Cinema

சர்ச்சையை கிளப்பிய ரோபோ ஷங்கர் மகள் திருமணம்..

ROBO SHANKER
ROBO SHANKER

திருமணம் என்றாலே உற்றார் உறவினர்கள் சேர்ந்து ஒரு விழாவாக கொண்டாடப்படும் நாளாகும். தமிழ்நாட்டு முறைப்படி திருமணங்கள் நடைபெறுவது பண்பாடும் கலாச்சாரமும் நிறைந்து காணப்படும். மேலும் தமிழ் முறைப்படி நடக்கும் திருமணங்களில் பலவிதமான நல்ல பழக்க வழக்கங்களும் காணப்படும். இப்படிப்பட்ட தமிழ் திருமண முறைகளை பார்த்து வெளிநாட்டவர்களும் அவர்களும் இப்படி திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற ஆசை கொண்டு அதன் படி தற்போது திருமணங்கள் செய்து கொள்வதே நாமும் இணையத்தில் பார்த்து இருப்போம்!! இவ்வாறு மற்ற நாடுகள் கூட நம் தமிழகத்தின் முறைப்படி திருமணத்தை செய்வதில் ஆர்வம் காட்டி வருகின்றனர்!! ஆனால் இன்று உள்ள தமிழர்கள் அதிகப்படியாக இந்த மாதிரி தமிழ் முறைப்படி கல்யாணம் செய்வதை பெரிதும் விரும்புவதில்லை. 


சாதாரண மக்கள் கூட திருமணங்கள் என்ற வார்த்தை எடுத்தாலே பெரிதும் ஆடம்பரமாக செய்வதையே விரும்புகின்றனர். மேலும் சினிமா துறைகளில் உள்ள பிரபலங்கள் அவர்களின் திருமணங்களை பெரும்பாலும் வட இந்திய கலாச்சாரத்தின் படி செய்கின்றனர். வட இந்திய திருமண முறைப்படி மெஹந்தி, haldi மற்றும் சங்கீத் போன்ற விழாக்களாக மொத்தம் ஏழு நாட்கள் தங்களின் திருமணங்களை கொண்டாடி வருகின்றனர். இதனை பார்க்கும் நடுத்தர மக்கள்  பிரபலங்கள் கொண்டாடுவதைப் போல நாமும் நம் திருமணத்தை செய்து கொள்ள வேண்டும் என்று ஆசை கொள்கின்றனர். அவர்களைப் பார்த்து இன்னும் சிலர் இவர்களைப் போல திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைக்கின்றனர். இப்படியே போனால் தமிழ் கலாச்சார முறைப்படி நடக்கும் திருமணங்கள் குறைந்து கொண்டே போகும். 

மேலும் ஒரு நாள் எதிர்காலத்தில் தமிழக கலாச்சார திருமணம் என்பது தெரியாமலே போய்விடும் அளவிற்கு மாறிவிடும் நிலை ஏற்பட வாய்ப்புள்ளது!! தமிழ் முறைப்படி திருமணங்கள் பார்த்தால் அவ்வளவு அழகாக இருக்கும். ஆனால் இப்போது அப்படி பார்ப்பதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்க் கொண்டு உள்ளது. இதனை தொடர்ந்து தமிழகத்தைச் சேர்ந்த ஒருவர் தமிழ் முறைப்படி திருமணம் செய்யாமல் வட இந்திய கலாச்சாரத்தை பின்பற்றியுள்ளார் அவர் யார் என்று உங்களுக்கு தெரியுமா??தமிழக மேடை கலைஞராகவும், சின்னத்திரையில் நகைச்சுவை நடிகராகவும், மற்றும் தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் ரோபோ சங்கரை அனைவருக்கும் தெரியும்.இவரது மகள் இந்திரஜா, அட்லி இயக்கத்தில் விஜய் நடித்த பிகில் படத்தில் பாண்டியம்மா என்ற வேடத்தில் நடித்திருந்தார். அப்படத்தை  தொடர்ந்து கார்த்தியின் விருமன் படத்திலும் கதாநாயகியின் தோழியாக நடித்தார். இவருக்கு சமீபத்தில் கார்த்தி என்பவருடன்  திருமணம் நிச்சயதார்த்தம் நடந்திருந்தது. இவர் திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளை இவர் தாயாரின் சகோதரர் ஆவார்.

இப்படி இவரும் இவர் தந்தையும் தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர்களாக உள்ள போதிலும் அவர்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மேலும் இவர் திருமணம் செய்ய போகும் மாப்பிள்ளையும் தமிழ்நாட்டையே சேர்ந்தவர் என்றாலும் இந்திரஜா தமிழ் முறைப்படி திருமணம் செய்ய போவதில்லை என்று செய்திகள் பரவி வந்தது.ஆனால் இதைத் தொடர்ந்து இவரை நிச்சயதார்த்தம் தமிழ் முறைப்படி நடந்து முடிந்தது. இருப்பினும் சமீபத்தில் இவர் சங்கீத் நிகழ்ச்சி வைத்து முடித்துள்ளார். இதனை பார்க்கும் போது அவர்களின் ரசிகர்கள் அனைவரையும் ஆச்சரியத்தில் தள்ளி உள்ளது. ஏனென்றால் நிச்சயதார்த்தத்தை தமிழ் முறைப்படி நடத்தியதால் இவர் தமிழ் முறைப்படி தான் திருமணம் செய்து கொள்வார் என பேசப் பட்ட நிலையில் இவரும் இப்படி வட இந்திய கலாச்சாரத்தின் படி சங்கீத் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்து அது குறித்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளது  ரசிகர்களுக்கு மத்தியில் ஏன் இப்படி?? என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. இவ்வாறு தமிழ்நாட்டில் பிறந்து, தமிழ் திரைப்படங்களில் நடித்து வரும் நடிகைகள் கூட தமிழ் கலாச்சாரத்தின் படி திருமணம் செய்து கொள்ள விரும்பாமல் இருப்பதை பார்க்கும்போது எதிர்காலத்தில் தமிழ் முறைப்படி திருமணங்கள்  இருக்குமா??இருக்காதா?? என்ற அச்சமும் ஏற்படுகிறது!!