தமிழக பாஜக குறித்து அதிமுகவை சேர்ந்த ஜெமிலா தனது கருத்தை பதிவு செய்துள்ளார், ஒரு அரசியல் பார்வையாளராக அண்ணாமலை மிக சிறப்பாக செயல்படுகிறார் எனவும் பாஜக வளர்ச்சியை தடுக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார், இது குறித்து ஜெமிலா தெரிவித்த கருத்துக்கள் பின்வருமாறு :-
இப்தார் நோன்பு நிகழ்வில் கலந்து கொண்ட தமிழக பாஜக தலைவர் உரை பாஜக தலைவர்களின் கடந்த கால பேச்சுகளுக்கு எதிரானது. அதே நேரத்தில் அவரது பேச்சு சிறுபான்மை மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.
நான் பாஜக வில் பயணித்த நாட்களில் இன்று திரு.அண்ணாமலை பேசிய கருத்துகளை நானும் பல மேடைகளில் பேசியிருக்கிறேன். இப்படிப்பட்ட அரசியலை பாஜக முன்னெடுக்குமானால் தமிழகத்தில் பாஜக வின் வளர்ச்சியை யாராலும் தடுக்கமுடியாது. திராவிட மாடல் அரசியலை பாஜக கையில் எடுக்க ஆரம்பித்திருக்கிறது.
“இன்ஷா அல்லா”எனத்தனது உரையை முடித்த திரு.அண்ணாமலை மிகச்சரியாக தன் அரசியல் நகர்வை முன்னெடுக்கிறார். குறிப்பு : அரசியல் பார்வையாளராக இக்கருத்தைப்பதிவிடுகிறேன் என குறிப்பிட்டுள்ளார்,
அண்ணாமலையின் செயல்பாடுகள் தற்போது அதிகமான வேகத்தில்l பொதுமக்களை கவர்ந்து வரும் சூழலில் மாற்று கட்சியை சேர்ந்தவர்கள் வெளிப்படையாக அண்ணாமலையை வாழ்த்தி பேசும் நிலைக்கு வந்திருப்பது தமிழகத்தில் பாஜகவை சரியான திசையில் அண்ணாமலை கொண்டு செல்வதாகவே பார்க்க படுகிறது.