24 special

பாஜக தயவு தேவை அன்வர்ராஜா தகவலால் பரபரப்பு...!

modi, ops
modi, ops

அதிமுகவில் நீண்ட காலம் பயணித்த அன்வர் ராஜா சமீபத்தில் தனியார் ஊடகம் ஒன்றிற்கு அளித்த பேட்டி கவனத்தை பெற்றுள்ளது அதில் அதிமுகவை பாஜக மட்டுமே சேர்த்து வைக்க முடியும் எனவும் அதற்காக எதையும் செய்ய தயார் எனவும் அன்வர்ராஜா குறிப்பிட்டார்.


இதே அன்வர்ராஜா தான் பாஜகவால் தோல்வியை தழுவினோம் எனவும் பாஜகவை கடந்த காலங்களில் விமர்சனம் செய்தும் பேசியிருந்தார் இந்த சூழலில் அன்வர் ராஜா பேச்சு குறித்து பிரபல அரசியல் திறன் ஆய்வாளர் சுந்தர் ராஜா சோழன் தெரிவித்த கருத்துக்கள் அதிமுக உட்கட்சி அரசியலை விவரமாக அறிய உதவுகிறது.

பாஜக நினைத்தால் மட்டுமே இனி அதிமுகவை சேர்த்து வைக்க முடியும் இல்லை என்றால், நீதிக்கட்சி - காமராஜர் காங்கிரஸ் போல அதிமுகவும் கரைந்து போய்விடும் என அன்வர் ராஜா சொல்லியுள்ளார்.

ஆனால் இவரே,2019 ல் பாஜக எதிர்ப்பால் டிடிவி அதிக வாக்குகளை பெற்றார் என்றும்,2021 ல் பாஜக எதிர்ப்பால் சீமான் அதிக வாக்குகளை பெற்றதாகவும் உளறுகிறார்..இதுதான் பிரச்சனையே,பாஜக தங்களுக்கு சுமை என்று நினைக்க வைக்கும் சிறுபான்மைய அரசியல் பார்வைதான் அதிமுகவை சுழன்றடிக்க வைக்கிறது.

ஆனால் தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு வாக்குகளை காங்கிரஸ் கூட்டணியில் இருக்கும் கட்சிதான் அறுவடை செய்யும்..ஓபிஎஸ் - இபிஎஸ் அரசியல் இணைவை நரேந்திர மோடி ஏற்படுத்தினார் என்ற வெறுப்பில்தான் தீவிர மோடி எதிர்ப்பை திமுக கையிலெடுத்தது.தமிழகத்தை பொறுத்தவரை பாஜக எதிர்ப்பு வாக்குகளை திமுக மட்டுமே அறுவடை செய்தது இனியும் செய்யும்.

2019 ல் டிடிவி வாங்கிய வாக்குகளுக்கு காரணம், தமிழகம் மினி சட்டமன்ற தேர்தலை எதிர்கொண்டது, அதற்கு காரணமே டிடிவி அணிதான், ஆக அந்த தேர்தல் டிடிவியை மையப்படுத்தி இருந்தது.இந்த ஆட்சி நீடிக்க வேண்டுமா? கூடாதா? என்பதற்காக நடந்த தேர்தலாகவும் அது மாறியது. எனவே,அதிமுவிற்குள் வந்த பிளவிலிருந்து எழுந்த வாக்குகள் அவை.

2021 ல் சீமான் வாங்கிய வாக்குகள் திமுக எதிர்ப்பு வாக்குகள். அதிமுக பலமுனையில் வாக்குகளை இழக்கிறது. ஜாதி - மதம் - திராவிடம் - தமிழ் என்று பலதரப்பட்ட வாதத்தலையிடம் தனது வாக்குகளை தடுத்து நிறுத்த முடியாமல் சிதறவிடுகிறது.

திமுக எதிர்ப்பிற்கு இன்னொரு முகமாக விஜய்காந்த் வந்த போது செல்வி.ஜெயலலிதாவே தடுமாறிவிட்டார்.அப்படியிருக்க இன்று வலிமையான திமுக எதிர்ப்பை அண்ணாமலை செய்கிறார்.திராவிடத்துக்கு மாற்று தமிழ் தேசியம் என சீமான் களம் காண்கிறார்.இதற்கும் மேலே சமூக ரீதியாக அதிமுகவில் சகோதர பிளவை டிடிவி ஏற்படுத்துகிறார்.

ஆக ,இதை அதிமுக புரிந்துகொள்ளாமல் தானும் பாஜக எதிர்ப்பை செய்ய வேண்டும் என்று நினைத்தாலோ,அல்லது அதிமுகவை பலப்படுத்திக் கொடுத்துவிட்டு பாஜக ஒதுங்கிக் கொள்ள வேண்டும் என அன்வர்ராஜா போல அப்பாவித்தனமாக கருதினாலோ,நஷ்டம் பாஜகவிற்கு இல்லை என அழுத்தம் திருத்தமாக குறிப்பிட்டுள்ளார் சுந்தர் ராஜ சோழன்