Tamilnadu

ஒரே ஊர் இரண்டு சம்பவம் "ஹிஜாபிற்கு பொங்கியவன்" இப்போ அமைதியான சம்பவம்!

Hijab
Hijab

மதுரை மாவட்டம் மேலூரில் சிறுமி கொலை செய்யபட்ட சம்பவம் கடும் கொந்தளிப்பை உண்டாக்கியுள்ள சூழலில் அதே ஊரில் நடைபெற்ற இரண்டு சம்பவங்களை ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார் இந்து முன்னணியை சேர்ந்த இளங்கோவன். இது குறித்து அவர் தெரிவித்த கருத்து பின்வருமாறு :-


ஒரே ஊர்; இரண்டு நீதி:-மதுரை மாவட்டம் மேலூரில்  உள்ளாட்சி தேர்தலில் வாக்காளரின்  அடையாளம் காண  ஒரு முஸ்லிம் பெண்ணின் ஹிஜாப் என்று  சொல்லுப்படும் தலை முடியை சுற்றி உள்ள துணியை கழட்ட சொன்னார். ஒரு பா.ஜ.க.பூத் ஏஜண்ட்.

உடனே தமிழகமே கொதித்தது. மத உரிமை இல்லை. பெண்ணுரிமை இல்லை என்று பலர் குரல் எழுப்பினார்கள். உடனே அந்த பா.ஜ.க. பூத் ஏஜண்ட்டை கைது செய்தார்கள்.அதற்கு பரிகாரமாக மேலூரில்  முஸ்லிமை  சேர்மன் ஆக்கினார்கள்.

தற்போது  அதே மேலூரில்  17வயது மைனர் பெண்  ஆறு நபர்களால் கற்பழித்து கொலை செய்யப்பட்டு உள்ளார்.  இதில் தடயத்தை அழிக்க இரண்டு நபர்களின் அம்மா உடந்தையாக இருந்து உள்ளார்கள். மேலும் இரண்டு பேர் அடைக்கலம் கொடுத்து உள்ளார்கள். 

மொத்தம் 10பேர் குற்றவாளிகள். இவர்களில் சிலரை மட்டும் காவல்துறை கைது செய்து உள்ளார்கள். மற்றவர்களை கைது செய்யாமல் மெத்தன போக்கை கடை பிடித்து வருகிறார்கள்.

இதில் ஊடகங்கள், பொது நபர்கள், விமர்சகர்கள், நடுநிலைவாதிகள் யாரும் குரல் எழுப்பவில்லை. ஏனென்றால் பாதிக்கப்பட்ட பெண் இந்து கள்ளர் சமூகம். குற்றவாளிகள் முஸ்லிம் சமூகம். ஆகவே  அனைத்து நடுநிலையாளர்களும்  குரல் எழுப்பாமல் அமைதி காக்கிறார்கள் என வேதனையை பகிர்ந்துள்ளார் இளங்கோவன்.

நேற்று லாவண்யா இன்று மேலூர் சிறுமி  நாளை யாரோ என சமூகவலைத்தளங்களில் கண்டன குரல்கள் வலுத்து வருகின்றன.

More watch videos