24 special

விசிகவை திமுகவே தோற்கடிக்கும்.... வேற லெவலில் ஸ்கெட்ச் போடும் அறிவாலயம்....

THIRUMAVALAVAN TRICHI SIVA
THIRUMAVALAVAN TRICHI SIVA

தமிழகத்தில் ஒரே கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி லோக்சபா தேர்தல் நடைபெற உள்ளது மேலும் தேர்தல் ஓட்டு எண்ணிக்கையும் ஜூன் நான்காம் தேதி நடைபெற உள்ளதாக தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவிப்புகளை வெளியிட்டு விட்டது இதனை அடுத்து தமிழக அரசியல் தலைமை சூடு பறக்க தொகுதி பகிடு மற்றும் கூட்டணி குறித்த நடவடிக்கைகளை மேற்கொண்டு பரபரப்பான அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது திமுக அதிமுக போன்ற தமிழகத்தின் முக்கிய கட்சிகள் தனது வேட்பாளர்கள் பட்டியலையும் கூட்டணி அறிவிப்பையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்ட நிலையில் எந்தெந்த தொகுதிக்கு யார் போட்டியிட உள்ளார்கள் என்பதும் ஒவ்வொரு கட்டமாக வெளியாகிக் கொண்டு வருகிறது ஆனால் பாஜக தனது கூட்டணி கட்சிகள் குறித்த தகவலையும் அவர்களுக்கான தொகுதி பங்கீடு குறித்த தகவல்களை அறிவித்து, 


தனது முதல் கட்ட வேட்பாளர்கள் பட்டியலையும் வெளியிட்டுள்ளது. அதுமட்டுமின்றி ஏற்கனவே இரண்டு முறை ஆட்சியை கைப்பற்றி மத்தியில் தனது அரசை நிறுவி வந்த பாரதிய ஜனதா கட்சி மீண்டும் மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியைப் பிடித்து பிரதமர் நரேந்திர மோடியை மீண்டும் பிரதமராக ஆட்சி கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்ற முடிவில் தீவிரமாக நாடாளுமன்ற தேர்தலில் ஈடுபட்டு வருகிறது பிரதமர் நரேந்திர மோடியும் தமிழகத்தில் முன்பிருந்ததை விட அதிக அளவில் பயணங்களை மேற்கொண்டு தமிழக மக்களிடம் உரையாடி வருகிறார் அவர் பேசும் மொழி தமிழக மக்களுக்கு சரிவர புரியவில்லை என்றாலும் கூட கூட்டம் கூட்டமான மக்கள் பிரதமரை காணுவதற்கும் பிரதமரின் பேச்சை கேட்பதற்கும் வருகை புரிகிறார்கள் என்பதை சமூக வலைதளங்களில் வைரலாகிய வீடியோக்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம்! 

இப்படி பாஜக ஒரு பக்கம் தனது அரசியல் களத்தை சரியாக எடுத்துக்கொண்டு செல்கிற வேலையில் திமுக எப்படியாவது மத்தியில் தனது கூட்டணி கட்சியை வெற்றியடைய வைக்க வேண்டும் என்ற நினைப்பில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது அதற்காக அவர்கள் வெளியிட்ட தேர்தல் அறிக்கை கூட தற்போது விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது. மேலும் தனது கூட்டணி கட்சியின் முக்கிய கட்சியாக உள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு மூன்று தொகுதிகளை மட்டுமே ஒதுக்கி உள்ளது முன்னதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் நான்கு தொகுதிகளை கொடுக்கும் கட்சிகளுடனே எனது கூட்டணி தொடரும் என்ற வகையில் பத்திரிகையாளர்கள் மத்தியில் திட்டவட்டமாக பேசி வந்தார் ஆனால் அவரின் மனதை எப்படி இந்த திமுக மாற்றியது என்று தெரியவில்லை இறுதியில் திமுக விசிகவிற்கு மூன்று தொகுதிகளை கொடுத்துள்ளது! 

அதோடு தற்போது திமுகவிற்கு பெரும் தலைவலியாக இருந்துள்ள போதை பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய திருப்பமாக விசிகவின் நிர்வாகியாக இருந்த முகமது சலீம் தான் வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்துவதில் முக்கிய மூளையாக செயல்பட்டுள்ளார் என்று தற்போது கைதாகி உள்ள அவரது அண்ணன் ஜாபர் என்சிபி அதிகாரியிடம் வாக்குமூலம் கொடுத்துள்ளதும் திமுகவை கடுப்படையை வைத்துள்ளது. ஏனென்றால் ஜாஃபரின் இந்த வாக்குமூலத்தை தொடர்ந்து அடுத்த அடுத்த நடவடிக்கைகளில் திமுகவும் இதில் சேர்க்கும் என்பது அரசியல் வட்டாரங்களில் கிசுகிசுக்கப்படுகிறது. இந்த நிலையில் தனியார் youtube சேனல் ஒன்றிற்கு பேட்டி அளித்த பாஜக மாநில பொது செயலாளர் திருச்சி சூரிய சிவா, விசிக வேட்பாளராக சிதம்பரத்திலும் விழுப்புரத்திலும் ரவிக்குமாரும் திருமாவளவன் தான் நிற்கப் போகிறார்கள், நாடாளுமன்றத் தேர்தலில் இவர்கள் இரண்டு பேருமே நிச்சயம் தோற்பார்கள்! இந்த முறை இவர்கள் இரண்டு பேரையும் தோற்கடித்து இந்த கட்சியில் இருந்து ஒருவர் கூட பாராளுமன்றத்திற்கு செல்லக்கூடாது என்பது திமுகவின் முக்கிய கணக்கு என்று கூறியுள்ளார். இந்த செய்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி வட்டாரத்தை அதிர்ச்சியடைய வைத்துள்ளது மேலும்  அதிர்ச்சியில் திருமாவளவன் தலையில் துண்டை போட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.