24 special

சிக்கியது சீமான், விஜயலட்சுமி வீடியோ!....உடன்பிறப்புகள் செய்த செயல்!

seeman, veeralakshmi
seeman, veeralakshmi

நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளரும், நடிகை விஜயலட்சுமியும் இருக்கும் வீடியோ என்னிடம் உள்ளதாக சீமானின் நெருங்கிய ஒருவர் தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமிக்கு தகவல் தெரிவித்துள்ளார்.நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், நடிகை விஜயலட்சுமி சம்பவம் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது, முன்னதாக நடிகை விஜயலட்சுமி தன்னை சீமான் திருமணம் செய்து கொண்டார், நாங்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ்ந்தோம் என்று கூறினார்.  பின்னர் சென்னை காவல் நிலையத்தில் சீமானுக்கு எதிராக புகார் அளித்தார். அதில், சீமான் என்னை ஏமாற்றியதாகவும், கருக்கலைப்பு செய்ததாகவும், உள்ளிட்ட பல புகார்களை அதில் குறிப்பிட்ட்டு இருந்தார். 


இதனையடுத்து சீமானுக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் நடிகை விஜயலட்சுமிக்கு தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி ஆதரவாக இருந்தார். நடிகை விஜயலட்சுமியை தமது கட்டுப்பாட்டிலும் வைத்திருந்தார். இந்த புகாரின் அடிப்படையில் விஜயலட்சுமியிடம் போலீசார் விசாரணை நடத்தி மருத்துவ பரிசோதனை நடத்தினர். மேலும் சீமானுக்கும் போலீசார் சம்மன் அனுப்பினர். ஆனால் திடீரென நடிகை விஜயலட்சுமி மீண்டும் புகாரை வாபஸ் பெற்றுக் கொண்டு பெங்களூர் சென்றார். இதனால் சீமான் தனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடிகை விஜயலட்சுமி நடந்து கொண்டதாக அவர் மீது புகார் தொடுத்து 1கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டும் என்று சீமான் வழக்கு தொடர்ந்தார்.

இதனையடுத்து நாம் தமிழர் கட்சியினருக்கும் வீரலட்சுமிக்கும் இடையே கருத்து மோதல் தொடர்ந்தது. நடிகை விஜயலட்சுமிக்கு ஆதரவாக வந்த வீரலட்சுமி தற்போது பிரச்சனையை தலையில் ஏற்றியுள்ளார். இப்பொது நடிகை விஜயலட்சுமி வேடிக்கை பார்த்து வருகிறார். ரலட்சுமிக்கு எதிராக சீமானும், சீமானுக்கு எதிராக வீரலட்சுமியும் மான நஷ்ட ஈடு வழக்கு நோட்டீஸ் கொடுத்ததாகவும் தகவல்கள் வெளியானது. தற்போது தமிழர் முன்னேற்றப் படை தலைவர் வீரலட்சுமி இணையத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் தெரிவிப்பது, நாம் தமிழர் கட்சியில் சீமானுக்கு மிக நெருக்கமான, சீமானுடனே இருக்கக் கூடிய ஒருநபர்தான் தம்மிடம் தொலைபேசியில் பேசுவதாகவும் சீமானும் விஜயலட்சுமியும் இருக்கும் வீடியோவும், சீமானும் விஜலயலட்சுமியும் பேசும் முக்கியமான ஆடியோவும் என்னிடம் இருக்கிறது.

உங்களுக்கு அனுப்புகிறேன் அதனை வைத்து கொண்டு சீமான் மீது நடவடிக்கை எடுக்க விஜயலட்சுமிக்கு நீதி வாங்கி கொடுங்க என்று நாம் தமிழர் கட்சி சீமான் உடன் இருக்கும் முக்கிய நபர் நீங்கள் தான் சொல்லறீங்க.  இதனை எடுத்துக்கொண்டு கமிஷனர் அலுவலகத்தில் புகார் கொடுத்தா, எனக்குப் பின்னால் திமுக இருக்கிறது என நாம் தமிழர் கட்சியினர் திசை திருப்புவதாகவும் வீரலட்சுமி அதில் குற்றம்சாட்டி இருக்கிறார். வீரலட்சுமி பேசும் இந்த காணொலி சமூக தளத்தில் வைரலாகி வருகிறது. இந்நிலையில் சீமான்  உடன் இருக்கும் தம்பிகளே இப்படி அண்ணனை மாட்டி விடுவதாக சமூக தளத்தில் நெட்டிசன்கள் தங்களது கமெண்டை பதிவிட்டு வருகின்றனர்.