குஷ்பூ பத்திரிகையாளர் சந்திப்பில் கூறிய ரகசியம் தற்போது அறிவாயாலத்தை அய்யோ என அலற வைத்துள்ளது.தமிழக ஆளுநர் ஆர். என். ரவி, பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் பாஜகவில் இருக்கும் பெண் நிர்வாகிகளையும் திமுகவின் பேச்சாளராக உள்ள சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கடுமையான வார்த்தைகளை உபயோகித்து விமர்சனம் செய்து வந்துள்ளார் இதனால் இவர் சில காலம் முன்பு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட பிறகு மறுபடியும் சமீபத்தில் கட்சிகள் சேர்க்கப்பட்டார் இருப்பினும் திமுக நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மறுபடியும் பாஜகவின் மாநில தலைவர் பற்றியும் ஆளுநரை பற்றியும் தரக்குறைவாக பேசி வந்தார் குறிப்பாக பெண் நிர்வாகியாக உள்ள குஷ்பூவை பற்றி மிகவும் மோசமான வகையில் பேசி உள்ளார்.
குஷ்பூ என்னுடைய அண்ணி என்று மிகவும் தரக்குறைவான விதத்தில் பேசி உள்ளார். அந்த கூட்டத்தில் பெண்கள் பலர் கூடியிருந்ததும் சிவாஜி கிருஷ்ணமூர்த்தியின் பேச்சை கேட்டு அவர்களின் முகம் சுளிக்க வைத்துள்ளது. அவர் பேசியிருந்த விமர்சன கருத்துக்கள் அடங்கிய வீடியோக்கள் சமூக வலைதளங்களில் பரவி வைரல் ஆகி வருகிறது.
பிரபல நடிகையும் பாஜகவை சேர்ந்த தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பூ இதனால் மிகவும் வருத்தம் அடைந்த தனது ஆதங்கத்தை செய்தியாளர்கள் முன்பு வெளிப்படுத்தினார். பெண்களைப் பற்றி இவ்வளவு அவதூறாக பேசும் அதிகாரத்தை யார் இவருக்கு கொடுத்தார். எந்த ஒரு பெண்ணை பற்றி அவதூறாக பேசுவதற்கு யாருக்கும் தைரியம் வரக்கூடாது வந்தால் திருப்பி அடிப்போம். கருணாநிதி இருந்த காலத்தில் திமுக இப்படி இல்லை இவர்கள் பெண்களை அசிங்கப்படுத்துவதாக நினைத்து கருணாநிதியை தான் அசிங்கப்படுத்தி வருகின்றனர். பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யாமல் உள்ளது தான் திமுக மாடல். எங்கு செந்தில் பாலாஜி நம்மை மாட்டி விடுவாரோ என்ற பயத்தில் தற்போது பெண்களைப் பற்றி பேசி வருகின்றனர். இதற்காகவே சில பேச்சாளர்களை தீனி போட்டு திமுக வளர்கிறது. திமுகவின் கட்சியில் உள்ளவர்கள் பெண்களைப் பற்றி இழிவாக பேசுவதை முதல்வர் ரசித்துக் கொண்டிருக்கிறார் எந்த ஒரு ஆணுக்கும் பெண்ணைப் பற்றி இழிவாக பேச உரிமை கிடையாது என்று தனது கண்டனத்தையும் கோபத்தையும் செய்தியாளர்கள் முன்பு வெளிபடுத்தினார்.
மேலும் குஷ்புவை சீண்டி பாக்காதீர்கள் திரும்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள், என்னைப் பற்றி எல்லாருக்கும் தெரியும் குஷ்பு தானே இன்னைக்கு பேசினால் நாளைக்கு மறந்து விடுவார் என்று நினைக்காதீர்கள் குஷ்பு மன்னித்து விடுவாள் ஆனால் ஒருபோதும் மறக்க மாட்டாள் ஸ்டாலின் அவர்களே திராவிட முன்னேற்றக் கழகத்தினருக்கு மட்டுமல்ல இங்கிருக்கும் அனைத்து நபர்களுக்கும் கூறுகிறேன் குஷ்புவை என்றுமே சீண்டி பாக்காதீர்கள், குறிப்பாக திராவிட முன்னேற்றக் கழகத்தினர்! நான் இப்பொழுது கூறுகின்ற மெசேஜ் அனைத்துமே நேரடியாக முதல்வருக்கு சொல்ல வேண்டும், அவரது கண்ணைப் பார்த்து பேசும் தைரியம் எனக்கு இருக்கிறது, உங்களது கட்சியில் நான் சேரும்பொழுது உங்களது தந்தை மற்றும் முன்னாள் முதலமைச்சர் மதிப்பிற்குரிய கருணாநிதி என்னிடம் கூறிய விஷயம்! மேடை நாகரிகம் என்று ஒன்று உள்ளது அது எப்பொழுதுமே பார்த்துக் கொள்ளுங்கள்! உங்கள் கட்சியின் மேடையில் பெண்கள் மத்தியிலே ஒரு பெண்ணைப் பற்றி இவ்வளவு அசிங்கமாக பேசிக் கொண்டிருக்கிறார் ஸ்டாலின் அவர்கள், நீங்கள் அதனை ரசித்துக் கொண்டிருக்கிறீர்கள், இதோடு நிறுத்திக் கொள்ளுங்கள் இதற்கு பிறகு குஷ்பு பதிலடி கொடுத்தால் உங்களால் தாங்க முடியாது என்று நெருப்பு கனலில் இருந்த பெண்மணி போன்று பேசுயுள்ளர் நடிகை குஷ்பூ.
குஷ்பூ திமுகவில் இணையும் பொழுது முன்னாள் திமுக தலைவர் கருணாநிதி குஷ்புவிடம் என்ன கூறியிருப்பார் என்பதை ஒவ்வொரு தரப்பினரும் யூகித்து விவாதங்களில் தற்போது ஈடுபட்டு வருகின்றனர். இதுமட்டுமில்லாமல் குஷ்பூவை திமுகவில் இருக்கும்போது ஓரம்கட்ட வைத்தது தற்போதைய திமுக தலைவர் ஸ்டாலின்தான் என திருச்சி சூர்யா சிவா வேறு ஏற்கனவே கூறியது குறிப்பிடத்தக்கது. மேலும் இப்பொழுதுதான் குஷ்பூ திமுகவை பற்றிய ரகசியங்களை பேச வாய் திறந்துள்ளார் இது விரைவில் வெடிக்கும் எனவும் அரசியல் பார்வையாளர்கள் கூறி வருகின்றனர்.