24 special

AI பற்றி மோடி கொடுத்த பதில்!! சற்றும் எதிர்பார்க்காத அமெரிக்கா அமைச்சர் !! அடுத்த கட்டத்தை நோக்கி...

Pm modi
Pm modi

உலக அளவில் சக்தி வாய்ந்த தலைவராக விளங்கும் பிரதமர் நரேந்திர மோடி, தொடர்ந்து இந்தியாவின் பலத்தை மற்ற நாடுகளும் உணரும் வகையில் மாஸ் சம்பவத்தை செய்துள்ளார் 


2023 ஆம் ஆண்டை உலக சிறுதானியங்களுக்கான ஆண்டாக, ஐ.நா அறிவித்ததன் பின்னணியில் இந்தியா எப்படி ஒரு தொலை நோக்கு பார்வையுடன் செயல்பட்டு, உலக நாடுகள் அனைத்தும் நம் இந்தியாவின்   சிறுதானியங்களை உணவாக எடுத்துக்கொள்வதன் மூலம் இந்தியாவின் ஏற்றுமதி திறன் அதிகரித்து பொருளாதார வளர்ச்சி பெறுவது மட்டுமல்லாமல், உலக மக்களும் ஆரோக்கியமாக வாழ  ஒரு முயற்சியை எடுத்து உள்ளார் மோடி. 

ஒரு பக்கம்  விவாசாய துறையில் நாட்டின் வளர்ச்சி.. மறுபக்கம் வளரும் தொழில் நுட்பத்திற்கு ஏற்ப இந்தியாவை பலப்படுத்துவது... இப்படி எந்த துறையில் கால் வைத்தாலும் இந்தியாவை தனித்துவமாக  மாற்றுவது தான் பிரதமரின் தலையாய கடமையாக அவரது செயல்பாடுகளும் அமைந்து வருகிறது. 

கடந்த மார்ச் 7-10 வரை இந்தியாவில் இருந்த அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஜினா ரைமண்டோ பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து ஒன்றரை மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது பிரதமர் தெரிவித்த அத்துனை விஷயங்களை சொல்லி வியந்து புகழ்ந்து தள்ளிவிட்டார் அமெரிக்க அமைச்சர்.. 

நான்கு நாள் பயணமாக இந்தியா வந்திருந்த ரைமண்டோ, வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் பியூஷ் கோயலையும் பல அமைச்சர்களையும் சந்தித்தார். இந்தியா-அமெரிக்க மூலோபாய கூட்டாண்மை மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் வணிக ஈடுபாடு குறித்து விவாதித்தனர், இதில் முக்கிய மற்றும் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் முன்முயற்சி (iCET) மற்றும் இந்தோ-பசிபிக் பொருளாதார கட்டமைப்பு (IPEF) பற்றி விவாதிக்கப்பட்டது.

அப்போது பிரதமருடன் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம் பேச வாய்ப்பு கிடைத்ததாக தெரிவிக்கும்   அமெரிக்க அமைச்சர் ஜினா,  இந்தியாவை வல்லரசாக்க அவ்வளவு அர்ப்பணிப்பும், விருப்பத்தையும் வைத்துள்ளார் மோடி. குறிப்பாக தன் மக்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க வேண்டும் என்பதில்  மிகவும் உறுதியாக இருக்கிறார்.இப்ப இருக்க கூடிய தொழிநுட்பத்தை அமெரிக்காவையும்- இந்தியாவும் இணைந்து உலகை வழிநடத்த வேண்டும் என கூறிய மோடி, artificial  inteligence பற்றி மிக அருமையான  விளக்கத்தை கொடுத்து உள்ளாராம். அதாவது..... AI என்றால் அமெரிக்க இந்திய தொழிலநுட்பம் என்ற புதிய விளக்கத்தை பிரதமர் மோடி தன்னிடம் சொன்னதாக பெருமையுடன் சொல்லி உள்ளார் அமெரிக்க அமைச்சர்.

கலாச்சாரம், பாரம்பரியம், மற்றம் கொண்டாட்டங்கள் என இந்தியா மிக சிறப்பாக உள்ளது. அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையேயான உறவை மேலும் ஆழப்படுத்த சரியான நேரம் இது என பெருமையோடு தெரிவித்து உள்ளார் அமெரிக்க அமைச்சர் ஜின்னா ரைமண்டோ.