24 special

திமுக முக்கிய புள்ளியின் வரி ஏய்ப்பு இத்தனை கோடியா?....வருமான வரித்துறையின் தகவல்!

jagathrakshakan
jagathrakshakan

அரக்கோணம் தொகுதி திமுக எம்பி ஜெகத்ரட்சகன் தொடர்புடைய இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியதில் கோடி ரூபாய் வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது. இதனை வருமான வரித்துறை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். 


திமுகவின் முக்கிய தலைவராக இருப்பவர் ஜெகத்ரட்சகன் முன்னாள் மத்திய அமைச்சருமான இவர் தற்போது திமுக எம்பியாக உள்ளார். இவரின் தொடர்புடைய இடங்களில் கடந்த 5ம் தேதி முதல் 10 நாட்களாக வருமானை வரித்துறையினர் மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் உதவியுடன் ஹோட்டல், மருத்துவமனை, மருத்துவ கல்லூரி, சொந்த வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் பல முக்கிய ஆவணக்கள் சிக்கியதாக வருமான வரித்துறை அறிக்கை மூலம் தெளிவாக கூறப்பட்டுள்ளது. அதில், 

"தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சுமார் 100 இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இந்த சோதனையில் கல்வி நிறுவனங்களில் வரி ஏய்ப்பு புகார்கள் கண்டறியப்பட்டுள்ளன. கல்லூரிகளில் இருந்து ரூ.400 கோடி மதிப்பிலான கணக்கில் வராத கட்டண ரசீதுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேபோல், தவறான தகவல்கள் அளித்து ரூ.25 கோடி ஸ்காலர்ஷிப் வழங்கப்பட்டதற்கான ஆதாரங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன என்று தெரிவித்தது திமுக நிர்வாகிகளிடம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இன்னொரு தேடுதலில் கல்வி நிறுவனங்களில் பயில மாணவர்களை ஈர்ப்பதற்காக ஏஜென்டுகள் பயன்படுத்தப்பட்டதும், இதற்காக கணக்கில் காட்டப்படாத கமிஷன் தொகை சுமார் ரூ.25 கோடி வசூல் செய்யப்பட்டதும் கண்டுபிக்கப்பட்டுள்ளன. மதுபான வணிகத்தில் போலி வரவு செலவு மூலம் ரூ.500 கோடி முறைகேடு செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

மேலும், கணக்கில் காட்டாத ரூ.300 கோடி, அறக்கட்டளைக வங்கி கணக்கில் இருந்து தனிப்பட்ட கணக்குகளுக்கு மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன. ஆந்திரப் பிரதேசத்தில் ஒரு தொழில் நிறுவனத்தை கையகப்படுத்துவதற்காக செலுத்தப்பட்ட பணமும் இதில் அடங்கும். இதுவரை நடந்த சோதனையில் கணக்கில் வராத ரூ.32 கோடி ரொக்கமும். ரூ.28 கோடி மதிப்புள்ள தங்கமும் கைப்பற்றப்பட்டுள்ளன" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை பார்க்கும்போது 1000ம் கோடிக்கு மேல் ஜெகத்ரட்சகன் கணக்கு கட்டமால் இருந்துள்ளதாக சோதனையில் தெரியவந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையில் சிக்கி கைதாகி சிறையில் உள்ளார். இந்த நிலையில் திமுக எம்பி ஜெகத்ரட்சகன் வருமான வரித்துறை சோதனையில் சிக்கியிருப்பதால். திமுகவின் முக்கிய புள்ளிகளிடம் பயத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது வருமான வரித்துறையினர் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சொந்தமான கனிமவளத்தில் சோதனை நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.