
சினிமாவில் முன்னணி நடிகராக இருந்த வடிவேலு ஒரு காலத்தில் தன்னை மிஞ்ச யாரும் இல்லை என்பது போல வலம் வந்தார். ஆனால், வடிவேலு இடத்தை நிரப்ப தற்போது சினிமாவில் பல நகைச்சுவை நடிகர்கள் இருக்கின்றனர் என்பதில் மாற்றமில்லை. இப்போது வடிவேலு மார்க்கெட் இல்லாமல் இருக்க முக்கிய காரணமே அவரின் தலைக்கனம் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். சினிமாவில் தான் தான் பெரிய நடிகர் என நினைத்து கொண்டு மற்ற நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் இருந்ததே காரணமாம். தினமும் ஒரு நடிகர் வடிவேலு குறித்து விமர்சனம் வைத்து வருகின்றனர் அதற்கேற்றாற்போல் வடிவேலு இருப்பதாக நிரூபணம் ஆகியுள்ளது.
இந்நிலையில், திரை விமர்சகர் ஒருவர் வடிவேலுவின் தலைக்கனத்தை பகிர்ந்துள்ளார். ஒரு முறை சினிமா வட்டாரங்கள் படப்பிடிப்புக்காக விமானத்தில் பயணம் சென்றுள்ளனர். அப்போது வடிவேலுவை கண்டு ஒரு சிறுவன் சார் நான் உங்கள் ரசிகன் உங்களின் நகைச்சுவை எனக்கு ரொம்ப பிடிக்கும் என அந்த சிறுவன் கூறினார். உடனே வடிவேலு உன்னை நான் எங்கோ பார்த்திருக்கிறேன் என கூற, சார் நான் நடிகர் சரத்குமார் மகன் என கூறியுள்ளார். அதற்கு வடிவேலு சிறுவனிடம் எப்படி பேச வேண்டும் என தெரியாமல் தலைக்கனம் முத்தி உங்கப்பா படம் எல்லாம் ஓடுவதற்கு நான் தான் காரணம், உங்கப்பா உடன் நான் நடித்ததால் தான் மக்கள் படத்தை விரும்பி பார்க்கிறார்கள் என வடிவேலு கூறியுள்ளார்.
உடனே அந்த சிறுவன் முகம் வாடிபோக வடிவேலு இல்லை என்றால் தன் அப்பா படம் ஓடாது போல என்பது போல அந்த சிறுவன் கண் கலங்கியுள்ளார். இதை அப்படியே தாயான ராதிகாவிடம் தெரிவிக்க ராதிகா வடிவேலுவை பார்த்து சின்ன பயனிடம் எப்படி பேச வேண்டும் என தெரியாதா என கடிந்துள்ளார். இதற்கு சற்றும் வருத்தம் தெரிவிக்காமல் வடிவேலு இருந்துள்ளார். ஒரு காலத்தில் சரத்குமார் நாட்டாமை, சூர்யவம்சம் என ஹிட் படங்களை வடிவேலு இல்லாமல் கொடுத்துள்ளார். குறிப்பாக கவுண்டமணி மற்றும் மணிவண்ணனை கொண்டு நடித்த படங்கள் பெரிய அளவில் மக்கள் இடத்தில் வரவேற்பு பெற்றது. அவர்கள் ஒருபோதும் வடிவேலுவை போல பேசியதே கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
இதேபோல் நடிகர் தனுஷ் மற்றும் விவேக் நடித்து வெளியான படிக்காதவன் படத்தில் தான் ஒரு பெரிய நகைச்சுவை நடிகர் என ஏதும் நினைக்காமல் விவேக் நடித்திருப்பார். இன்றும் குழந்தைகள் அந்த நகைச்சுவையாய் பார்த்தல் சிரிப்பு வரும் அந்த அளவிற்கு விவேக் நடித்திருப்பார். இதற்கு முன்னதாக அந்த படத்தில் நடிகர் விவேக்கு பதிலாக வடிவேலு நடித்தாராம் அப்போது, தனுஷிடம் சென்று உங்க மாமனார் ரஜினிகாந்த் உடன் நான் நடித்ததாலே படம் மிக பெரிய வெற்றி பெற்றது. குறிப்பாக சந்திரமுகி படம் பட்டி தொட்டி எங்கும் பரவ நான் நடிததே காரணம் என கூறியுள்ளார்.
உலகமெங்கும் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை உருவாக்கியவர் நடிகர் ரஜினிகாந்த். தான் நடித்ததன் காரணமாகவே படம் பெரியளவில் பேசப்பட்டது என்ற தோரணையில் அதுவும் மருமகனிடம் வடிவேலு கூற, உடனே தனுஷ் இயக்குனரிடம் சென்று இந்த படத்தில் வடிவேல் நடித்தால் நான் நடிக்கமாட்டேன் என கூறியுள்ளார் தனுஷ். உடனே இயக்குனரும் அந்த இடத்தில் வடிவேலுவுக்கு பதிலாக விவேக்கை தேர்வு செய்துள்ளார் என சமீபத்தில் சினிமா துறையை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.