து தனது ஆன்மீக நாட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதாவது நடித்த மிகப் பெரிய பட்ஜெட் அடங்கிய படத்தில் கடவுள் நம்பிக்கையை மிகப் பெரிய அளவில் காட்டி இருந்தார் அதோடு கடந்த சில நாட்களாக அவர் ஆன்மீக தலங்களுக்கு பயணம் மேற்கொண்டு சுவாமி தரிசனம் செய்யும் வீடியோ மக்களோடு மக்களாக அமர்ந்து இறைவனை தரிசிக்கும் வீடியோவும் வைரலானது அதேபோன்று தற்பொழுது சிவபெருமானின் லிங்கத்தை ராம்சரண் தூய்மை செய்யும் வீடியோ இணையத்தில் வைரல் ஆகியுள்ளது. மேலும் இதற்கு இவர்களைப் போன்று தொடர்ந்து ஒரே பக்கமும் அதுவும் மக்கள் பக்கம் தங்கள் நம்பிக்கை பக்கம் இருக்கும் நடிகர்களால் சனாதன தர்மம் என்றும் அழியாது என்ற கமெண்ட்கள் முன் வைக்கப்படுகிறது!