24 special

மணீஷ் சிசோடியா விவகாரம் மீண்டும் பரபரப்புக்கு உள்ளானது!

Stalin, manish sisodia
Stalin, manish sisodia

மணீஷ் சிசோடியாவை விடுதலை செய்ய வேண்டும் என தமிழக முதல்வர் கேட்ட அடுத்த இரண்டு நாளில் அமலாக்கத்துறை மணீஷ் சிசோடியாவை மீண்டும் கைது செய்த விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 


டெல்லியில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசியல் துணை முதல்வராக இருந்தவர் மணீஷ் சிசோடியா. ஆம் ஆத்மியின் முக்கிய முகங்களில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக பார்க்கப்பட்டவர் டெல்லியின் துணை முதல்வர் மணிஷ் சிசோடியா. இவர் டெல்லியின் கல்வி அமைச்சராகவும் இருந்துள்ளார். அரசியல்வாதி மட்டுமல்ல இவர் ஒரு பத்திரிகையாளரும் கூட. 2015ஆம் ஆண்டில் இருந்து 2023 பிப்ரவரி மாதம் வரை டெல்லியின் துணை முதல்வராக இருந்துள்ளார்.

மணிஷ் சிசோடியா ராஜினாமாவுக்கு காரணம், அவர் மீது சுமத்தப்பட்டுள்ள மதுபான ஊழல் குற்றச்சாட்டு மதுபானக் கொள்கை மூலம் ஊழலில் ஈடுபட்டதாக இவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. கடந்த 26-ம் தேதி, 8 மணி நேர விசாரணைக்கு பிறகு இவரை சிபிஐ கைது செய்தது. நீதிமன்ற அனுமதியுடன், சிபிஐ காவலில் இவரிடம் 7 நாட்கள் விசாரணை நடத்தப்பட்டது. சிபிஐ காவல் முடிவடைந்ததால் சிசோடியா பின்னர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

இதனைதொடந்து தமிழக முதல்வர் ஸ்டாலின் முதல்வர் மணீஷ் சிசோடியவை விடுவிக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்தில், 'மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு டெல்லி துணை முதல்வராக இருந்த மணீஷ் சிசோடியாவை இட்டுக்கட்டிய குற்றச்சாட்டுகளின் பேரில் கைது செய்து, அரசியல் சட்டம் உத்தரவாதம் அளிக்கும் தனிநபர் சுதந்திரத்தை மீறி அவருக்கு வலியையையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியிருப்பது வேதனையும் ஏமாற்றமும் அளிக்கிறது. உரிய சட்ட நடைமுறைகளை மீறி மணீஷ் சிசோடியாவைக் கைது செய்த நாளானது ஒன்றிய பாஜக அரசின் ஆட்சிக்காலத்தின் கருப்பு நாளாகவே நினைவில் கொள்ளப்படும் என்றும் தெரிவித்துக் கொள்கிறேன், மணீஷ் சிசோடியாவை நிபந்தனையின்றி விடுவிக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்' என கடிதம் எழுதியிருந்தார் முதல்வர் ஸ்டாலின். 

மதுபான விற்பனையில் தனியாருக்கு அனுமதி கொடுத்த விவகாரத்தில் ஊழல் நடந்ததாக கூறப்படும் விவகாரத்தில் கடந்த 26-ம் தேதி சிபிஐ விசாரணைக்கு ஆஜரான இவரை சிபிஐ கைது செய்துள்ள நிலையில், இப்போது அவரை அமலாக்கத் துறையும் கைது செய்துள்ளது. டெல்லி திகார் சிறையில் உள்ள அவரை அமலாக்கத் துறை அதிரடியாக கைது செய்துள்ளது.

இதில் அரசியல் கலந்து மணீஷ் சிசோடியாவை விடுவிக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியது அமலாக்கத்துறையை உசுப்பேற்றியது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றர். 

அதற்கு காரணம் கடந்த வாரம் முதல்வர் ஸ்டாலினின் 70வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்எம்சிஏ மைதானத்தில் இன்று நடைபெற்றது. இந்தப் பொதுக்கூட்டத்தில் காஷ்மீரின் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா, உத்தரப்பிரதேசத்தின் முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பிஹாரின் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ், அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இந்தக் கூட்டத்தில் பேசிய தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவரும் காஷ்மீரின் முன்னாள் முதல்வருமான ஃபரூக் அப்துல்லா, தமிழ்நாட்டைக் கட்டமைத்ததைப் போல இந்தியாவைக் கட்டமைக்க மு.க. ஸ்டாலின் முன்வர வேண்டுமென பேசினார். 

இப்படி தேசிய தலைவர்கள் முதல்வர் ஸ்டாலினுக்கு தேசிய அரசியல் ஆசையை தூண்டிவிட்ட காரணத்தினால் மணீஷ் சிசோடியா விவகாரத்தை கையில் எடுத்து தேசிய அரசியலில் இறங்கிவிடுவோம் என பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதினார், இப்படி முதல்வர் ஸ்டாலினின் தேசிய அரசியல் ஆசை சிபிஐ, அமலாக்கத் துறையை உசுப்பேத்தி விட்டு இப்படி மீண்டும் மணீஷ் சிசோடியா கைது செய்யும் அளவிற்கு கொண்டு வந்து விட்டது என ஆம் ஆத்மி கட்சி தரப்பில் தற்பொழுது புலம்பல்கள் அதிகமாகி உள்ளன.