24 special

எப்படி ரீல் சுத்தினாலும் சரி… தேசத்துக்காக இருக்கும் மோடி தான் எங்களுக்கு வேண்டும்! உஷாரான மக்கள்!

Modi
Modi

உலகில் எப்போதும் இல்லாத அளவாக இந்தியா அனைத்து நாடுகள் மத்தியிலும் மிக சிறப்பான வரவேற்பை பெற்று இருக்கிறது, பிரதமர் மோடியை   பல வெளிநாட்டு தலைவர்கள் உலக தலைவர்களில் ஒருவர் என புகழ்ந்து வருகின்றனர், பல உலக நாடுகள் இந்தியாவின் பின்னால் அனைவகுக்க தயாராகி வருகின்றனர்.


இந்த சூழலில் மத்திய உள்துறை அமைச்சர் அமிட்ஷா பாஜக செயற்குழு கூட்டத்தில் தெரிவித்த தகவல் ஒட்டு மொத்த பாஜக தொண்டர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது, பிரதமர் மோடி ஏன் கவலையுடன் இருப்பதாக கேள்வி எழுந்ததாகவும் அதற்கு உள்துறை அமைச்சர் அமிட்ஷா தெரிவித்த தகவல் என்ன என நாட்டின் பல்வேறு நாளிதள்களிலும் செய்திகள் வெளியாகி இருக்கிறது.

குறிப்பாக தமிழகத்தில் முன்னணி நாளிதழ் ஒன்றும் செய்தி வெளியிட்டு இருக்கிறது அதில், சமீபத்தில் பா.ஜ.க வின் தேசிய செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்றது. இதில் பங்கேற்ற சில சீனியர் தலைவர்கள், பிரதமர் மோடி ஏன் கவலையுடன் காணப் படுகிறார் என, கேள்வி எழுப்பினர் என்றும் இதற்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதில் சொன்னாராம். 'உலகத்தில் எங்கும் இல்லாத அளவிற்கு, நம் நாட்டில்  தடுப்பூசி திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது. சமூக நீதிக்கான திட்டங்கள், பொருளாதார முன்னேற்றத்திற்கான திட்டங்கள் என, பலவற்றை மோடி செய்து வருகிறார்.

'இருந்தும், சிலர் அவரை தேவையில்லாமல் குறை கூறி வருகின்றனர். இதன் பின்னணியில் வெளிநாட்டு சதித் திட்டம் உள்ளது. வரும் நாடாளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற்று மீண்டும் பிரதமர் ஆகக் கூடாது என,எட்டு வெளிநாட்டு அதிபர்கள் திட்டம் தீட்டியுள்ளனர்' என அமித் ஷா சொன்னதும், அனைவரும் அதிர்ந்து போயினர்.நம் நாட்டில் மோடிக்கு எதிராக செயல்படும் சில சக்திகளுக்கு, இந்த வெளிநாட்டு அதிபர்கள் கோடிக்கணக்கில் பணம் தருகின்றனராம். இதை வைத்து மோடிக்கு எதிராக செய்திகள் வெளியிடப்படுகின்றன.

வெளிநாட்டு அதிபர்களின் இந்த திட்டத்தை, பிரதமர் மோடி தன்னிடம் தகுந்த ஆதாரங்களுடன் காட்டியதாக அமித் ஷா தெரிவித்தாராம். இதனால் தான் பிரதமர் மோடி கவலையுடன் காணப்பட்டார் எனவும் சொல்லியுள்ளார் அமித் ஷா என செய்தி வெளியிட்டு இருக்கிறது.

இந்த தகவல் வெளியான மறு நொடியில் இருந்து பாஜகவினர் தீவிரமாக களம் இறங்க தொடங்கி இருக்கின்றனர், உலகின் 8 அல்ல 80 அதிபர்கள் சேர்ந்தாலும் இந்தியர்களை வீழ்த்த முடியாது, பிரதமர் மோடி மீண்டும் அறியனையில் அமர கடந்த முறையை காட்டிலும் தீவிரமாக செயல்படுவோம் என சமூக வலைத்தளங்களில் பாஜகவினர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது ஒருபுறம் என்றால் யார் அந்த 8 அதிபர்கள் ஏன் அவர்கள் குறிப்பாக மோடியை எதிர்க்க வேண்டும் இதன் பின்னணியில் உள்ள திட்டம் என்ன என இந்தியர்கள் கேள்வி எழுப்ப தொடங்க அதை திசை திருப்பும் வகையில் அதானி முதலீடு குறித்து கட்டுக்கதை மோடி ஆவண படம் என வெளிநாட்டு நிறுவனங்கள் சதி செயலை தொடங்கி இருப்பதாக பலரும் குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இத்தனை நாள் பாஜக vs காங்கிரஸ் கூட்டணி என இருந்த இந்திய தேர்தல் களம் தற்போது பாஜக vs கண்ணுக்கு தெரியாத எதிரிகள் என மாற போகிறதோ பொறுத்து இருந்து பார்க்கலாம் அரசியல் களம் எவ்வாறு மாறுகிறது என்று...!