திமுக அரசு ஆட்சிக்கு வந்ததும் நீட் தேர்வை ஒழித்துவிடுவோம் என்று வாக்குறுதி கொடுத்தது அதனை இரண்டரை ஆண்டுகள் ஆகியும் ஒழிக்கவில்லை. இதனால் தமிழகத்தில் பல மாணவர்கள் நீட் தேர்வில் தோல்வி அடைந்து உயிரை மாய்த்து கொண்டனர். திமுக ஆட்சி காலத்தில் காங்கிரஸ் தான் நீட் தேர்வை தமிழ்நாட்டில் கொண்டுவந்தது. அதனை ஒழிப்போம் என்று திமுக நாடகமாவது கண்டத்திற்குரியது என்று பல கட்சி தலைவர்கள் வலியுறுத்தினார்கள்.அந்த வகையில் நீட் ஒழிப்போம் என்று தேர்தல் நேரத்தில் திமுக கொண்டுவந்தது இதுநாள் வரை அதனை ஒழிக்கவில்லை இதனால் மக்கள் கடும் கோபத்தில் உள்ளனர். அ
தனை மறைக்க வேண்டி தற்போது திமுக நாடகத்தை அரங்கேற்றியுள்ளது. தற்போது சென்னையில் உதயநிதி தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர் உதயநிதி மத்திய அரசிடம் வலியுறுத்தி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும், முட்டையை காண்பித்து விமர்சித்தார். தொடர்ந்து நீட்டை ஒழிக்க கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தயாநிதி மாறன் பேசுகையில் நீட் தேர்வு மூலம் அனிதா முதலில் இறந்தபோது, ஒவ்வொரு பெற்றோர்களும் கண் கலங்கினார்கள் அதில் நானும் ஒருவன்.
எனக்கு நடந்த கதையை நான் கூறுவதற்கு சரியான மேடை இதுதான் ' என் குடும்பங்கள் அனைத்தும் திமுக தான், என் பெண் குழந்தையை CBSEல் சேர்க்க சொல்லி மனைவிக்கும் எனக்கும் சண்டை நான் ஸ்டேட் போர்டில் தான் சேர்க்க வேண்டும் என்று கூறினேன். என் மனைவிக்கு ஆசை மகள் மருத்துவராக வேண்டும் என்று நான் சொன்னேன் நமது குடும்பம் அரசியலில் இருக்கிறோம் சீட் நாம் சுலபமாக வாங்கிவிடலாம் சொன்னேன்.என் மகள் 2017ம் ஆண்டு பனிரெண்டாம் வகுப்பு முடித்துவிட்டு என்னிடம் கேட்டால் சீட் வாங்கி தாங்கள் என்று நான் நீட்டை பார்த்து கண்கலங்கி நின்றேன். என் மகள் நீட் எழுதினார் ஆனால் தேர்வு ஆகமுடியவில்லை என்று தெரிவித்தார்.
இதனை காணும்போது மத்திய அரசின் திட்டத்தை நம்மால் புரிந்துகொள்ள முடிகிறது. அதாவது, நீட் தேர்வு கொண்டு வந்ததற்கான நோக்கம் என்னவென்றால் நீட் தேர்வு மூலம் பணக்கார பிள்ளைகளாக இருந்தாராம் மருத்துவர் ஆகவேண்டும் என்றால் நீட் தேர்வை தேர்ச்சி பெற வேண்டும் என்பதே முழு காரணம். ஏழை குடும்பத்தை தொடங்கி செருப்பு தைய்பவர்கள் முதல் சாக்கடை அல்லும் மகள்கள் என அனைவரும் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கின்றனர். ஆனால், பெரும் பணம் வைத்திருக்கும் தயாநிதி மாறன் மகளால் நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியவில்லை. இது தான் பிரதமர் மோடி கொண்டுவந்த சிறந்த திட்டம். கல்வி என்பது ஏழைக்கு ஒரு விதமாகவும், பணக்காரர்களுக்கு ஒரு விதமாகவும் இருக்க கூடாது என்று எண்ணி பாஜக இத்திட்டத்தை கொண்டு வந்தது.
இதனை திமுக எம்பி தயாநிதி மாறன் தன் வாயால் ஒப்புகொண்டு உள்ளார்.இதுவே நீட் தேர்வு இல்லையென்றால் அரசியலில் இருக்கும் தலைவர்கள் சுலபமாக மருத்துவ சீட்டை வாங்கி கொண்டு தங்களது பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றுவார்கள். அப்போது ஏழை மக்களின் பிள்ளைகள் மருத்துவ ஆசையை ஆசையாகவே முடிந்து விடும். இந்நிலையில் தான் மத்திய அரசு நீட் தேர்வுக்கு முழு அதிகாரம் கொடுத்து வருகிறது. ஆனால் தமிழ்நாட்டில் இருக்கும் திமுக அரசு நீட்டை ஒழிக்க வேண்டும் என்று ஒத்தைக்காலில் நிற்கிறது. ஏனெனில் அவர்களின் பிள்ளைகள் நீட்டில் தோல்வி அடைவதே காரணம் அதனை தயாநிதி ஒத்து கொண்டு விட்டார். அவரின் இந்த பேச்சு தற்போது சமூக தளத்தில் வைரலாகி வருகிறது.