24 special

அவசர அவசரமாக உளவுப்படையை தமிழகம் முழுவதும் இறக்கிய திமுக!

mkstalin, udhayanithi
mkstalin, udhayanithi

2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு குறைந்தது இரண்டு மாதங்களில் உள்ளதால் தேர்தல் பணிகள் அனைத்தையும் அனைத்து கட்சிகளும் தீயாக செய்து வருகின்றனர். ஏற்கனவே திமுக பெரிதும் நம்பிக்கை வைத்திருந்த INDI கூட்டணியும் தற்போது பிளவுபட்டு அந்தரத்தில் தூங்கிக் கொண்டிருக்கின்ற காரணத்தினால் தமிழகத்தில் நிச்சயமாக தனது அதிகாரத்தை நிலை நிறுத்த உறுதி பூண்டு முழு வேச்சல் தேர்தல் பணிகளை செய்து வருகிறது. மூத்த அமைச்சர்களை மக்களை சந்திக்க விட்டால் ஏற்கனவே இருந்த அதிருப்தியை இன்னும் அதிகமாக்கி விடுவார்கள் என்ற காரணத்திற்காக அமைச்சர் உதயநிதி ஸ்டாலினையே பல நிகழ்ச்சிகள் மற்றும் மக்களை நேரடியாக சந்திக்கும் பொது நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்ள வைக்கிறார் முதல்வர் மு க ஸ்டாலின்! தற்போது ஸ்பெய்ன் சென்று வந்திருந்தாலும் தமிழகத்தில் அவர் இல்லாத காலங்களில் நடந்த சர்ச்சைகளை எப்படி தீர்க்கப் போகிறோம் என்ற குழப்பத்தில் தற்போது ஒரு செயலில் ஈடுபட தொடங்கியுள்ளார்.


அதாவது தேர்தலை எதிர்கொள்ளும் முன் தேர்தல் நிலவரம் எப்படி இருக்கிறது தேர்தலுக்குப் பின் இந்த மாதிரி உள்ளது எந்த கட்சி எந்த நிலையை பெறும் என்பது குறித்த பல புதிரான கேள்விகளுக்கு விடை கிடைக்க வேண்டும் என நினைத்துள்ளார் அதனால் கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் கலந்தாலோசித்து தற்பொழுது தமிழக முழுவதும் கணக்கெடுப்பு எடுக்க அறிவுறுத்தி உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது தமிழக உளவுத்துறை போலீசார் தமிழக முழுவதும் சர்வே எடுக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர், ஆட்சியின் மேல் இடத்தில் இருந்து தேர்தல் போக்கு மற்றும் தேர்தல் நிலவரம் குறித்து பல ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் அந்த ஆலோசனைகளின் படி பல கேள்விகளை உளவுத்துறை தலைவர் முன்வைத்து அந்த கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் வகையிலான கணக்கெடுப்பில் உளவுத்துறை போலீசார் இறங்கி உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால் இதற்கு முன்பாகவே தனியார் மற்றும் கட்சியின் மேல் இடத்தில் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் சர்வே எடுக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தற்பொழுது உள்ள நிலவரத்தை கண்டு கொள்வதற்கு உளவுத்துறை போலீசார் இந்த சர்வேயில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் சில குறிப்பிட்ட பகுதிகளை தேர்ந்தெடுத்து சர்வே எடுக்கப்பட்ட வருவதாக கூறப்படுகிறது.

 மேலும் இந்த கணக்கெடுப்பில் 51 கேள்விகளை உளவுத்துறை போலீசார் முன்வைத்து கேட்பதாகவும் இந்த 51 கேள்விகள் மூலம் புதிராக இருக்கும் கேள்விகள் அனைத்திற்கும் முறை கிடைத்துவிடும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளது அதோடு இந்த 51 கேள்விகளின் பட்டியலில் தொகுதி எம்பிகள் தொடர்ச்சியாக மக்கள் பணியில் ஈடுபடுகிறார்களா? மழை உள்ளிட்ட பேரிடர் காலங்களில் மக்களை சந்திக்க வந்தார்களா? பொது நிகழ்ச்சிகளில் எம்பிகள் வருவதை காண முடிந்ததா? அவர்களை எளிதில் அணுக முடிந்ததா? ஒரு தொகுதியில் தீர்க்கப்படாத பிரச்சனை என்ன அது எம் பி என் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டதா?  தமிழகத்தில் உண்மையான எதிர்க்கட்சியாக செயல்படும் இயக்கம் எது? என பல கேள்விகள் வரையப்பட்டுள்ளது. அது மட்டும் இன்றி தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி குறித்து என்ன நினைக்கிறீர்கள்? அண்ணாமலையின் செயல்பாடு எப்படி உள்ளது? அவருடைய செயல்பாடுகளை ஆதரிக்கிறீர்களா அல்லது வெறுக்கிறீர்களா? மத்திய அரசு திட்டங்களால் ஏதேனும் பயன் உள்ளதா? என பாஜக குறித்தும் அண்ணாமலை குறித்தும் மத்திய அரசு குறித்த கேள்விகளையும் இந்த பட்டியலில் உளவுத்துறை போலீசார் செய்துள்ளனர். அதோடு நடிகர் விஜய் குறித்த கேள்விகளும் அவர் கட்சி துவங்கும் பட்சத்தில் அவரது ஆதரவு என்ன? என்ற கேள்வி இடம் பெற்றுள்ளது என்றும் தகவல்கள் கிடைத்துள்ளது.