Tamilnadu

கியாரே செட்டிங்கா வேற எங்காவது வச்சுக்கோ வெளுத்து எடுத்த அண்ணாமலை ஓடவிட்ட தொண்டர்கள்!

annamalai IPS (R)
annamalai IPS (R)

தமிழகத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார், பாஜக மற்றும் கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் அவர், பொது கூட்டங்களில் பேசுகிற பேச்சு பாமர மக்களையும் சென்றடையும் வகையில் அமைந்திருக்கிறது.


இந்த சூழலில் அண்ணாமலையின் பிரச்சாரத்தை திசை திருப்பவும் அவரது பிரச்சாரத்திற்கு எதிர்ப்பு இருப்பது போன்ற ஒரு தோற்றத்தை உண்டாக்க சிலர் திட்டமிட்டு ஆட்களை ஏவி விட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது, ஆனால் அதனை அப்படியே தனக்கு சாதகமாக சிக்ஸர் அடித்துள்ளார் அண்ணாமலை.விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற பிரச்சார கூட்டத்தில் திடீர் என ஒருவர் பெட்ரோல், காஸ் விலையை எப்போ குறைப்பீங்க விலை ஏறிப்போச்சு மோடிதான் காரணம் என இரண்டு மூன்று நபர்களை வைத்து கொண்டு கத்தினார், அதனை பிரபல தொலைக்காட்சி கேமரா மேன் அருகிலேயே இருந்து வீடியோ எடுத்தார்.

இந்த சூழலில் அங்கு பரபரப்பு காணப்பட அவரை நிற்கவைத்து அதே சேனல் கேமரா மேன் முன்னிலையில் அண்ணாமலை கொடுத்த பதிலடி தரமாக அமைந்தது, பெட்ரோலை Gst குள் கொண்டுவர மத்திய அரசு தயார் மோடி ஐயா தயாராக இருக்கிறார் இங்குள்ள திமுக அரசுதான் எதிர்ப்பு தெரிவிக்கிறது, அப்படி பெட்ரோல் GST குள் வந்தால் 35 ரூபாய் வரை பெட்ரோல் விலை குறையும் என அண்ணாமலை பதிலடி கொடுத்தார். இதையடுத்து திட்டமிட்டு உள்நோக்கத்துடன் கேள்வி எழுப்பிய நபர்களை தொண்டர்கள் அங்கிருந்து விரட்டி அனுப்பினர்.

இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன, இந்த சம்பவம் குறித்து அண்ணாமலை தனது முகநூல் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ளார் அதில் :- இன்று விழுப்புரத்தில் நான் பிரச்சாரம் செய்து கொண்டிருந்த போது ஒரு சுவாரசியமான நிகழ்வு நடந்தது. வழக்கம்போல திமுக நெடுங்காலமாக பயன்படுத்தும்  யுக்தி ஆன அவர்களது சன் நியூஸ் நிருபர்களை வைத்து கொண்டும் திமுக நிர்வாகிகளை வைத்துக்கொண்டும் பெட்ரோல் விலையேற்றத்தை காரணம் காட்டி நம் கட்சி தலைவர்களையும் நமது வேட்பாளர்களை முற்றுகையிட முயன்றனர்.

இந்த மாதிரி ஏமாற்று வேலைகளை விட்டுவிட்டு நம் முதலமைச்சர் அவர்கள் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரிவிதிப்புகள் கொண்டு வருவதற்கான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். இதைத்தானே தாங்களும் எதிர்க்கட்சியாக இருக்கும்போது கூறிக் கொண்டு இருந்தீர்கள் இப்போது ஏன் பயப்படுகிறீர்கள்? என அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார். அண்ணாமலை எச்சரிக்கை விடுத்த வீடியோவை பார்க்க கிளிக்  . இதற்கிடையில் அண்ணாமலைக்கு மத்திய தொழிற்பிரிவு பாதுகாப்பு விரைவில் வழங்க பட இருப்பதாக செய்திகள் வெளியானது குறிப்பிடத்தக்கது.