நம்முடைய முன்னோர்கள் ஒவ்வொரு தொழிலுக்கும் ஒவ்வொரு விதமான வரையறையை வைத்திருப்பார்கள், தென்னை தோப்பு மற்றும் வாழை தோப்பு இதைத்தவிர மற்ற விவசாயம் மற்றும் தொழில்களை மேற்கொள்பவர்களுக்கும் ஒவ்வொரு வரையறைகள் உள்ளது அவற்றை நாமே கேள்விப்பட்டிருப்போம் அந்த வகையில் ஒருவர் பால் வியாபாரம் செய்தால் அதன் மூலம் நஷ்டத்தை பெறாமல் அடுத்தடுத்த நிலைகளில் அதிக பணத்தை அவரால் சம்பாதிக்க முடியும் என்பது பேசப்படும் ஒரு நிதர்சனமான பேச்சு! ஏனென்றால் பசுவிடமிருந்து கறக்கப்படும் பால் பருகுவதற்கு பயன்படுத்தப்படுகிறது மேலும் பால் மூலம் தயிர் வெண்ணெய் மற்றும் நெய் என்ற ஒவ்வொரு படிகளும் உள்ளது இதில் கடைசி படியை அடையும் பாலானது அதிக விலைக்கு விற்கப்பட்டு விற்போரின் லாபத்தை இருமடங்காக்குகிறது என்பதை அறிவோம்!
அப்படிப்பட்ட ஆரோக்கியமான நெய்யில் என்ன ஆற்றல் இருக்கிறது என்று பார்த்தால், ஆற்றல் நிறைந்த உணவாக கருதப்படுகின்ற மெய்யானது செரிமானத்திற்கு முக்கிய பங்கையும் வகிக்கிறது! அதோடு நீண்ட நேரத்திற்கு நம்மளை சோர்வடையாமல் இருக்கவும் செய்கிறது! மேலும், உணவிற்கு நல்ல சுவையையும் நெய் வழங்குகிறது. ஆரோக்கியத்தில் எப்படி பால் முக்கியமானதாக கருதப்படுகிறது அதேபோன்று நம் நாடு முழுவதும் பாலானது மிகவும் புனிதமாகவும் போற்றப்படுகிறது. ஏனென்றால் பசுவின் மடியில் ஏழு சமுத்திரங்கள் உள்ளதால் இறைவனுக்கு பால் அபிஷேகம் செய்ய பசுவின் பால் பயன்படுகிறது இதன் மூலம் ஏழு சமுத்திரங்களாலும் இறைவனுக்கு அபிஷேகம் செய்த புண்ணியம் கிடைக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. இத்தனை சிறப்புகளையும் பெருமைகளையும் ஆரோக்கியத்தையும் நழுகி வருகின்ற பால் மற்றும் நெய்யானது முக்கிய பூஜைகளில் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் தற்போது கடைகளில் விற்கப்படும் நெயில் எது தரமானது என்று தேடி தேடி நம் மூளை குழம்பிவிடுகிறது!
அதனால் பலர் வீட்டிலேயே நெய் தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டு விடுகிறார்கள். ஏனென்றால் முதலில் கடந்த சில வருடங்கள் பின்னோக்கி செல்லும் பொழுது தற்போது இருக்கும் அதிக வகையான நெய்கள் அன்று இருந்ததில்லை பலர் தங்களது வீட்டிலேயே நெய் தயாரித்துள்ளனர். எப்படி என்றால்? பசும்பாலை காய்ச்சி குளிர வைத்து அதன் மேல் இருக்கும் கிரீமை மட்டும் தனியாக எடுத்து சில நாட்களுக்கு சேகரித்து வருவார்கள் அதற்குப் பிறகு அதில் சிறிதளவு தயிரை சேர்த்து சில மணி நேரங்கள் வெளியில் வைத்துவிட்டு பிறகு மீண்டும் இரவு முழுவதும் அதனை குளிருட்டுவார்கள். பிறகு அதிலிருந்து வெண்ணெய் பிரித்தெடுக்கப்பட்டு அதனை வானிலையில் கொதிக்க வைத்து பிறகு தங்க நிறத்தில் வருகின்ற நெய்யை சமையலுக்கும் உணவிற்கும் பயன்படுத்துகிறார்கள்.
இப்படி பல நிலைகளை கடந்து வரும் நெயில் கடைகளில் விற்கப்படுவது பல மோசடிகள் மற்றும் கலப்பட நடப்பதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்று வைரல் ஆகி வருகிறது. அதில் ஒரு பெண் நெய் நீங்கள் வாங்குவதற்கு கடைக்கு சென்றால் எனக்காக ஒரு கேள்வியை மட்டும் கேட்டு பிறகு வாங்குங்கள், விற்கப்படும் நெய் பச்சைப் பாலில் இருந்து எடுக்கப்பட்ட நெய்யா அல்லது காய்ச்சின பாலில் இருந்து எடுக்கப்பட்ட நெய்யா என்று கேளுங்கள் பெரும்பாலான இடங்களில் பச்சை பாலில் இருந்து எடுக்கப்பட்ட நெய் தான் விற்கப்படுகிறது அதனை நெய் என்றும் கூறக்கூடாது கொழுப்பு தான் அது ஏனென்றால் பச்சை பாலில் இருந்து இரண்டு அவுட்புட் கிடைக்கும் அதில் ஒன்றுதான் நம்மிடம் மெய் என்று விக்கப்படுகிற கொழுப்பு மற்றொன்று வெறும் பால் அதனை நீங்கள் கேட்கும் விலைக்கு ஏற்றபடி பால் பவுடரை அதில் கலந்து அவர்களால் விற்க முடிகிறது இதன் மூலம் இரண்டு லாபம் கிடைக்கிறது அதற்காகவே தற்போது பலர் பச்சை பாலில் இருந்து இதனை மேற்கொள்கிறார்கள் என்று அதிர்ச்சி தரக்கூடிய தகவலை கூறியுள்ளார். இது பல குடும்பப் பெண்களை யோசிக்கவும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது!