தமிழகத்தில் மனித சங்கிலி என்ற ஆர்ப்பாட்டத்தை RSS மற்றும் பாஜக அமைப்புகளுக்கு எதிராக நடத்துவதாக அறிவித்த திருமாவளவன் நேற்றைய தினம் சென்னையில் திமுக கூட்டணியில் இடம்பெற்ற திமுகவை தவிர மற்ற அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களை ஒன்று சேர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தினார்.
அதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் இந்திய வரலாற்றில் இவ்வளவு இயக்கங்கள் RSS அணிவகுப்பிற்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்த மாநிலங்கள் எங்கும் இல்லை சாதியின் பெயரால் மதத்தின் பெயரால் மக்களை கூறு போடுபவர்களுக்கு தமிழகத்தில் இடமில்லை என்று கூறினார்.
இதற்கு பாஜக மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி ஒரே வார்த்தையில் இத்தனை இயக்கங்கள் சேர்ந்து என்ன பயன் 10% கூட தேறாது என ஒரே வார்த்தையில் முடித்துவிட்டார் இது குறித்து அவர் தெரிவித்ததாவது,
தி மு க வின் அடிவருடிகள்,அடிமைகள், எடுபிடிகளான இந்த கூட்டம் மொத்தமாக வாங்குகிற வாக்கு 10 % கூட கிடையாது. இதில் என்ன தம்பட்டம் வேண்டி கிடக்கிறது?
சாதிக்கட்சிகளும், மதவாத கட்சிகளையும், ஒன்றுக்கும் உதவாத கம்மிகளையும் வைத்து கொண்டு வேடிக்கை காண்பித்து கொண்டிருப்பதை தமிழகம் அறியும் என திருமாவளவன் என்ன பாணியை பாஜகவிற்கு எதிராக விமர்சனம் செய்ய பயன்படுத்தினாரோ அதே பாணியில் நாராயணன் திருப்பதியும் பதிலடி கொடுத்துள்ளார்.