24 special

விஜய் கட்சியில் எடுக்கப்பட்ட முக்கிய தீர்மானம்... விழி பிதுங்கி நிற்கும் கட்சிகள்..!

Stalin, eps, vijay
Stalin, eps, vijay

விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது. இதில் பிறப்பொக்கும் எல்லாம் உயிருக்கும் என சமத்துவ கொள்கையின் அடிப்படையில் உறுப்பினர்கள் தீர்மானம் எடுத்து கொண்டனர்.  சென்னை பனையூரில் உள்ள த.வெ.க அலுவலகத்தில் உறுப்பினர் சேர்க்கை மற்றும் உட்கட்சி கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி ஆனந்த தலைமையில்  நடைபெற்றது. இதில் விஜய் சைலண்டாக கொடுக்கப்பட்ட அசைமென்ட் எதிர்க்கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.


தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகரும் மறக்கமுடியாத நடிகருமான விஜய் புதிய அரசியல் கட்சியை  தொடங்கி அதன் மூலம் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு தீவிரம் காட்டி வருகிறார். கடந்த சில ஆண்டுகளாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்தாலும் அரசியல் ஈடுபாடுகளில் அதிகம் கவனம் செலுத்தி வந்தார். அதன் தொடர்ச்சியாக மாணவர்களுக்கு விருது வழங்குதல் முன்னாள் தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்தல் போன்ற செயல்பாடுகளில் தீவிரமாக பணி செய்து வந்தனர். அரசியலுக்கு வந்த பின்னர் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து கொண்டது வைரலானது.

இந்நிலையில், நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் புஸ்சி ஆனந்த் தமிழக வெற்றி கழகத்தால் நவீன வசதிகளுடன் உருவாக்கப்பட்டு வரும் சிறப்பு செயலி வாயிலாக உறுப்பினர் சேர்க்கை முகாமில் முகாம்களை மாவட்ட, மாநகர, நகர, பேரூர், ஒன்றிய, ஊராட்சி வார்டு வாரியாக முழுவீச்சில் நடத்தி புதிய உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். தலைவர் அவர்களின் ஆணையை ஏற்று 2 கோடி உறுப்பினர்கள் என்று இலக்கு நிர்ணயித்து உறுப்பினர் சேர்க்கை பணிகளில் கூடுதல் கவனம் செலுத்துவது தான் நமது முதற்கட்ட பணியாகும்.

பூத் வாரியாக வாக்காளர்களை கட்சி சார்புள்ளவர்கள் யார் யார், எந்த கட்சியையும் சாராதவர்கள் யார் யார், என்ற விவரங்களையும் சேகரித்து வைத்துக் கொள்ள வேண்டும். நமது கழகத் தலைவர் அவர்களின் உத்தரவின் பெயரில் மாவட்ட சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர்களுக்கு விதிக்கப்படும் நிபந்தனைகள் கட்டுப்பாடுகளை ஏற்று செயல்படுவதை கடமையாக கருத வேண்டும். நமது கழகம் தொடர்பான அதிகாரபூர்வ நியமனங்கள் அறிவிப்புகள் அனைத்தும் கழகத் தலைவர் அவர்கள் அல்லது தலைவர் அவர்களின் ஒப்புதலுடன் பொதுச்செயலாளர் அவர்களால் கழகத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலை தள பக்கங்களில் வெளியிடப்படும் என்பதை மாவட்ட சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் உள்ளிட்ட அனைவரும் கருத்தில் கொள்ள வேண்டும். நம் கழகத் தோழர்கள் அனைவரும் ஒற்றுமையாக செயல்பட்டு நமது இலக்கான 2 கோடி உறுப்பினர்கள் சேர்க்கை உறுதி செய்ய வேண்டும் என்று அதில் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

இதனால் அதிமுக மற்றும் திமுக கட்சிகளுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே 2 கோடி தொண்டர்களை கொண்டுள்ள அதிமுக கட்சி இந்த விஜயின் அறிவிப்பால் கொஞ்சம் கலக்கம் அடைந்துள்ளது என்றே சொல்லாம். திமுகவில் உள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 2 கோடி தொண்டர்கள் உள்ளதாக சமீபத்தில் அறிவித்தது. இதனிடையே முதலில் திமுக கட்சியில் உள்ளவர்கள் தான் விஜிக்கு முதலில் ஆதரவு கொடுப்பார்கள் என கூறுகின்றனர். ஏனென்றால் திமுக கடைசி வரை விஜய் படத்திற்கு பெரும் நெருக்கடி கொடுத்தது நாம் அனைவர்க்கும் தெரிந்த ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.