Cinema

தப்பித்த தமிழக பிரபலத்தின் மகன் சிக்கிய ஷாருக்கான் மகன் என்ன நடந்தது கப்பலில் ?

sharukkhan and his son
sharukkhan and his son

நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யகான் சொகுசு கப்பலில் போதை பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்ட சூழலில் தற்போது அந்த வழக்கில் தமிழகத்தை சேர்ந்த பிரபலத்தின் மகன் நூலிழையில் தப்பித்த செய்திகள் உலா வருகின்றன.


மும்பையில் இருந்து கோவா, குஜராத் அருகே உள்ள டாமன், டையூ உள்ளிட்ட இடங்களுக்கு கப்பலில் சுற்றுலா நடத்தப்படுகிறது. இதற்காக சில தனியார் நிறுவனங்கள் சொகுசு கப்பல்களை வாடகைக்கு பெற்று கடல் சுற்றுலாக்களை நடத்துகின்றனர். ஆனால் சுற்றுலா என்ற பெயரில் இந்த கப்பல்களில் போதை விருந்து, வரம்புமீறிய உல்லாச கேளிக்கைகளும் நடைபெறுகின்றன.இதுமட்டுமின்றி அதே கப்பலில் போதைப்பொருள் விற்பனை வர்த்தகமும் நடைபெறுகின்றன.

ஆன்லைன் மூலம் சுற்றுலா பயண டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுகின்றன. இந்த சொகுசு கப்பலில் சுமார் 1000 பயணிகள் வரை பயணம் செய்ய முடியும். இந்த உல்லாச கப்பல் பயணங்களில் கோடீஸ்வரர்கள் குடும்பங்களை சேர்ந்தவர்கள், திரையுலக பிரபலங்கள், மாடலிங் உலகை சேர்ந்தவர்கள், பெரிய வர்த்தக நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் பங்கேற்பது வாடிக்கை.

வழக்கமாக வார இறுதி நாட்களில் இந்த பயணங்கள் நடைபெறுகின்றன. இதுபோன்று மும்பையில் இருந்து கோவாவுக்கு 3 நாள் சுற்றுலாவாக கார்டிலியா என்ற சொகுசு கப்பலில் பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. காந்தி ஜெயந்தி விடுமுறை தினமான நேற்று சனிக்கிழமையன்று மும்பையில் இருந்து புறப்பட்டு அரபிக் கடலில் 2 இரவுகள் கழித்துவிட்டு கோவா வழியாக மீண்டும் 4-ந்தேதி காலை மும்பை திரும்பும் வகையில் அந்த சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

800- க்கும் மேற்பட்டவர்கள் அந்த கப்பலில் சுற்றுலா செல்ல முன்பதிவு செய்திருந்தனர். திட்டமிட்டபடி நேற்று மதியம் அந்த சொகுசு கப்பல் மும்பை துறைமுகத்தில் இருந்து சுற்றுலா பயணத்தை தொடங்கியது. இதனை முன்கூட்டியே அறிந்து கொண்ட போதைப் பொருள் தடுப்பு பிரிவை சேர்ந்த 20 அதிகாரிகள் சுற்றுலா பயணிகள் போல மாறுவேடத்தில் அந்த கப்பலில் சென்றனர்.

அவர்கள் கப்பலில் உள்ள சந்தேக வளையத்திற்குள் இருந்த பயணிகளை கண்காணித்தபடி இருந்தனர்.நேற்று இரவு கப்பலில் நடன நிகழ்ச்சி நடந்துள்ளது. பயணிகள் பங்கேற்று உற்சாகமாக நடனமாடினர். அப்போது அவர்களுக்கு போதைப் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டுள்ளது. இதனை கேமராவில் ரெகார்ட் செய்த போதை பொருள் தடுப்பிரிவு போலீசார் உடனடியாக பயன்படுத்திய நபர்களை கைது செய்தனர்.

அத்துடன் விற்பனை செய்த நபர்களையும் கைது செய்தனர், இவர்கள் இரவு முழுவதும் செய்த செயல்கள் அனைத்தும் ஆவனத்திற்காக பதிவு செய்யப்பட்டுள்ளது, தொடர்ந்து மிக பிரபலங்களின் வீட்டு பிள்ளைகளுக்கு என்றே கப்பலில் தனியாக VIP அறை ஒன்று கொடுக்கப்பட்டு அதில் பல்வேறு சம்பவங்கள் அரங்கேறியுள்ளன.இதையடுத்து அனைவரும் கைது செய்யப்பட்டனர், தொடர்ந்து பல்வேறு தகவல்களின் அடிப்படையில் இந்த ஆப்ரேசனை மிகவும் நேர்த்தியாக செய்து முடித்துள்ளனர், அதோடு கப்பலில் முன்பு பணியாற்றிய பணியாளர்கள் கொடுத்த தகவலின் அடிப்படையில் ஒரு மாதமாக இதற்கான திட்டத்தை போதை பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்டுள்ளது.

இதனையடுத்து பல்வேறு பிரபலங்களின் மகன் மகள்கள் இதில் சிக்கிய நிலையில் கடந்தமூன்று முறை இதே கப்பலில் தமிழகத்தை சேர்ந்த பிரபலத்தின் மூத்த மகன் பயணம் செய்துள்ள தகவல் வெளியாகியுள்ளது மும்பையை சேர்ந்த பத்திரிகையாளர் அருண் ரமேஷ் இது குறித்து விரிவாக பதிவு செய்துள்ளார்.தொடர்ந்து உயர்ந்த வகை போதை பொருள்கள் அதிக அளவில் திரை துறையினர் பயன்படுத்தி வருவதும், அவர்களே சினிமாவில் நல்லவர்கள் போல் வேஷம் போட்டு கதாநாயகனாக வலம் வருவதும் அடுத்தடுத்த சம்பவங்கள் மூலம் வெளி உலகிற்கு தெரியவந்துள்ளது.