Tamilnadu

நல்ல "ஆம்பளை" என செந்தில் பாலாஜியை புகழ்ந்த பெண் நிர்வாகிக்கு திமுக தலைமை கொடுத்த அதிர்ச்சி பரிசு!

Senthil balaji
Senthil balaji

செந்தில் பாலாஜி கோவை பொறுப்பாளராக நியமித்து ஸ்டாலின் உத்தரவிட்ட போது நல்ல ஆண்மகனை நியமித்து இருக்கிறார் என தெரிவித்தேன் நான் ஒரு பட்டியல் சமூக பெண் என்பதால் ஒடுக்கப்பட்டேன் என வேதனையை பகிர்ந்த பெண்ணிற்கு நியாயம் கிடைக்கும் என பார்த்தால் கட்சியில் இருந்தே தூக்கி அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது திமுக தலைமை.


இது குறித்து கோவையில் நடைபெற்ற பொது கூட்டத்தில் பேசிய மீனா ஜெயக்குமார் :- எத்தனையோ மேடையில் பேச எனக்கு வாய்ப்பு கொடுத்துள்ளார்கள். அப்போது எல்லாம் எனக்கு பேச தோணல. இப்போது நான் பேச வேண்டும் என வந்துள்ளேன். ஜெயித்து வந்தவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். ஜெயித்து வருவது அவ்வளவு எளிதல்ல. அதில் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு பங்குண்டு.

அமைச்சர் செந்தில் பாலாஜியை கோவை பொறுப்பாளராக நியமித்தவுடன், தலைவர் கோவைக்கு ஒரு நல்ல ஆம்பளையை அனுப்பி வைத்துள்ளார் என்று என் நண்பர்களுடன் கூறினேன். ஆம். உண்மையை தான் சொன்னேன். நாம பண்ணதை அவர் செய்துள்ளார். மனதில் இருப்பதை ஓபனாக பேசுவதால், பல இடங்களில் நான் பேசுவதில்லை.

தன்மானத்தை உரசி பார்க்கும்போது அதற்கு பதிலடி கொடுக்க வேண்டும். எனக்கும், மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக்கும் பெரிதாக பிரச்னை இல்லை. ஒரு இடத்தகராறில் தொடங்கியது.மாவட்ட பொறுப்பாளர் கார்த்திக் என் வெற்றியை தடுத்த முதல் ஆள்.சமூகவலைதளம், ஊடகங்கள் மூலம் என்னைப்பற்றிய தவறான தகவல்களை பரப்பினார்கள்.

தீண்டத்தகாதவர்களை போல நடத்தினார். நான் பட்டியல் இனத்தை சேர்ந்தவள் என்றெல்லாம் கூறினார். நானும் ஒரு பெண் தான். எனக்கும் வலிக்கும். எல்லோரும் மனிதர்கள் தான். உன் பொண்டாட்டிக்கு சீட் வேணும்னா நீ தாரளமாக கேட்டிருக்கலாம். அதற்காக எனக்கு வாய்ப்பை மறுப்பதா? என் வளர்ச்சியை தடுக்க இந்த ஆள் யாரு?" என்று கொந்தளித்தார்.

மீனா ஜெயக்குமார் பேச்சால் கார்த்திக் அப்செட் ஆனார். ஒரு கட்டத்தில் மீனா ஜெயக்குமார் ஒருமையில் பேச கார்த்திக்கின் ஆதரவாளர்கள் மீனா ஜெயக்குமாருக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.இதனால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.இதனையடுத்து குறுக்கிட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி ”எல்லோரும் இருக்கும் இடத்தில் தனிப்பட்ட முறையில் பேச வேண்டாம். 

உங்கள் பிரச்னைகளை என்னிடம் கடிதமாக கொடுங்கள்” எனக் கூறினார். தொடர்ந்து மீனா ஜெயக்குமார் தொடர்ந்து பேச முயற்சி செய்த போது, அவரை திமுக மூத்த நிர்வாகிகள் சமாதானப்படுத்தி அமர வைத்தனர்இந்நிலையில் திமுக மாநில மகளிரணி துணைச் செயலாளர் மீனா ஜெயக்குமார் கட்சி கட்டுப்பாட்டை மீறி, அவப்பெயர் ஏற்படும் வகையில் செயல்பட்டதால் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் தற்காலிகமாக நீக்கி வைப்பதாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே திமுக நிர்வாகி இடுப்பை கிள்ளி விட்டார் என போராட்டம் நடத்திய பெண் குற்றசாட்டு மீது நடவடிக்கை எடுக்காத திமுக தலைமை இப்போது மீனா ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுத்ததில் எந்த ஆச்சர்யமும் இல்லை என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.