ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகள் மிக பெரிய அளவில் முதல்வர் ஸ்டாலினுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய அளவில் இல்லையாம் காரணம் பல கோடி ரூபாய் செலவு செய்து பெற்ற வெற்றி என்பதாலும் மேலும் எதிர்பார்த்த அளவு பல இடங்களில் போதிய வாக்குகள் இல்லாத காரணத்தினாலும் சற்று சுனக்கமாகவே இருந்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.ஈரோடு இடைத்தேர்தலுக்கு பின்னர் பல அமைச்சர்கள் கொடுத்த டேட்டா அடிப்படையில் அதிமுகவிற்கு டெபாசிட் கிடைக்காத நிலை உண்டாகி இருப்பதால்
முதல்வர் ஸ்டாலின் கணித்த நிலையில் அதிமுக டெபாசிட் பெற்று இருப்பதும் மேலும் பல்வேறு சமூகங்களை ஏற்படுத்தியிருந்ததாம். இதனால் சற்று அதிருப்தியில் இருந்த முதல்வர் ஸ்டாலின் தற்போது மிகுந்த குஷியில் இருக்கிறாராம், அதற்கு அதிமுக பாஜக இடையே நடைபெறும் உள்ளடி வேலைகளில் காரணம் என கூறப்படுகிறது.தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு அரசியல் நிலவரம் உள்ளிட்ட முக்கிய விவரங்கள் குறித்து அவ்வப்போது உளவுத்துறை முதல் ஸ்டாலினிடம் அறிக்கை கொடுப்பது வழக்கம், அந்த வகையில் அதிமுக பாஜக இடையே நடைபெறும் உரசல்கள் குறித்து உளவு துறை சில விஷயங்களை கணித்திருக்கிறதாம்.
ஈரோடு இடைத்தேர்தல் தோல்வியை மறைக்க அதிமுக எடப்பாடி பழனிச்சாமி சேர்ந்தவர்கள் பாஜகவிற்கு எதிராக காய்கறி நகர்த்தியதாகவும் ஆனால் பாஜக நேரடியாக அதிமுக மீது கூட்டணி முறியும் அளவிற்கு விமர்சனம் வைப்பார்கள் என எடப்பாடி எதிர் பார்க்கவில்லை என மாநில உளவு துறை கண்டறிந்து இருக்கிறதாம்.அதிமுக பாஜகவை கூட்டணியில் இருந்து வெளியேன்றினாலும் சிறுபான்மை மக்களின் வாக்குகள் பெரிய அளவில் அதிமுகவிற்கு செல்லாது மாறாக பாஜக வலுவாக இருக்க கூடிய கோவை, திருப்பூர், நீலகிரி, இராமநாதபுரம், தூத்துக்குடி, விருதுநகர், சிவகங்கை போன்ற பல மாவட்டங்களில் அதிமுக தோல்வியை தழுவும்.
இதன் மூலம் மும்முனை போட்டி உருவானால் கடந்த முறை கொங்கு மண்டலத்தில் பெற்ற வெற்றியை கூட அதிமுகவால் பெற முடியாது என அழுத்தம் திருத்தமாக தெரிவித்து இருக்கிறதாம் உளவு அமைப்புகள். ஈரோடு இடைத்தேர்தல் முடிவுகளில் சற்று அதிருப்தியில் இருந்த முதல்வர் ஸ்டாலின் அதிமுக பாஜகவை சீண்டுவதை பார்த்து குசியில் இருக்கிறாராம்.
அவன் அவன் எடுக்க கூடிய முடிவுகள் நமக்கு சாதகமாக இருப்பதாக திமுகவினரும் மகிழ்ச்சியில் இருக்கிறார்களாம். எந்த அரசியல் கட்சி தலைவரும் எட்டு தொடர் தோல்விகளுக்கு பிறகு கூட்டணி குறித்து நிதானமாகதான் முடிவு எடுப்பார்கள் ஆனால் எடப்பாடி பழனிசாமி தான் கூட்டணியை உடைத்து வெளியேறுவது எப்படி என புதிய கோணத்தில் யோசித்தி வருவதாக கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.