நடிகை விஜயலட்சுமி சீமானின் ஆ.ராசா ஆதரவு கருத்திற்கு கொடுத்த பதிலடி பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது, திமுக துணை பொதுச்செயலாளராக இருப்பவர் ஆ.ராசா இவர் தொடர்ச்சியாக இந்து மதத்தை எதிர்ப்பதில் குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வருகிறார்.
இந்து பண்டிகைக்கு ஏன் திமுக வாழ்த்து சொல்வது இல்லை என சில மாதம் முன்பு பேசி இந்து மக்கள் மனதில் வேதனையை உண்டாக்கினார், அப்போதே ராசாவை திமுக தலைமை கண்டிக்காத நிலையில் தற்போது மீண்டும் இந்து மதத்தை கடுமையாக விமர்சனம் செய்ததோடு இந்துக்கள் என்றால் யார் என சர்ச்சையாக விளக்கம் கொடுக்க கடும் அதிர்ச்சி இந்துக்கள் மத்தியில் உண்டானது.
இதற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பை பதிவு செய்ய நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ராசாவின் கருத்திற்கு ஆதரவு தெரிவித்தார், என்னை உனது மனு ஸ்மிருதி தானே தலையில் இருந்து பிறந்தவன் காலில் இருந்து பிறந்தவன் யார் என விளக்கம் கொடுத்து இருக்கிறது அதை தான் ராசா சொன்னார் அதில் என்ன தவறு என சீமான் ராசாவிற்கு ஆதரவு தெரிவித்தார்.
இந்த சூழலில் நடிகை விஜயலட்சுமி சீமானின் ஆ. ராசா ஆதரவு கருத்திற்கு பதிலடி கொடுத்துள்ளார், இந்து மதத்தை யார் எப்படி பிறந்தார்கள் என பேசும் சீமான் முதலில் யோக்கியமா? ஒரு பெண்ணிடம் வாழ்ந்தேன் என்று கூட சொல்ல தைரியம் இல்லாத நீ இந்து மதத்தை பற்றி விமர்சனம் செய்ய என்ன யோக்கிதை இருக்கிறது என கடுமையாக கண்டித்து இருக்கிறார் விஜய லட்சுமி. சீமானை நான் எதிர்ப்பது எனக்கு ஏற்பட்ட தனிப்பட்ட காரணத்திற்காக மட்டும் இல்லை சமுதாயத்திற்கே சீமான் ஒரு கேடு எனவும் ஆவேசமாக பேசினார் விஜயலட்சுமி.
மொத்தத்தில் இனியும் சீமான் இந்து மதத்தை விமர்சனம் செய்பவர்களுக்கு ஆதரவு தெரிவித்தாலோ அல்லது சீமான் விமர்சனம் செய்தாலோ விஜய லட்சுமி சீமான் மீதான வினார்சனத்தை வைப்பது என்பது அவரது பேச்சின் மூலம் இரண்டில் ஒன்று நிச்சயமாக தெரிகிறது