24 special

நட்டா முக்கியமான மூன்று விஷயங்கள்...! அண்ணாமலை, இவை குறித்து ஆலோசனை!

Nadda ,annamalai
Nadda ,annamalai

பாஜக தேசிய தலைவர் நட்டா கட்சி நிகழ்ச்சியில் பங்கேற்க தமிழகம் வருகை தந்து இருந்தார், கிருஷ்ணகிரிக்கு வருகை தந்த நட்டா தொடர்ச்சியாக பாஜக சார்பில் கட்டப்பட்ட புதிய கட்சி அலுவலகத்தை திறந்து வைத்தார், அலுவலகத்தை திறந்துவைத்த நட்டா, அதன் பிறகு கட்சி கூட்டத்தில் பங்கேற்றார்.


அதிமுக பாஜக கூட்டணி உரசல் உண்டான நிலையில் அது குறித்து சூசகமாக நட்டா ஏதும் கருத்து தெரிவிப்பாரா என்று ஊடகங்கள் எதிர்பார்த்த நிலையில், தமிழகத்திலும் தாமரை ஆட்சி மலரும் என கூறி இருந்தார் நட்டா பெரிதாக அதிமுகவை விமர்சனம் செய்யவில்லை, இந்த சூழலில் தொடர்ச்சியாக தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வரவேண்டும் என்றால் அதற்கு என்ன நிலைப்பாடு எடுப்பது என தீர்க்கமாக முடிவு செய்து அண்ணாமலை நட்டாவிடம் மூன்று முக்கிய விஷயங்களை பகிர்ந்து இருக்கிறாராம்.

அதில் தமிழக அரசியல் தேசிய அரசியலை காட்டிலும் சற்று வித்தியாசமானது, தமிழுக்கு முன்னுரிமை தமிழக அரசியல் நகரவுகளுக்கு முன்னுரிமை கொடுத்தால் மட்டுமே இங்கு ஆட்சியை பிடிக்க முடியும், மேலும் கூட்டணி கட்சிகளிடம் தேசிய தலைவர்கள் சீட் எண்ணிக்கை பேரம் பேசுவதை நிறுத்தி அதற்கான வேலையை மாநில நிர்வாகிகளிடம் கொடுத்தால் நிச்சயம் பெற வேண்டிய இடங்களை பெற்று விடுவோம்.

மூன்றாவதாக வருகின்ற 2024நாடாளுமன்ற தேர்தல் பிரதமர் மோடிக்கான தேர்தல் எனவே எப்படி அதிமுக கடந்த சட்டமன்ற தேர்தலில் தங்களுக்கான தேர்தல் என கூறி பல்டி அடித்ததோ அதே போன்று இந்த முறை நமக்கான தேர்தல் என்பதை குறிப்பிட்டு குறைந்தது 15-18 சீட்கள் வாங்க வேண்டும்.

இதற்கு மாநிலத்தில் முழுமையான ப்ரீடம் தேவை என சுட்டி காட்டி இருக்கிறாராம் அண்ணாமலை, இவை குறித்து முழுமையாக ஆலோசனை செய்து விரைவில் தெரிவிப்பதாக நட்டா கூறியதாக கூறப்படுகிறது. தமிழகம் உள்ளிட்ட தென் மாநிலங்களில் மக்களின் மதிப்பை பெற்று வெற்றி பெற வேண்டும் என்பதில் மிகுந்த கவனமாக செயல்பட தொடங்கி இருக்கிறதாம் பாஜக.

அதற்காக இனி வரும் நாட்களில் ஒவ்வொரு நாட்களையும் பயனுள்ள நாளாக மாற்றுவதுடன் களத்தை தனித்து சந்திக்கவும் தயாராகி இருக்கிறதாம் தமிழக பாஜக.

பாஜகவை சேர்ந்தவர்களை அதிமுக உள்ளே இழுப்பது  குறித்து பிரதமர் மோடி மற்றும் அமிட்ஷா இருவருக்கும் சென்ற உளவுத்துறை தகவல் பல்டி அடித்த எடப்பாடி.. என்ன நடந்தது என அடுத்த வீடியோவில் வெளியிட இருக்கிறோம் மறக்காமல் பக்கத்தை பின்பற்றி கொள்ளவும்.