Tamilnadu

நேற்று 'எச்சரிக்கை' இன்று நீக்கம்? சாதித்த அண்ணாமலை... "மலை அண்ணாமலை" சொன்னது நடந்தது !

annamalai press meet
annamalai press meet

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பு சமூக வலைத்தளங்களில் கடும் வைரலாக பரவி வருகிறது, நேற்றைய ஊடகங்களின் 'பிரைம் டைம்' என கூறும் விவாத நேரத்தையும் அண்ணாமலையின் பத்திரிகையாளர் சந்திப்பு மாற்றம் செய்தது என்பதே நேற்றைய கள நிலவரம்.


அண்ணாமலையின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் பத்திரிகையாளர் ஒருவர் கோபாலபுரத்தில் பிறந்தவர்கள் குறித்து அண்ணாமலை எழுப்பிய கேள்விக்கு கோவப்பட்டதும் அதற்கு அண்ணாமலை கொடுத்த பதிலடி ஆகியவை மட்டுமே விவாத பொருளாக மாறிய நிலையில் சத்தமில்லாமல் மிக பெரிய மாற்றம் நேற்று இரவோடு இரவாக அரங்கேறியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த மின்சாரதுறை தனியார் சிக் நிறுவனத்திடம் ஒரு யூனிட் மின்சாரம் 20 ரூபாய்க்கு வாங்க முடிவு செய்துள்ளது எனவும், அந்த நிறுவனத்தை ஆளும் கட்சியை ஒருவர் வாங்கி அந்த நிறுவனத்திற்கு மின்சார துறையில் இருந்து டெண்டர் கொடுக்கப்பட்டு மிக பெரிய ஊழல் நடக்க இருப்பதாகவும் உடனடியாக இந்த ஊழலை தடுக்கவில்லை என்றால் அனைத்து ஆதாரங்களும் ஒவ்வொன்றாக வெளியிடப்படும் என தெரிவித்தார்.

மேலும் இது ட்ரைலர் தான் இனி தான் ஆட்டம் இருக்கு ஒரு குடும்பத்தினர் அழுத்தம் கொடுக்கிறார்கள் என அதிகாரிகள் கையெழுத்து போட்டு சிக்கி கொள்ள வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுத்தார், இந்த சூழலில் அண்ணாமலையின் நேற்றைய சந்திப்பு  அரசாங்கத்தின் உயிர் நாடியாக இருக்க கூடிய தலைமை செயலக முக்கிய நபர்களை அதிர்ச்சியடைய செய்ய விஷயம் உடனடியாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளை செல்போனில் அழைத்து உச்சபட்ச அரசு பொறுப்பில் இருக்க கூடியவர் பேசும் நிலைக்கு சென்றுள்ளது.

இதில் மின்வாரிய அதிகாரிகளும் தகவல் உண்மைதான் என தெளிவுபடுத்த, கோட்டை வட்டாரமே ஆட்டம் கண்டு போயுள்ளதாம், திமுக ஆட்சி பொறுப்பேற்று 6 மாதம் முடிவடைவதற்குள் ஊழல் என்ற தகவல் வெளிவந்தால் ஆட்சிக்கே அவப்பெயரை உண்டாக்கும் மேலும் இப்போது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு வழக்கு பதிவு செய்ய அறிவுறுத்தும் அதிகாரம் ஆளுநருக்கு இருக்கு என்பதால் எப்படி வேண்டும் என்றாலும் நிலை மாறலாம் என்பதால் கொடுத்த டெண்டரை கைவிட முடிவு செய்யப்பட்டு உள்ளதாம்.

மேலும் அதிகாரிகள் பலர் இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வருவதால் லம்பாக பணத்தை சுருட்டலாம் என நினைத்தவருக்கு அண்ணாமலையின் நேற்றைய செய்தியாளர் சந்திப்பு கடும் பின்விளைவுகளை உண்டாக்கியுள்ளது.வீடியோவை பார்க்க கிளிக்