Cinema

நடிகர் அஜித்குமார் குறித்து பிரபல கிரிக்கெட் கூறியது!! என்னது அஜித் இப்படி எல்லாம் பண்ணாரா??

AJITH, NATARAJAN
AJITH, NATARAJAN

ஆசை திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று கோடிக்கணக்கான ரசிகர்களின் மனதில் சூப்பர் ஹீரோவாக இடம் பிடித்து உள்ளவர் தான் நடிகர் அஜித்குமார்!! இவரின் ஒரு சில திரைப்படங்கள் தோல்வி அடைந்து இருந்தாலும் கூட அதிக அளவில் ஹிட்டான திரைப்படங்களையே இவர் கொடுத்துள்ளார். மேலும் தமிழ் சினிமாவில் ரஜினி கமலுக்கு அடுத்தபடியாக தற்பொழுது ஒரு நடிகர் இருக்கிறார் என்றால் அது கண்டிப்பாக அஜித் குமார் தான் என்பது யாராலும் மறுக்க முடியாத ஒன்றாக உள்ளது. மேலும் இவரை இவரின் ரசிகர்கள் செல்லமாக தல என்று கூறுவார்கள். நடிகர் அஜித்குமார் ஒரு பக்கம் சினிமாவில் ஹீரோவாக நடிப்பதில் பிஸியாக இருந்தாலும் கூட எப்போதுமே அவருக்கு பிடித்த கார் ரேஸ், பைக் ஓட்டுவது போன்றவற்றை செய்வதில் தவறியதே கிடையாது.


சில பிரபலமான நடிகர்கள் அவ்வப்போது நடக்கும் நட்சத்திர விழாக்கள், தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் போன்றவற்றில் கலந்து வருவார்கள்.ஆனால் அஜித் குமார் என்ற அளவிலும் பெருமளவு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து வந்தது என்பது கிடையாது. மேலும் திருமணம் போன்ற நிகழ்ச்சிகளில் கூட பெருமளவில் கலந்து கொள்ளாமல் மிகவும் நெருங்கியவர்களின் திருமண நிகழ்வில் மட்டுமே கலந்து கொள்வார். இந்த அளவிற்கு பொது இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வது, அதனால் ரசிகர்களின் கூட்டம் அங்கே கூடுவது போன்ற பல காரணங்களால் இவர் எதிலும் கலந்து கொள்ளாமலே தனது வேலையை மட்டும் செய்து கொண்டு தனது ரசிகர்களையும் அவ்வாறே இருக்க சொல்வார்.ஆனால் இப்படிப்பட்ட நடிகர் அஜித்குமாரே பிரபல கிரிக்கெட் வீரர் ஒருவரின் பிறந்தநாள் அன்று நேரில் சென்று சர்ப்ரைஸ் கொடுத்துள்ளாராம்!!! கேட்பதற்கே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது அல்லவா!! அந்த பிரபல கிரிக்கெட் வீரர் யார்?? நடிகர் அஜித்குமார் எப்படி சர்ப்ரைஸ் கொடுத்தார் என்பது குறித்து தற்போது அந்த கிரிக்கெட் வீரரை பகிர்ந்துள்ளார். அது குறித்து விரிவாக காணலாம்!!

இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளரான நடராஜன் தற்பொழுது பல போராட்டங்களுக்குப் பிறகு தமிழ்நாட்டில் இருந்து இந்திய அணியில் இடம் பெற்றிருக்கிறார். இந்த நிலையில் அந்த ஏப்ரல் நான்காம் தேதி தனது பிறந்த நாளை நடராஜன் கொண்டாடி வந்துள்ளார். அப்போது அங்கு நடிகர் அஜித் குமார் கலந்துகொண்டு அவருடன் எடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலானது. இதுவரை அஜித் எந்த ஒரு நிகழ்விலும் பங்கு பெறாத நிலையில் நடராஜனின் பிறந்தநாள் விழாவில் கலந்து கொண்ட புகைப்படத்தை அனைவரும் ஆச்சரியமாக  பார்த்தனர். இதனைத் தொடர்ந்து சமீபத்தில் நடந்த  இந்தியா - ஆஸ்திரேலியா பின் போது நடராஜனிடம் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தமிழ் சேனலின் கமெண்டரி குழு உங்கள் பிறந்த நாளன்று அஜித்குமாரை சந்தித்த பிறகு வேற லெவலில் பெர்ஃபார்மன்ஸ் செய்வீர்கள். 

அது குறித்து கூறுங்கள் என்று கேட்ட பொழுது, நடராஜன் அந்தப் பிறந்தநாள் தனக்கு மிகவும் ஸ்பெஷல் என்றும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் பிசியோதெரபியான  சாம் சுந்தர் மற்றும் தனசேகரன் ஆகியோர் நடிகர் அஜித்திற்கு தனிப்பட்ட பயிற்சியாளராக இருப்பதாகவும், பிறந்தநாள் அன்று ஹைதராபாத் அணியுடன் சேர்ந்து இரவு உணவு சாப்பிடுவதற்காக சென்ற பொழுது இவர்கள் இருவரும் சர்ப்ரைஸ் ஆக நடிகர் அஜித்குமாரை மீட் செய்ய வைத்தனர் என்று கூறியுள்ளார். அதன் பிறகு கேக் வெட்டி பிறந்த நாளை கொண்டாடியதாகவும், இந்த நாட்களாக நேரில் இவரை பார்க்க வேண்டும் என்ற  ஆசை நிறைவேறியதாகவும் கூறியுள்ளார். மேலும் அனைவரும் கிளம்பும் பொழுது எல்லோருக்கும் கார் கதவை அஜித் குமாரே திறந்து வழி அனுப்பி விட்டதாகவும் அந்தப் பண்பு மிகவும் பிடித்திருந்ததாகவும் கூறியுள்ளார்.