24 special

நீ நல்லா இருப்ப அண்ணாமலை.. நாங்க சொல்ல முடியாததை ...நீங்க செய்து காட்டுறீங்க..!

Annamalai
Annamalai

தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு காவலர்கள் காவல்துறை அதிகாரிகளின் ஆதரவு நாளுக்கு நாள் பெருகிக் கொண்டு வருவதாக தகவல் கசிந்து இருக்கிறது. தமிழகத்தில் எப்பவெல்லாம் குற்ற சம்பவங்கள் நடைபெறுகிறதோ, அப்பொழுதெல்லாம் முதல் ஆளாய் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது, தமிழக அரசு காவலர்களின் கையை கட்டிப்போட்டு உள்ளது, அவர்களை ஃப்ரீயாக வேலை செய்ய விட்டால் சட்டம் ஒழுங்கு நாட்டில் சரியாக இருக்கும் என தொடர்ந்து சொல்லி வந்தார்.


இதற்கு உதாரணமாக  கோவை கார் சர்ச்சை விவகாரம் குறிப்பாக சொல்லலாம். எவ்வளவு பெரிய காவல்துறை அதிகாரியாக இருந்தாலும், முக்கியமான சில விஷயத்தை வெளியே சொல்ல வேண்டும் என வரும்போது அது அரசுக்கு அவ பெயரை ஏற்படுத்தும் என்பதால் பல நேரங்களில் பல விஷயங்கள் வேறு விதமாக மக்கள் அறியக்கூடிய நிலைமைக்கு தள்ளப்படும். ஆனால்,  அண்ணாமலை வந்த பிறகு நிலைமையே வேறு .... எங்கு சட்டம் ஒழுங்கு பிரச்சினை வந்தாலும், அந்த பிரச்சனை எப்படி ஏற்பட்டது அந்த பிரச்சனைக்கு பின் யார் இருக்கின்றார்கள்?  குடிநீர் தொட்டியில் மலம் கலந்தது யார்? கோவை கார் சர்ச்சை விவகாரத்தில் சிலிண்டர் தான் காரணம் என சொல்லப்பட்டாலும், பாஜக எடுத்த முயற்சியால் NIA -கு மாற்றப்பட்ட விவகாரம் என சொல்லிக் கொண்டே போகலாம்.

அண்ணாமலை முன்னாள் ஐபிஎஸ் என்பதால் அவர் எழுப்பும் ஒவ்வொரு கேள்விக்கும் பதில் காவல்துறைக்கு தெரியாமல் ஒன்றும் இல்லை என்று ஏற்கனவே அண்ணாமலையே தெரிவித்து இருந்தார். இப்படியான நிலையில் விசிகவினர், திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல்துறையை முகம் சுழிக்கும் அளவுக்கான வார்த்தையை பயன்படுத்தி, கொச்சைப்படுத்தி, தகாத வார்த்தையை பயன்படுத்தி கோஷமிட்டு ஊர்வலம் வந்தனர்.

இதைப் பார்த்த பெரும்பாலான காக்கிகளுக்கு ரத்தம் கொதிக்காமல் இருந்திருக்காது, காவல்துறை மக்களுக்கு உற்ற நண்பன் ... அப்படிப்பட்ட காவல்துறையை இப்படி எல்லாம் இழிவாக பேசியதை கண்ட மற்றவர்கள் மெதுவாக குரல் கொடுத்தாலும், காக்கிப்பற்று கொண்ட அண்ணாமலை காவலர்களுக்காக குரல் கொடுத்தார்.

அதன் பின்னரே இந்த விவகாரம் பெரிய அளவில் பூகம்பமாக கிளம்பி இப்போது அதில் தொடர்புடையவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு, சிலரை கைது செய்தோம் தலைமறைவாக உள்ள பலரை காவல்துறை தேடி வருகின்றது. இது தொடர்பாக திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை தேடப்படும் குற்றவாளிகள் சிலரின் போட்டோ போட்டு போஸ்டரே வெளியிட்டு உள்ளது. இது குறித்து பேசும் போது, பல நேர்மையான அதிகாரிகள் அண்ணாமலையின் செயல்களைப் பார்த்து இப்படி ஒருத்தர் கட்டாயம் தமிழகத்திற்கு வேண்டும்... காவல்துறைக்கு மட்டுமல்ல பல துறைகளுக்கும் விடிவு கிடைக்கும். மக்களும் நிம்மதியாக இருப்பார்கள் என்றெல்லாம் பேச தொடங்கி இருப்பதாக மேலிட நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர்.

அதுமட்டுமல்ல... நீ நல்லா இருப்ப ராசா... எங்கள் மனக்குமுறல்களை எங்களால் சொல்ல முடியவில்லை என்றாலும், எங்கள் பிரச்சனைகளையும் எங்கள் எண்ண ஓட்டங்களையும் அப்படியே பிரதிபலிக்கிறார் அண்ணாமலை என  தங்களுக்குள்ளாகவே பேசிக்கொள்கின்றனர்களாம்.