Cinema

அண்ணாமலைக்கு எதிராக நடிகர் "பொன்வண்ணன்" தீட்டியது புஸ்வானமானது...!

actor ponvannan
actor ponvannan

அண்ணாமலைக்கு சவால்விடுத்து விசிக நிர்வாகிகள் மண்ணை கவ்வி நிற்பது ஒரு புறம் என்றால் அதனை இம்சை அரசன் புலிகேசி பாணியில் ஓவியம் வரைந்து தற்போது பெரும் மண்ணை கவ்வி நிற்கிறார் பொன்வண்ணன் என்ற அரசியல் நடிகர்.


தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை விசிக நிர்வாகி சங்க தமிழன் என்பவர் தொலைபேசியில் தொடர்புகொண்டு நாங்கள் உங்கள் அலுவலகத்தில் வந்து அம்பேத்கர் இந்து மதம் குறித்து தெரிவித்த கருத்துக்கள் உடைய புத்தகத்தை கொடுக்க வேண்டும் என கேட்டிருந்தார்.



அதற்கு அண்ணாமலையும் நான் 24 மற்றும் 25 ஆகிய தேதிகளில் பிஸி 26-ம் தேதி அலுவலகம் வாங்க அண்ணா கூடவே நானும் இந்துத்துவ அம்பேத்கர் என்ற புத்தகத்தை தருகிறேன் படியுங்கள் என சொல்லிவிட்டு செல்போனை வைத்தார், அவ்வளவுதான் பாக்கி, சங்க தமிழன் குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சிலரும்.,

பாஜக எதிர்ப்பு அரசியல் செய்யும் அரசியல் கட்சிகளும் ஓவர் பில்ட் டப் கொடுத்தனர், இந்த சூழலில் தான் திரைப்பட நடிகர் பொன்வண்ணன் சிறுத்தை மற்றும் ஆட்டுக்குட்டி ஓவியங்களை வரைந்து இரண்டும் மோதி கொள்வது போல் வரைந்து இருந்தார், இந்த ஓவியத்திற்கு சங்க தமிழனும் நன்றி தெரிவித்து இருந்தார்.

இந்த சூழலில் இன்று காலை இம்சை அரசன் படத்தில் ஒரு காட்சியில் வடிவேலு வெள்ளை கொடியை காட்டி தன் மீது போர் தொடுக்க வந்த வல்லவராயனை சமாதானம் செய்வார், அதே போல் இன்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், சங்க தமிழன் உள்ளிட்ட யாரையும் பாஜக அலுவலகம் செல்ல கூடாது என கூறிவிட்டாராம்.

இதனால் பொன்வண்ணன் போன்றவர்கள் ஓவர் பில்ட்டப் கொடுத்து வரைந்த ஓவியங்கள் அத்தனையும் வீணாய் போய்விட்டது, உண்மையான ஆட்டு மந்தை யார் என இப்போது தெரிகிறதா என பாஜகவினர் வைத்து செய்து வருகின்றனர். வாயால் வடை சுடுவது யார் வேண்டும் என்றாலும் சுடலாம் ஆனால் சவால் விடுத்து அதனை நிறைவேற்றுவதுதான் முக்கியம் என பலரும் விசிக மற்றும் ஓவியம் வரைந்த பொன்வண்ணன் போன்றோரை வெளுத்து எடுத்து வருகின்றனர்.