தமிழகத்தில் திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் மூன்றாண்டு நிறைவடைந்த நிலையில், முதல்வர் மு.க ஸ்டாலின் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இது திமுக நிர்வாகிகளுக்கு மகிழ்ச்சியை கொடுத்தாலும் பாமர மக்களுக்கு சோகத்தை கொடுத்துள்ளது. மேலும், இணையத்தில் திமுக ஆட்சி குறித்த விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளது.
2021ம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி முதலமைச்சராக ஸ்டாலின் பொறுப்பேற்றார், இந்நிலையில், ஆட்சிக்கு பொறுப்பேற்று மூன்றாண்டு கடந்த நிலையில், ஸ்டாலின் அவர்கள் இணயத்தில் மூன்றாண்டு ஆட்சியின் சாதனை குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் மகளிர் உரிமை தொகை குறித்து நெகிழ்ச்சி அடைந்துள்ளது தொடர்பாக கருத்துக்களை தெரிவித்துள்ளனர். மேலும், சுயஉதவிக்குழு மூலம் பெண்கள் முன்னேறி இருப்பதாகும், மகளிருக்கு இலவச பேருந்து என்பது அனைத்து மக்களுக்கும் பயன் பட்டுள்ளதாகவும் கூறி ஒரு காணொளி ஒன்றை அரசு வெளியிட்டுள்து. இந்த வீடியோவுக்கு சமூகவலைத்தளத்தில் நெட்டிசன்களால் விமர்சிக்கப்பட்டு வருகிறது.
ஒரு பக்கம் திமுகஆட்சிக்கு வருவதற்கு முன்பாக ஸ்டாலின் அவர்களும், உதயநிதி அவர்களும் ஏகப்பட்ட உருட்டுகளை மக்களிடம் வாரி வாழங்கினார் என்பது தற்போது மீண்டும் ஸ்டாலின் ஞாபகபடுத்துவதாக கூறி வருகின்றனர். அந்த வகையில், ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததும் கல்வி கடன் ரத்து, அனைத்து பெண்களுக்கும் மாதம் 1000 ரூபாய், இலவச பேருந்து, டாஸ்மாக் கடைகள் குறைப்பு என பல வாக்குறுதிகளை மக்களுக்கு கொடுத்து கவர்ந்தது என்றே சொல்லலாம். அதேபோல் அப்பனுக்கு தப்பாது என்பது போல் உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் சென்ற இடமெல்லாம் செங்கலை கையில் கொண்டு பிரசாரம் செய்தார்.
அதேபோல், நீட் தேர்வு ஒழிக்கும் ரகசியம் என்னிடம் உள்ளது என அவர் பிரசாரம் செய்து வந்தார். பெண்களிடம் கூட்டுறவு வங்கியில் நகைகளை அடமானம் வையுங்கள் நாளை நமது ஆட்சி தான் என்றும் நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என் தொடர் பிரச்சாரங்களை செய்து வந்தார். இது எல்லாம் மக்களிடத்தில் கவர்ந்தநிலையில், மக்களுக்கும் திமுகவை தேர்தடுத்தனர். ஆனால், இதுவரை மூன்றாண்டு ஆட்சி நிறைவடைந்த நிலையில் மக்கள் பிரச்சனை தீர்ந்த பாடு இல்லையென்று புலம்பி வருகின்றனர் மக்கள்.
இணையத்தில் இன்று அதிகாமாக பேசப்படுவது, டாஸ்மாக் கடைகள் ஒழிப்போம் என்று பேசிய ஸ்டாலின், கனிமொழி அவர்கள் வீரன் என்று புது சரக்கை அறிமுகப்படுத்தி மக்களை மேலும் போதைக்கு தான் அடிமையாக்கியது. தற்போது மேலும், மதுவை உற்பத்தி செய்ய ஆணையம் பிறப்பித்துள்ளது. இது தான் "சொல்லாட்சி அல்ல, செயலாட்சியா" என்ற கேள்வியை எழுப்பி வருகின்றனர். மூன்றாண்டு என்பது வீரனே சாட்சி என மீம்ஸ் போட்டு வருகின்றனர். அரசியல் விமர்சகர்களோ கூறுவது, கல்வி கடன் ரத்து என்பது பெற்றோர்களை நம்ப வைத்து கழுத்தறுக்கப்பட்ட செயல், அனைத்து மக்களுக்கும் உரிமை தொகை என்று சொன்ன ஸ்டாலின் 2 வருடம் கழித்தே கொண்டுவந்தார் அதேபோல் அனைவருக்கும் இல்லை என திமுக ஆட்சியின் செயலை சராமரியாக விமர்சனம் செய்து வருகிறார்கள்.
ஸ்டாலின் நிர்வாகத்திறனை சரியாக பயன்படுத்தி கொள்வதில்லை என்றும் வரலாற்றில் இப்படி ஒரு ஆட்சி இல்லை என்றும் அப்பன், மகன் இருவரும் தமிழ்நாட்டை சொந்தமாக்கி கொண்டாடி வருகின்றனர் என அரசியல் விமர்சகளால் கூறப்படுகிறது. இதுவே திமுகவின் கடைசி ஆட்சியாக இருக்கக்கூடும் என்றும் கூறுகிறார்கள். மக்கள் கஷ்டப்பட்டு வருவது தான் இந்த ஆட்சியில் மக்கள் அனுபவிக்கும் முழுமையான திட்டம் என்று கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.