Cinema

சுந்தர் சி திரைப்படத்தில் விஜய் நடிக்காததற்கு இதுதான் காரணமா?

Sundar C
Sundar C

90களில் வெளியாகிய சில படங்கள் என்ன கதை களத்தை கொண்டுள்ளது என்பதே தெரியாமல் 100 நாட்களுக்கு மேலாக திரையரங்குகளில் ஓடி மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது அப்படிப்பட்ட பல படங்களில் மணிவண்ணன் மற்றும் சத்யராஜின் கூட்டணியை காணலாம். இவ்விருவரின் கூட்டணி என்பது என்றுமே ஒரு வெற்றிக்கான கூட்டணி என்றும் அதன் கவுண்டமணி மணிவண்ணன் மற்றும் சத்யராஜ் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து விட்டால் அந்த படபிடிப்பு தளமே அவ்வளவுதான் என்ற வகையில் கலகலப்பாக இருக்கும் என்றும் கூறுவார்கள் இந்த ஒரு கூட்டணி எப்படி ஒரு நல்ல வெற்றிக் கூட்டணியாக அமைந்ததோ அதேபோன்று மணிவண்ணன், கவுண்டமணி மற்றும் கார்த்திக் மூவரின் கூட்டணியும் மற்றொரு பக்கம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் வெற்றியையும் கண்டு வந்தது.


அப்படி இவர்கள் மூன்று பேரும் இணைந்து நடித்த ஒரு படமாக பார்க்கப்பட்டது தான் உள்ளத்தை அள்ளித்தா! இந்த படம் சபாஷ் மீனா என்ற தமிழ் படத்தையும் அந்தஸ் அப்னாஅப்னா என்ற ஹிந்தி படத்தையும் தழுவி எடுக்கப்பட்ட தாக இருந்தாலும் உள்ளத்தை அள்ளித்தா அன்றைய காலத்தில் அதிக மக்களால் ரசித்து பார்க்கப்பட்ட படம். இந்த படம் முழுக்க முழுக்க ஊட்டியில் எடுக்கப்பட்டதோடு கதை காட்சிகள் என அனைத்துமே சுவாரசியமும் நகைச்சுவையும் இருந்ததாக இருக்கும் பாடல்களை பார்க்கும் பொழுது இக்காலத்தில் உள்ள பல சூப்பர் ஹிட் பாடல்களைப் போன்று அப்படத்தின் பாடல்கள் இருக்கும்! இந்த படத்தில் நடித்த அனைவருக்குமே ஒரு பிரேக்கை கொடுத்த படமாகவும் உள்ளத்தை அள்ளித்தா அமைந்தது. ஆனால் இந்த படம் கார்த்திக் மற்றும் ரம்பாவின் முன்னணி கதாபாத்திரங்களில் வெளியானதற்கு பின்னால் ஒரு கதையை இருக்கிறது அதாவது முதலில் இந்த படத்தின் ஹீரோவாக விஜய் தான் நடிக்க உள்ளதாகவும் பேசப்பட்டதாம் அதே சமயத்தில் ரம்பாவிற்கு பதிலாக ரோஜா, ரவளி ஆகிய இருவர்களில் ஒருவர்தான் நடிக்க இருந்ததாகவும் கூறப்படுகிறது.

ஆனால் இந்த மூன்று பேருக்குமே தேதிகளில் பிரச்சனை ஏற்பட்டதாலே கார்த்திக் மற்றும் ரம்பாவின் நடிப்பில் இப்படம் எடுக்கப்பட்டு வெளியானதாக கூறப்படுகிறது.இந்த நிலையில் உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தில் விஜய் நடிக்காதது குறித்த ஒரு பரபரப்பான தகவலை இப்படத்தின் இயக்குனர் சுந்தர் சி கூறியுள்ளார். அதாவது தற்போது சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை நான்கு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி நல்ல வசூல் வேட்டையை பெற்று வருகிறது இதனால் தனியார் பத்திரிகை தொலைக்காட்சி ஒன்றிற்கு பேட்டி கொடுத்த சுந்தர் சி பத்து நாட்கள் வித்யாசத்தில் விஜயுடன் நடிக்கும் வாய்ப்பை இழந்தேன் என்று கூறினார்.

மேலும் உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் விஜய் உடன் தான் நடக்க வேண்டியது ஆனால் என் படத்தின் தயாரிப்பாளர் ஜோதிடங்களில் நம்பிக்கை கொண்டவர் அதனால் ஜனவரி 15 1996 இல் தான் படம் வெளியாக வேண்டும் என்ற தீர்மானத்தில் அவர் இருந்து விட்டார் ஆனால் அதே தேதியில் விஜயின் கோயம்புத்தூர் மாப்பிள்ளை படமும் வெளியாக இருந்தது அதனால் விஜயின் தந்தை பொங்கல் ரிலிஸ்க்கு கோயம்புத்தூர் மாப்பிள்ளை படத்திற்கு நாங்கள் ஒப்புதல் அளித்து விட்டோம் அதனால் பத்து நாள் கழித்து உள்ளத்தை அள்ளித்தா திரைப்படத்தை நீங்கள் வெளியிட்டால் விஜய் நடிப்பார் என்று கூறினார், ஆனால் அதற்கான வாய்ப்புகள் எங்களிடம் இல்லை. ஆகவே கார்த்திகை வைத்து நாங்கள் இந்த படத்தை எடுத்தோம் என்று கூறியுள்ளார். மேலும் இது குறித்து, கோயம்புத்தூர் மாப்பிள்ளை திரைப்படத்தை விட உள்ளத்தை அள்ளித்தா திரைப்படம் நல்ல வசூலையும் மக்கள் மத்தியில் நல்ல  வரவேற்பையும் பெற்றது அதன் காரணமாகவே அதற்குப் பிறகு விஜய் உடன் இணைந்து பணியாற்றும் வாய்ப்பை சுந்தர் சி'க்கு விஜய் தந்தை ஏற்படுத்தவில்லை என்று சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது!