தனியார் ஊடகம் ஒன்றில் நடைபெற்ற விவாத நிகழ்ச்சியில் பங்கேற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர் ஷாநவாஸ் திருக்குறள் குறித்து தனது கருத்தை பதிவு செய்தார்.
ஜி.யூ போப் எடுத்த முயற்சியில ஒரு துரும்பையாவது நீங்க கிள்ளிப் போட்டீங்களா? இந்த எல்லீஸ் எடுத்த முயற்சியில ஒரு துரும்பையாவது நீங்க கிள்ளிப் போட்டீங்களா? இல்லை இப்பவாவது இதை கொண்டு போய் சேர்க்க ஏதாவது செஞ்சீங்களா? அப்ப உங்களுக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்ல.
உங்க நூலாயிருந்தா நீங்க கொண்டு போயிருப்பீங்க. இந்தியாவின் தேசிய நூலா பகவத் கீதையை ஆக்குவோம்னு சொன்னீங்களே. ஏன் திருக்குறளை ஆக்குவோம்னு சொல்ல முடியலை? அது உங்க நூல் தானே? என மிக ஆவேசமாக கருத்து தெரிவித்தார்.
இந்த நிலையில் ஒரே கேள்விதான் பதிலுக்கு ஷாநவாசை நோக்கி ஸ்ரீனிவாசன் கேட்டார் அது எல்லாருக்குமான நூல். உங்க நூல் - எங்க நூல் எல்லாம் இல்லை. சரி... 1330 குறளையும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியும். உங்களால் 1330 குறளையும் ஏற்றுக் கொள்ள முடியுமா ஷா நவாஸ் ?
திருக்குறளில் உள்ள கொல்லாமையை ஏற்றுக் கொள்ள முடியுமா? புலாலுண்ணாமையை ஏற்றுக் கொள்ள முடியுமா என ஓபன் மேடையில் வெளிப்படையாக கேள்வி கேட்டார் ஸ்ரீனிவாசன்
அவ்வளவுதான் பாக்கி அப்படியே அமைதியாகிவிட்டார் ஷா நவாஸ் சற்று வினாடிகள் தாண்டி ஏங்க நா என்ன கேட்கிறேன் நீங்கள் என்ன சொல்றீங்க என கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாமல் கம்பி நீட்டினார் ஷா நவாஸ். இந்த விவாத வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
Just one question 😜 That's all is required 😊
— Sreenivasan B R (@SreenivasanBR) October 11, 2022
Enjoy and have a good night peeps 😃😃😃😃😃 pic.twitter.com/uh8L6fHypV