24 special

திருமணமான நான்கே மாதத்தில் நடந்த சம்பவம்!!.... வெடித்த புகைச்சல்... இந்தியன் 2 நடிகைக்கு இப்படி ஒரு பிரச்சனையா?

RahulPreetSingh
RahulPreetSingh

தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என அனைத்து திரையுலகிலும் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கும் ரகுல் பிரீத் சிங் தமிழில் அருண்விஜய் நடிப்பில் வெளியான தடையறத் தாக்க படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படத்திற்குப் பிறகு தமிழில் பெரிய வரவேற்பை பெறாத ரகுல் தெலுங்கு, கன்னடம், ஹிந்தி பக்கம் தனது கவனத்தை செலுத்தி வந்த நிலையில் எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான தீரன் அதிகாரம் ஒன்று  திரைப்படத்தில் நடித்து நல்ல வரவேற்பை கண்டார். இந்த படம் தமிழ் மட்டுமின்றி பலமொழிகளிலும் ரகுலிற்கு அதிக கவனத்தை பெற்று கொடுத்ததோடு அடுத்தடுத்த பட வாய்ப்புகளையும் ஏற்படுத்திக் கொடுத்தது. அதன் வரிசையில் கார்த்திக்கின் அண்ணனான சூர்யாவின் நடிப்பில் வெளியான என் ஜி கே திரைப்படத்திலும் நடித்தார். இதை அடுத்து கார்த்திக்குடனும் அடுத்த திரைப்படங்களில் நடித்தார். இருப்பினும் அவை அனைத்தும் பெருமளவிலான வரவேற்பை ரகுலிற்கு கொடுக்காததால் பாலிவுட்டில் அதிக கவனம் செலுத்தி பாலிவுட்டில் முக்கிய நடிகையாக வளர ஆரம்பித்தார் ரகுல் பிரீத் சிங்! 


முன்னதாக சினிமா வட்டாரங்களில் போதைப்பொருட்கள் அதிகமாக புழக்கத்தில் இருப்பதாக ஒரு பேச்சு எழுந்த போது ரகுல் மீதும் இது குறித்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, போலீசாரிடம் விசாரணைக்கும் உட்படுத்தப்பட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனிடையே தமிழ் சினிமாவில் பிளாக் பஸ்டர் படமாக இந்தியன் படத்தின் பாகம் இரண்டில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார் ரகுல். மேலும் பாலிவுட்டில் அறிமுகமான உடனே தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை காதலிக்க ஆரம்பித்த ரகுல் ப்ரீத் சிங் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கோவாவில் ஆடம்பரமான ஹோட்டலில் நடைபெற்றது. மேலும் திருமணம் முடிந்த கையோடு மீண்டும் திரைப்படங்களின் படு பிஸியாக நடிக்க ஆரம்பித்த ரகுல் சமீபத்தில் தான் தனது கணவருடன் ஹனிமூன் சென்று வந்தார்.

இந்த நிலையில் ரகுல் பிரீத் சிங்கை திருமணம் செய்து கொண்ட சில மாதங்களிலேயே பெருமளவிலான நஷ்டத்திற்கு அவரது கணவரும் தயாரிப்பாளருமான ஜாக்கிக்கு ஏற்பட்டுள்ளது. அதாவது ஜாக்கி பாலிவுட்டில் பூஜா என்டர்டைன்மென்ட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் கூலி நம்பர் ஒன், ஹீரோ நம்பர் ஒன், டிவி நம்பர் ஒன் என பல வெற்று திரைப்படங்களை தயாரித்து முக்கிய தயாரிப்பு நிறுவனராக வளர்ந்து வந்தார். ஆனால் கடந்த சில ஆண்டுகளாகவே இந்த நிறுவனம் தயாரித்த திரைப்படங்கள் பெரும் அளவிலான வெற்றியை பெறாமல் பெரும் கடன் சுமையில் ஜாக்கியை ஆழ்த்தியது. மேலும் சமீபத்தில் ஏற்பட்ட பெரும் கடன் சுமையால் நிலைமையை சமாளிக்க ஜாக்கி பக்னானி தனக்கு சொந்தமான ஏழு மாடி கட்டிடத்தை விற்பனை செய்துள்ளார். 

அதுமட்டுமின்றி மும்பையில் தனக்கு சொந்தமாக இருந்த அலுவலகத்தையும் வேறொரு இடத்திற்கு மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இப்படி ரகுலை திருமணம் செய்த நான்கே மாதங்களில் மிகப்பெரிய கடன் சுமையை தனக்கு சொந்தமான ஏழு அடுக்கு மாடி வீட்டையே விற்கும் அளவிற்கு அவரது கணவர் தள்ளப்பட்டுள்ளதும் மறுபக்கம் இந்தியன் 2 திரைப்படத்தில் படு பிஸியாக நடித்து ரகுல் அடுத்த கட்டத்தை நோக்கி சென்று கொண்டிருப்பதும் சினிமா வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. மேலும் இதனால் இருவருக்கும் இடையேவும் புகைச்சல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. முன்னதாக இந்தியன் 2 திரைப்படத்தில் நான் நடித்ததற்கு காரணம் அந்தக் கதாபாத்திரம் தான் மற்றபடி கமலஹாசன் மற்றும் சங்கர் இருக்கிறார்கள் என்பதற்காக நான் இதில் நடிக்கவில்லை என்று ஓபனாக ரகுல் பேசியது வேறு ஒரு பக்கம் கமல் ரசிகர்களை கடுப்பில் ஆழ்த்தியுள்ளது.